செய்திகள் :

சேலம்: மங்கி குல்லா கும்பலின் வெள்ளி குடோன் ஸ்கெட்ச் - ₹15 கோடி மதிப்புள்ள 600 கிலோ வெள்ளி திருட்டு!

post image

சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி அருகில் உள்ள சின்னேரி வயக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். வெள்ளி வணிகம் செய்து வந்த இவர், வெள்ளிக் கட்டிகளில் இருந்து பொருள்களை உற்பத்தி செய்யும் வெள்ளி பட்டறையை சொந்தமாக நடத்தி வருகிறார். அந்தப் பட்டறைகளில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளி பொருள்கள்களை குடோனில் இருப்பு வைத்து வந்திருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக வணிகத்தை முடித்துவிட்டு பூட்டிச் சென்றிருக்கிறார். மங்கி கேப் எனப்படும் குரங்கு குல்லாக்களை அணிந்த கொள்ளை கும்பல் ஒன்று, காவலாளியைத் தாக்கி கட்டி வைத்து விட்டு சி.சி.டி.வி கேமிராக்களை சேதப்படுத்தி வெள்ளிப் பட்டறைக்குள் நுழைந்திருக்கிறது. பட்டறை, குடோன், கடை என ஒட்டுமொத்த வெள்ளியையும் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறது. 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 600 கிலோ வெள்ளியை அந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறது.

Rep image AI

இதன் பின்னணி குறித்து தெரிவித்த பள்ளப்பட்டி காவல்துறையினர், " வெள்ளி உற்பத்தியை நாள் கணக்கில் நோட்டம் விட்ட 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள். தீபாவளி விற்பனைக்காக குடோனில் அதிக அளவில் வெள்ளி இருப்பதை தெரிந்து கொண்டு ஸ்கெட்ச் போட்டிருக்கிறார்கள். வெள்ளிக்கட்டிகளை மொத்தமாக மூட்டைக்கட்டிச் சென்றிருக்கிறார்கள். காயமடைந்த காவலாளி சிகிச்சை பெற்று வருகிறார். சேலம் மாநகர காவல் ஆணையர் நேரில் வந்து ஆய்வு செய்தார். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது‌. 3 தனிப்படை அமைத்து தேடி வருகிறோம். விரைவில் பிடிபடுவார்கள்" என்றனர்.

தஞ்சாவூர்: ரூ.5 கோடி லஞ்ச விவகாரம் - சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

தஞ்சாவூர் நீலகிரி ஊராட்சியின் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் வள்ளியம்மை. இவரது கணவர் ஆர்.எம்.பாஸ்கரன் அதிமுக பிரமுகர். இவரது அண்ணன் மகன் சரவணன். பிரபல மூளை நரம்பியல் டாக்டர் இராமசாமி இவரது மனைவி ஜெயஸ்ர... மேலும் பார்க்க

தருமபுரி : களவுக்குப் போன கல்லூரி மாணவிகள் - உறவினர்களுடன் கைதான அதிர்ச்சி சம்பவம்!

ஆடம்பரமாக வாழ தவறான வழிகாட்டுதலால் திருடுவதை ஜாலியாக செய்து வந்த கல்லூரி மாணவிகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதுசமகாலத்தில் பல்வேறு து... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராம் காதல்; லிவிங் டுகெதர் வாழ்க்கை; இறுதியில் உயிரை மாய்த்துக்கொண்ட இளம் ஜோடி

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பாரதி நகரைச் சேர்ந்த 28 வயதான இளைஞன் பிரசாந்த். மளிகைக் கடையில் வேலை செய்யும் சாதாரண கூலித்தொழிலாளியான பிரசாந்த்துக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தி... மேலும் பார்க்க

கோவையில் மதுபான பாரில் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட முயற்சி - 5 பேர் கைது

கோவை செல்வபுரம் பைபாஸ் சாலையில் உள்ள எப்.எல்.2 பாரில் நேற்று மாலை 5 பேர் கொண்ட கும்பல் மது வாங்கிவிட்டு 500 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துள்ளனர். அந்த நோட்டுகளை பார்த்து சந்தேகமடைந்த பார் ஊழியர்கள், அவர்... மேலும் பார்க்க

`மோர் வயிற்றை கெடுக்கும், அதனால் பீர் குடிங்க!' - வீடியோ வெளியிட்ட ரெஸ்டோ பார்; சீல் வைத்த ஆட்சியர்

யூனியன் பிரதேசமான புதுச்சேரி, தன்னுடைய வருவாய்க்காக பெரிதும் நம்பியிருப்பது கலால் வரியைத்தான். அதன் காரணமாகவே மது மீதான மாநில அரசின் வரியைக் குறைத்து அண்டை மாநில சுற்றுலாப் பயணிகளைக் குறி வைக்கிறது. இ... மேலும் பார்க்க

சொந்த நகைகளை ஆண் நண்பரிடம் கொடுத்துவிட்டு திருட்டு நாடகமாடிய பெண்! - போலீஸாரிடம் சிக்கியது எப்படி?

நெல்லை டவுண், வ.உ.சிதம்பரனார் தெருவைச் சேர்ந்த பாத்திர வியாபாரி பாலகுருசாமி. இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. பாலகுருசாமி, கோயில் திருவிழாவில் பாத்திர வியாபாரம் செய்வதற்காக தென்காசி ... மேலும் பார்க்க