செய்திகள் :

Delimitation: "தமிழ்நாட்டின் ’எட்டப்பர்கள்’ என ராகுல் கூறியது இவரைத்தானா?"- விஜய்யை சாடிய திமுக

post image

சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறை நடவடிகைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் விஜய் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற 'தென் மாநில முதல்வர்கள்' மாநாட்டில் தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று உறுதியாக பேசாமல் 'தொகுதி மறுவரையறையால் எந்த ஒரு மாநிலமும் பாதிக்கப்படக்கூடாது' என்று வலியுறுத்தி பேசியிருக்கிறார்.

முதல்வரின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில் இதுதொடர்பாக முதல்வர் விஜய்யை திமுக ஐடி விங் விமர்சித்து பதிவிட்டிருக்கிறது.

Vijay - Amit Shah
Vijay - Amit Shah

திமுக ஐடி விங் வெளியிட்டிருக்கும் பதிவில், " ஒரே வாரத்தில் தொகுதி மறுவரையரை விவகாரத்தில் பல்டி அடித்திருக்கிறார் முதலமைச்சர் விஜய்!

தொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் ’எட்டப்பர்கள்’ என ராகுல்காந்தி கூறியது இவரைத்தானா?

கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தவெகவின் இந்த இரட்டை வேட நாடகத்தை கேள்வி கேட்பார்களா? இல்லை இதற்கும் முட்டுக்கொடுப்பார்களா?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தமிழகம் வந்த ராகுல் காந்தி, "பாஜக-வின் தொகுதி மறுவரையறை மசோதாவை யார் ஆதரித்தாலும் தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்கிறவர்கள்தான். தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்குத் துரோகம் செய்கிறவர்கள்தான்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

தமிழ்நாட்டு மக்கள் மீதும் தமிழ்நாட்டின் எதிர்காலம் மீதும் தாக்குதல் நடத்த யார் அனுமதித்தாலும் அவர்கள் நவீன காலத்தின் எட்டப்பர்கள். 21-ம் நூற்றாண்டின் எட்டப்பர்கள்தான்" என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுதி மறுவரையறை விவகாரம்: `12 நாட்களில் முடிவை மாற்றிய முதல்வர் விஜய்?' - காரணம் என்ன?

தென் மண்டல நிர்வாகக்குழு கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலைமையில் கோவளத்தில் நடந்திருந்தது. தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.தென் மண்டல நிர்வாகக... மேலும் பார்க்க

'பண்டிகை சீசனுக்காக!' சர்க்கரை இருப்புக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு - அடுத்து இறக்குமதியா?

சர்க்கரையைச் சேமித்து வைக்கப் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மத்திய அரசு.மத்திய அரசு அறிவித்துள்ள அறிவிப்பு - “உற்பத்தி, நுகர்வு அல்லது பயன்பாட்டிற்காக மாதத்திற்கு 10 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான ... மேலும் பார்க்க

`பேச்சுவார்த்தைக்கு விருப்பமில்லை!’ - அடிதடி வழக்கில் அமைச்சர் மரியவில்சனின் சமரச முயற்சி தோல்வி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற மரியவில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கிறார். இவரது உடன்பிறந்த தம்பியான ... மேலும் பார்க்க

"அம்மா, உங்களையும் அப்பாவையும் ஒன்றாக பார்த்து 35 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.!"- ராகுல் உருக்கம்

இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கைப் பயணத்தை விவரித்து உருவாகியுள்ள சுயசரிதைப் புத்தகம் 'Belonging: A Journey of Love'. இந்தப் புத்தகம் நவம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. ... மேலும் பார்க்க

Economic D-Day: பில்லியன் டாலர் ஆயுதங்களால் முடியாததை தடைகளால் செய்ய முடியுமா? ட்ரம்பின் திட்டம்!

பொருளாதார D-Day - ஈரானுக்கு எதிராக அமெரிக்க அதிபர் எடுத்திருக்கும் புதிய அஸ்திரம் இது. கடைசி அஸ்திரமாகக் கூட இருக்கலாம்.நேற்று (அமெரிக்க நேரப்படி) ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில், “ஈரானிய ... மேலும் பார்க்க

சபாநாயகர் விவகாரத்தில் பாஜகவுடன் உரசல்? - தென் மண்டல முதல்வர்கள் மாநாட்டை புறக்கணித்த ரங்கசாமி!

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென்மண்டல முதல்வர்கள் மாநாடு நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டுக்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த மாநாடு, இந்த ஆண்டு நடத்தப்படுகிறது.... மேலும் பார்க்க