செய்திகள் :

``சேகர் பாபுவை சந்தித்துவிட்டுதான் செங்கோட்டையன் தவெக-வில் சேர்ந்தார்'' - பாஜக நயினார் நகேந்திரன்

post image

அதிமுகவில் 50 ஆண்டுகளாக இருந்த மூத்த தலைவர் செங்கோட்டையன், கடந்த வியாழக்கிழமை (நவ. 27) அன்று பனையூரில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.

அன்றைய செய்தியாளர் சந்திப்பில், "தமிழ்நாடு அரசியலில் மாற்றம் வேண்டும், தூய்மையான அரசியல் வேண்டும்" என்பதற்காக தவெகவில் இணைந்ததாகக் கூறியிருந்தார் செங்கோட்டையன்.

பாஜகவின் வழிகாட்டுதலில் தவெகவில் இணைந்தார் என திமுக கூட்டணி கட்சிகளும், திமுக வழிகாட்டுதலில் தவெகவில் இணைந்தார் என்று பாஜக கூட்டணியினரும் மாறி மாறி பேசி வருகின்றனர்.

தவெகவில் இணைந்த செங்கோட்டையன்
செங்கோட்டையன்

செய்தியாளர் சந்திப்பில் இதைக் குறிப்பிட்டு பேசியிருந்த செங்கோட்டையன், "இது என் முடிவு. இதற்குப் பின்னால் யாருமில்லை. தவெகவில் இணைவதற்கு முன் சேகர் பாபுவையோ அல்லது பாஜகவைச் சார்ந்த வேறு யவரையும் நான் சந்திக்கவில்லை. என்னுடன் எந்தக் கட்சியினரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

நான் யாருடனும் சந்தித்தது தொடர்பான புகைப்படம் அல்லது வேறு எதாவது ஆதாரங்கள் இருந்தால் காட்டுங்கள்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து பேசியிருக்கும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், "பாஜக திட்டமிட்டு அண்ணன் செங்கோட்டையனை தவெகவிற்கு அனுப்பியதாகச் சொல்கிறார்கள். அது முற்றிலும் தவறானது.

செங்கோட்டையன் திமுக அமைச்சர் சேகர் பாபுவை சந்தித்துவிட்டதன் பின்னர் தவெகவில் இணைந்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி சேகர் பாபு செங்கோட்டையனை சந்தித்திருக்கிறார்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

அண்ணன் செங்கோட்டையன் மிகப்பெரிய தலைவர். அதில் மாற்றுக் கருத்தில்லை. அவரை இதுவரை மதித்தோம், நாளையும் மதிப்போம். ஆனால், யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால்தான் மதிப்பு.

என்னைப் பொறுத்தவரை, செங்கோட்டையன் எடுத்தது தவறான முடிவு. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து" என்று பேசியிருக்கிறார் நயினார்.

``RSS அமைப்பு தேர்தல் ஆணையத்தையும் கைப்பற்றிவிட்டது'' - ராகுல் காந்தி அடுக்கும் குற்றச்சாட்டுகள்

நாடாளுமன்ற லோக்சபாவில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பேசியிருக்கும் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, SIR குறித்த விவாதத்தை தொடங்கி வைத்து அந்தப் பணிகளை உட... மேலும் பார்க்க

விதை மசோதா... இந்திய விவசாயிகள் அடமானத்தில்... பன்னாட்டு நிறுவனங்கள் ரத்தின கம்பளத்தில்!

அனைவருக்கும் வணக்கம்...நடப்பு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், ‘விதை மசோதா- 2025’ தாக்கல் செய்யப்பட உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.‘போலி மற்றும் தரமற்ற விதைகளை விற்பனை செய்தால் அபராதம், தவற... மேலும் பார்க்க

`சுனாமியால பாதிக்கப்பட்டு 21 வருஷம் ஆச்சு; இன்னும் வீடு கிடைக்கல.!’ - தீராத வேதனையில் மீனவ மக்கள்

சென்னை கார்கில் நகர் குடியிருப்புப் பகுதியில் சுனாமியில் வீடுகளை இழந்த 158 குடும்பங்களுக்கு சுமார் 21 ஆண்டுகள் கடந்தும் வீடுகள் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. உலக வங்கி நகர்புற வாழ்விட மேம்பாட... மேலும் பார்க்க

கொளத்தூர்: "50 வருஷமா வாழும் வீட்டை இடிக்கப்போறோம்னு சொல்றாங்க" பாரத் ராஜீவ்காந்தி நகர் மக்கள்

கொளத்தூரில் அமைந்திருக்கும் பாரத் ராஜீவ் காந்தி நகர் பகுதி மக்களின் வீடுகளை இடித்து, பொதுமக்களை அப்புறப்படுத்த தமிழக அரசு ஆயத்தமாகவுள்ளதாக குமுறுகிறார்கள் குடியிருப்புவாசிகள்!தமிழக முதலமைச்சர் மு.க. ஸ... மேலும் பார்க்க

"இது என் மீது ஜோடிக்கப்பட்ட வழக்கு" - தீர்ப்பு குறித்து நடிகர் திலீப் சொன்ன விஷயம்

கேரளாவைச்சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, அதை வீடியோவாகவும் பதிவுசெய்த வழக்கு, 2017-ம் ஆண்டு முதல் இன்றுவரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தச் சம்... மேலும் பார்க்க

`258 பக்கம் ஆவணம், ரூ.1,020 கோடி ஊழல்?' - கே.என்.நேரு மீது FIR பதிவு செய்ய அமலாக்கத்துறை கடிதம்

திமுகமூத்த அமைச்சர் கே.என்.நேரு1,020 கோடி ரூபாய் வரை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஊழல் செய்திருப்பதாகக் குற்றம்சாட்டி வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத்துறை தமிழக தலைமை செயலாளர் மற... மேலும் பார்க்க