செய்திகள் :

சேலம்: பள்ளி வளாகத்தில் ஆசிரியை வெட்டிக்கொலை; நடந்தது என்ன?

post image

சேலம் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் ஆசிரியை ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஸ்ரீவித்யா என்பவர் ஆசிரியராகப் பணிப்புரிந்து வந்திருக்கிறார். குடும்ப பிரச்னை காரணமாக ஆசிரியை ஸ்ரீவித்யாவை பள்ளி வளாகத்திற்குள் புகுந்து அவரின் கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்திருக்கிறார்.

பள்ளி வளாகத்தில் ஆசிரியை வெட்டிக்கொலை.
பள்ளி வளாகத்தில் ஆசிரியை வெட்டிக்கொலை.

இதனையடுத்து விஜயமுருகன் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஸ்ரீவித்யாவை பள்ளி ஊழியர்கள், ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். இருப்பினும் ஸ்ரீவித்யா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அங்கிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியையை வெட்டிக்கொன்ற விஜயமுருகனை வலைவீசித் தேடி வருகிறார்கள்.

திருவள்ளூர்: திருமண ஏற்பாடு; நர்சிங் மாணவி எடுத்த விபரீத முடிவு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு தாலுகாவைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரின் மகள் சிரிஷா (19). இவர் திருப்பதியில் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். சில வாரங்களுக்கு முன்பு படிப்பை பாத... மேலும் பார்க்க

மும்பை: தமிழ் மூதாட்டியிடம் டிஜிட்டல் மோசடி; ரூ.33 லட்சம் பறித்த குஜராத் கிரிக்கெட் வீரர் கைது

மும்பை, பெங்களூரு போன்ற மெட்ரோ நகரங்களில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் பெண்களை டிஜிட்டல் முறையில் கைது பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. வங்கிகளில் அதிக பணம் இருப்பவர்களைக் குறி... மேலும் பார்க்க

சென்னை: தலைவலி சிகிச்சைக்குச் சென்ற பெண் மரணம் - முற்றுகையிடப்பட்ட மருத்துவமனை!

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பலராமன். இவரின் மனைவி பவானி. இவருக்கு திடீரென தலைவலி ஏற்பட்டது. உடனே அந்தப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பவானியை குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அங்கு... மேலும் பார்க்க

சென்னை: ரத்த வெள்ளத்தில் வீட்டுக்கு வந்த இளைஞர் - அதிர்ச்சியடைந்த குடும்பம்!

சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் (28). இவர் மீன் வெட்டும் வேலை செய்து வந்தார். இவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், நரேஷ்குமார், மது அருந்தி விட்... மேலும் பார்க்க

நெல்லை: வளர்ப்பு மகளை வன்கொடுமை செய்த தந்தை - சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான எலக்ட்ரிசீயன். கருத்து வேறுபட்டால் இவரின் முதல் மனைவி தனது இரண்டு குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னர், கடந்த 4 ஆண்டுகளுக்கு மு... மேலும் பார்க்க

"நீ கருப்பா இருக்க..." - காதலனுடன் சேர்ந்து கனவனைக் கொன்றுவிட்டு கதறி அழுத மனைவி; சிக்கியது எப்படி?

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் புரோஹித்(28) என்பவர் வீட்டில் கொலை செய்யப்பட்டுக்கிடந்தார். அவரது உடலில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. புரோஹித் மனைவி பிரியங்கா போலீஸ... மேலும் பார்க்க