செய்திகள் :

கொடநாடு வழக்கு: 8-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த சந்தோஷ் சாமி உயிரிழப்பு

post image

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமான டீ எஸ்டேட் மற்றும் பங்களா நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டத்திற்கு உட்பட்ட கொடநாடு பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2017- ம் ஆண்டு ஏப்ரல் 23 - ம் தேதி நள்ளிரவு நுழைந்த கும்பல் ஒன்று பங்களா காவலாளி ஓம் பகதூர் என்பவரை கொலை செய்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்தார். 2 - வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த சயான் மற்றொரு வாகன விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பினார்.

கொடநாடு எஸ்டேட்

ஆனால், அவரின் மனைவியும் மற்றும் பெண் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். கொடநாடு எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். தமிழ்நாடு அரசியல் களத்தில் அடிக்கடி புயலைக் கிப்பி வரும் இந்த வழக்கின் விசாரணை ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

மந்த கதியில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், இந்த வழக்கில் 8 - வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த சந்தோஷ் சாமி ( தற்போது 52 வயது) உடல்நலக்குறைவு காரணமாக கேரளாவில் நேற்று உயிரிழந்துள்ளார். சந்தோஷ் சாமி இறப்புக்கான காரணம் குறித்து முறையாக விசாரித்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுச் சென்று குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை பட்டியலை மாற்ற இருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

`கணவரை குணப்படுத்துவார் என நினைத்தேன்' - திருநங்கை வேடத்தில் வந்து விமான பணிப்பெண் பாலியல் வன்கொடுமை

மும்பை பவாய் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் விமான பணிப்பெண் ஒருவர் வசித்து வந்தார். அந்த கட்டடத்திற்கு திருநங்கை வேடத்தில் ஒருவர் வந்தார். அந்த நபர் விடுதியின் வெளியில் நின்று கொண்டிருந்த ... மேலும் பார்க்க

சென்னை: மாடியிலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம்; போலீஸ் தீவிர விசாரணை

சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் நவீன் (41). இவரின் மகள் க்ஷிபிஜா (13). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வக... மேலும் பார்க்க

மதுரை: ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக பள்ளி மாணவிகள் புகார் - 4 பேர் மீது வழக்குப் பதிவு

மதுரை மாவட்டம் விரகனூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 2025-26ல் பயின்ற +2 மாணவிகளுக்கு நேரடியாகவும், போன் மூலமாகவும் பாலியல் தொந்தரவு அளித்ததாக இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார் என்பவர் மீது மாணவ... மேலும் பார்க்க

சென்னை: வியாபாரியிடம் பைக்கை திருடிய போலி போலீஸ் - சிக்கியது எப்படி?

சென்னை, கோயம்பேடு, பள்ளிக்கூட தெருவில் வசித்து வருபவர் சங்கர் (53). இவர், கோயம்பேடு, 100அடி சாலையில் டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். 31.07.2026-ம் தேதி மாலை, கோயம்பேடு மார்க்கெட் செல்ல சங்கர், தன்ன... மேலும் பார்க்க

திருத்தணி: வீல்சேருடன் அம்மாவை ரயிலில் தள்ளி கொலை செய்த மகன் - அதிர்ச்சி பின்னணி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவலங்காடு ஒன்றியம் மணவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மாவதி (71). இவரின் கணவர் பத்தாண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். அவர், மத்திய அரசு பணியிலிருந்து ஓய்வு... மேலும் பார்க்க

நாகை: வீட்டுக்கு தெரியாமல் தோழிக்கு நகை கொடுத்து உதவி; மன உளைச்சலில் விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவி!

நாகை மாவட்டத்தில் வீட்டுக்கு தெரியாமல் நகை கொடுத்து உதவ முயன்று சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நாகப்பட்டினம் அந்தணப்பேட்டை புடவை கடை தெருவைச் சேர்ந்தவரின் மகள் ச... மேலும் பார்க்க