செய்திகள் :

தொகுதி மறுவரையறை : ``தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம் தான் காங்கிரஸின் நிலைபாடு.!" - ப.சிதம்பரம்

post image

கடந்த 2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க பா.ஜ.க அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த மார்ச் மாதம் தொகுதி மறுவரையறை மசோதாவை  பா.ஜ.க அரசு கொண்டு வந்த போது, நாடாளுமன்றத்தில் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில், பெரும்பான்மை ஆதரவு கிடைக்காததால் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் தன் பலத்தைப் பெருக்கிக்கொண்ட பா.ஜ.க அரசு தற்போது மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டுவர தீவிரமாக செயலாற்றி வருகிறது எனக் கூறப்படுகிறது.

அமித் ஷா - விஜய்
அமித் ஷா - விஜய்

இதுசம்பந்தமாக தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் தனி தீர்மானமும் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானத்தின் போது, ``தொகுதி எண்ணிக்கைகளை மாற்றாமல் அப்படியே 543 என்ற எண்ணிக்கையிலேயே தொடர வேண்டும். இதுவே தமிழகத்தின் ஒருமித்த குரல்" எனப் பேசியிருந்தார். தி.மு.க-வும் முதல்வர் விஜய்யின் தீர்மானத்தை ஆதரித்தது.

இதற்கிடையில், தென் மண்டல நிர்வாகக்குழு கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலைமையில் கோவளத்தில் நேற்று நடந்தது. தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், ``மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தியதற்காக தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படக் கூடாது. தொகுதி மறுவரையறையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவ சதவீதம் குறையாது என்பதற்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் கொடுக்கப்பட வேண்டும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

 ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

தொகுதி மறுவறையறை நடத்தக்கூடாது என தவெக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கும் விதமாக, 'தென்மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பது போன்ற கோரிக்கையை முதல்வர் விஜய் முன்வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தன் எக்ஸ் பக்கத்தில், ``மக்களவைத் தொகுதி மறுவரையைப் பொருத்துத் தமிழ்நாடு சட்டசபையின் தீர்மானமும் காங்கிரஸ் செயற்குழுவின் தீர்மானமும் ஒரே நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன. மக்களவையின் எண்ணிக்கை 543, தமிழ்நாட்டின் தொகுதிகள் 39 என்பவற்றில் எந்த மாற்றமும் கூடாது. இன்றைய எண்களை 25 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்பது தான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டை தமிழ்நாட்டின் ஆளும் கட்சியும் (தவெக) பிரதான எதிர்க்கட்சியும் (திமுக) ஆதரிக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

TN Assembly: "மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்"- எடப்பாடி பழனிசாமி | Live

"மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்"- எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 21) நிதிநிலை அறிக்கை, நீதி, சிறை, சட்டம், எரிசக்தி அறநிலையத்துறைக்கான மானிய கோரிக்கை மீதான விவாத... மேலும் பார்க்க

"சட்டமன்றத்தில் முதல் பேச்சை கன்னிப் பேச்சு என்று குறிப்பிடாதீர்கள்" - வானதி சீனிவாசனின் விளக்கம்

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் முதன்முதலாகப் பேசப்படும் பேச்சை ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடுவார்கள்.ஆனால், அப்படிக் குறிப்பிடாதீர்கள் என்றும், அதற்கான காரணத்தையும் விளக்குகிறார் பாஜக நிர்வாக... மேலும் பார்க்க

"நாங்கள் மேக்கேதாட்டுவில் அணைக் கட்டுவதே தமிழகத்திற்காக தான்" - கர்நாடகா முதல்வரின் 'ட்விஸ்ட்' பதில்

கர்நாடகா முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றதும் அவர் மிகவும் வேகம் காட்டிய ஒன்று - காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதாகும்.இதற்குத் தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியத... மேலும் பார்க்க

"அமெரிக்காவின் கடன் நெருக்கடியை திசை திருப்பவே எங்கள் மீது பொருளாதார D-Day" - ஈரானின் ரியாக்‌ஷன்

ஈரானுக்குப் பொருளாதார ரீதியாக நெருக்கடி கொடுக்க நேற்று (ஆகஸ்ட் 19), ஈரானுக்கு எதிராகப் பொருளாதார D-Day-வை அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.இது ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை ஆகும். “ஈரானு... மேலும் பார்க்க

Delimitation: "தமிழ்நாட்டின் ’எட்டப்பர்கள்’ என ராகுல் கூறியது இவரைத்தானா?"- விஜய்யை சாடிய திமுக

சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறை நடவடிகைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் விஜய் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற 'தென் மாநில முதல்வர்கள்' மாநாட்டில் தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று உறுதியாக பேசாம... மேலும் பார்க்க