செய்திகள் :

சென்னை: பெண் டான்ஸ் மாஸ்டருக்கு பாலியல் தொல்லை - பதிவு நம்பரால் சிக்கிய இளைஞர்

post image

சென்னையைச் சேர்ந்த கிளாசிக்கல் டான்ஸ் மாஸ்டரான இளம்பெண் ஒருவர் 21-ம் தேதி, அடையாறு சாஸ்திரி நகர் வழியாக பைக்கில் சென்றிருக்கிறார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், சத்தம் போட்டிருக்கிறார். உடனே பாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞர், தன்னுடைய பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றிருக்கிறார். இந்தச் சம்பவத்தால் மனவேதனையடைந்த இளம்பெண், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணையை தொடங்கினர்.

கணேஷ்

சம்பவம் நடந்த இடதுக்குச் சென்ற போலீஸார், அங்குள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து இளம்பெண்ணிடமும் விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி கேமராவில் பதிவான இளைஞரின் பைக் நம்பரை வைத்து அவர் யார் என்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் கணேஷ், (21), திருவான்மியூரைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இதையடுத்து கணேஷை கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர். அதோடு குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய பைக்கையும் கணேஷிடமிருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர்.

"வெளிநாட்டுப் பாணியில் காதலைச் சொல்கிறேன்" - காதலனைக் கட்டிவைத்து எரித்து கொன்ற பெண்; என்ன நடந்தது?

பெங்களூருவின் தெற்கு பகுதியில் உள்ள அஞ்சனாபுரா பகுதியில் வசித்து வந்தவர் பிரேர்னா (27). இவர் அங்குள்ள மொபைல் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். அதே கடையில் வேலை செய்து வந்த கிரண் என்பவரை பிரேர்னா காதலித... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: திருமணத்திற்கு மறுத்த தாய்; 11 வயது மகனைக் கொன்று டிரம்மில் மறைத்த நபர் கைது

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஆஷா. இவரது கணவர் நாசிக்கில் வேலை செய்து வந்தார். ஆஷா வீட்டு வேலை செய்து வந்தார். ஆஷாவைக் கடந்த சில ஆண்டுகளாக அதே ஊரைச் சேர்ந்த மதுரா(45) என்பவர் ... மேலும் பார்க்க

விருதுநகர்: தேர்தல் கால ஆர்டர்; விதிமீறல், அதிக பணிச்சுமை! பட்டாசு ஆலை வெடி விபத்தில் நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், வச்சக்காரப்பட்டி அருகிலுள்ள கட்டனார்பட்டி கிராமத்தில் முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற தனியார் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. கடந்த 19-ம்... மேலும் பார்க்க

காதலை கைவிட மறுப்பு: 16 வயது மகளை கொலை செய்து முகத்தில் ஆசிட் ஊற்றி அடையாளம் தெரியாமல் செய்த தந்தை

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் விஜய் செளபே. இவருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். 10வது வகுப்பு படித்து வரும் அந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இது விஜய்-க்கு தெரிய வந்தது. என... மேலும் பார்க்க

காதல் மனைவிமீது சந்தேகம், வீடு முழுக்க கேமரா; இரண்டு மகள்களைக் கொன்ற தந்தை

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தவர் சசி ரஞ்சன் மிஸ்ரா (48). இவர்களுக்கு 11 வயதில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை சகோதரிகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். பீகாரை... மேலும் பார்க்க

Vinay Kulkarni: பாஜக பிரமுகர் கொலை வழக்கு; காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னிக்கு ஆயுள் தண்டனை!

கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாஜக பிரமுகர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில், தார்வாடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னி உள்ளிட்ட 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு... மேலும் பார்க்க