செய்திகள் :

சென்னை: வியாபாரியிடம் பைக்கை திருடிய போலி போலீஸ் - சிக்கியது எப்படி?

post image

சென்னை, கோயம்பேடு, பள்ளிக்கூட தெருவில் வசித்து வருபவர் சங்கர் (53). இவர், கோயம்பேடு, 100அடி சாலையில் டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். 31.07.2026-ம் தேதி மாலை, கோயம்பேடு மார்க்கெட் செல்ல சங்கர், தன்னுடைய பைக்கில் சென்றார். அவர், கோயம்பேடு, 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒருவர் அவரை வழிமறித்தார். பின்னர் சங்கரிடம், தன்னை போக்குவரத்து போலீஸ் எனக் கூறிய அந்த நபர், பைக்கின் சாவியை முதலில் எடுத்திருக்கிறார். பின்னர் பைக்கின் ஆவணங்கள், லைசென்ஸ் உள்ளிட்டவற்றை சங்கரிடம் அந்த நபர் கேட்டிருக்கிறார். ஆனால் சங்கரிடம் சில ஆவணங்கள் இல்லை. அதனால் என்ன செய்வது எனத் தெரியமல் சங்கர் நிற்க, நீ மது அருந்தியிருக்கியா என அந்த நபர், அடுத்த கேள்வியை கேட்டிருக்கிறார். இதனால் சங்கர், போலீஸிடம் வசமாக சிக்கிக் கொண்டோம் என கருதி அமைதியாக நின்று கொண்டிருந்தார்.

பைக்

இதையடுத்து சங்கரின் பைக்கை பறிமுதல் செய்வதாகக் கூறியவர், சங்கரையும் பைக்கில் ஏற்றிக் கொண்டு கோயம்பேடு காவல் நிலையத்துக்கு செல்வதாக கூறியிருக்கிறார். நடுவழியில் சங்கரை கீழே இறக்கி விட்ட அந்த நபர், காவல் நிலையத்துக்கு வந்து ஆவணங்களை காட்டிவிட்டு பைக்கை எடுத்துவிட்டு செல் எனக் கூறி விட்டு சென்றுவிட்டார். அதன்பிறகு சங்கர், கோயம்பேடு போக்குவரத்து காவல் நிலையத்துக்கு சென்று விசாரித்திருக்கிறார். அப்போது அங்கிருந்த போலீஸார், நாங்கள் யாரும் உங்களின் பைக்கை பறிமுதல் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்கள். இதையடுத்து சங்கர், கோயம்பேடு காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் சங்கரிடம் போலீஸ் எனக் கூறி பைக்கை பறிமுதல் செய்த நபர், ஆவடி கொள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (42) எனத் தெரியவந்தது. இதையடுத்து ரமேஷை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த சங்கரின் பைக்கையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட ரமேஷ், கோயம்பேடு பகுதியில் உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் டோக்கன் போடும் வேலை செய்து வருவது தெரியவந்தது. அவர் போலீஸ் எனக் கூறி வேறு ஏதாவது குற்றச் செயலில் ஈடுபட்டாரா என்றும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

திருத்தணி: வீல்சேருடன் அம்மாவை ரயிலில் தள்ளி கொலை செய்த மகன் - அதிர்ச்சி பின்னணி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவலங்காடு ஒன்றியம் மணவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மாவதி (71). இவரின் கணவர் பத்தாண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். அவர், மத்திய அரசு பணியிலிருந்து ஓய்வு... மேலும் பார்க்க

நாகை: வீட்டுக்கு தெரியாமல் தோழிக்கு நகை கொடுத்து உதவி; மன உளைச்சலில் விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவி!

நாகை மாவட்டத்தில் வீட்டுக்கு தெரியாமல் நகை கொடுத்து உதவ முயன்று சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நாகப்பட்டினம் அந்தணப்பேட்டை புடவை கடை தெருவைச் சேர்ந்தவரின் மகள் ச... மேலும் பார்க்க

ரூ.77 லட்சம் தருகிறேன்: தமிழக முதல்வர் விஜய்யின் ஏ.ஐ வீடியோவை பயன்படுத்தி பெண்ணிடம் 12 லட்சம் மோசடி

ஏழைகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் பேசவது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. அந்த வீடியோவை மும்பை வசாய் பகுதியை சேர்ந்த வத்சலா(66) என்ற பெண் பார்த்து விஜ... மேலும் பார்க்க

`நீ எனக்குக் கிடைக்கலைனா, உன் புருஷனைக் கொன்னுடுவேன்’- குடியாத்தம் மோசடிப் பேர்வழியின் கைது பின்னணி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள பெரும்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏ.டி.கே தினேஷ் என்கிற தினேஷ்குமார். பத்திரிகை ஒன்றில் அந்தப் பகுதி நிருபராக சுற்றிவந்த தினேஷ்குமார் மீது ஏற்கெனவே மிரட்டல், பண... மேலும் பார்க்க

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கிய நீதிமன்றம்

தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22.05.2018 அன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதை அடுத்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட... மேலும் பார்க்க

ஆபரேஷன் தண்டர்: ஓணத்துக்கு டிரஸ் எடுக்க போனோம்! - தாயும் உடந்தை; குடும்பத்துடன் போதைபொருள் கடத்தல்!

கேரளாவில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க 'ஆபரேஷன் தண்டர்' என்ற பெயரில் கலால் அமலாக்கம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், பெங்களூருவிலிருந... மேலும் பார்க்க