செய்திகள் :

’சொந்த கார் இல்லாத எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டுமே கார் வழங்கணும்’ – கார்த்தி சிதம்பரம்

post image

கோவை விமான நிலையத்தில் சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் அரசு திட்டங்கள் செயல்படுவதை நிறுத்த வேண்டும். ஆந்திர அரசு மூன்று மற்றும் நான்காவது குழந்தைகளுக்கு சலுகைகள் அறிவித்ததை கடுமையாக எதிர்க்கிறேன். தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கு சிறிய, ஆரோக்கியமான குடும்பங்களே தேவை. பணியாளர் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சம் இருந்தால், ஓய்வுபெறும் வயதை உயர்த்திக் கொள்ளலாம். 70 முதல் 80 வயது வரை மக்கள் ஆரோக்கியமாக இருக்கும் காலத்தில் 60 வயதில் ஓய்வுபெற வேண்டும் என்ற கட்டாயம் தேவையில்லை.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் மற்றும் படிகள் வழங்கும் விவகாரத்தில், சொந்தமாக வாகனம் வாங்க வசதியுள்ள எம்.எல்.ஏ-க்கள் இந்தச் சலுகையை சுயமாக விட்டுக் கொடுக்க வேண்டும். சொந்த வாகனம் இல்லாத, மக்கள் பணிகளுக்கு உண்மையிலேயே வாகனம் தேவைப்படும் எம்.எல்.ஏ-க்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை.

கர்நாடகாவின் மேகதாது அணை விவகாரத்தில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்திற்கு உரிய நீர்ப்பங்கீட்டைப் பெறுவதே முதன்மையான நோக்கம்.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு அணை உறுதியாக இருப்பது நிபுணர் குழுக்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் அச்சங்கள் பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும். அதே வேளையில் தமிழகத்தின் உரிமைகளும், அணையின் பராமரிப்பு மற்றும் மேலாண்மைக் கட்டுப்பாடும் எப்போதும் தமிழகத்திடமே நீடிக்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் மாநில முதல்வர்கள் பங்கேற்கும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கமான நடைமுறைதான். இதில் புதிதாகவோ வியப்படையவோ எதுவும் இல்லை” என்றார்.

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க