``4 முறைக்கு மேல் ATMஇல் பணம் எடுத்தால் GST வசூலிக்கப்படும்" - SBI வங்கி அறிவிப்...
விழுப்புரம் மாவட்டம் முன்னூர் ஆடவல்லீஸ்வரர் திருக்கோயிலில் காரிய ஸித்தி அருளும் விளக்குபூஜை!
எல்லாத் தலங்களுக்கும் எல்லோரும் சென்று வழிபட்டுவிட முடியாது. சில தலங்களுக்குச் செல்ல அத்தல இறைவனின் ஆசி வேண்டும். அழைப்பு வேண்டும். முன் ஜன்ம நற்பயன் வேண்டும்.
அப்படி இறைவனின் அருள் இருப்பவர்களுக்கே அந்தத் தலம் குறித்த தகவல்கள் தெரியவரும். தரிசிக்கும் வாய்ப்பும் வாய்க்கும். அப்படி ஒரு தலம்தான் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் முன்னூர் ஆடவல்லீஸ்வரர் திருக்கோயில்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் வழியில் சுமார் 19 கி.மீ தொலைவில் உள்ளது ஆலங்குப்பம். இந்த ஊரில் இருந்து கிளையாகப் பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ தொலைவு பயணித்தால், முன்னூர் கிராமத்தையும் ஸ்ரீஆடவல்லீஸ்வரர் ஆலயத்தையும் அடையலாம்.

பெரும்பாலும் சிவாலயங்களில் சிவபெருமான் கிழக்கு நோக்கியே காட்சி தருவார். தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கிக் காட்சி தருவார். ஆனால், முன்னூரில் ஈசன் கருவறையில் லிங்க ரூபனாக தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தென்முகம் நோக்கிய திருக்கோலம் என்பதால் இவர் இங்கே குருவாக அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
உண்மையாகவே வாழ்வில் மாற்றமும் ஏற்றமும் வேண்டிவரும் அடியவர்களுக்கு குருவாக இருந்து வழிகாட்டவே ஐயன் இங்கே இத்திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார் என்கிறது தலபுராணம்.
இத்தலத்தில் அம்பிகையில் திருநாமம் பிரகன்நாயகி. தரிக்கும்போதே நம் மனம் உருக்கிவிடும் பேரழகு. கருணை பொழியும் திருமுகம். கவலைப்போக்கிவிடுவேன் என்று கட்டியம் கூறும் அபயக்கரம் என அன்னையின் திருக்கோலம் நம் நெஞ்சை நிறைக்கும்.
முன்பதிவுக்கு: 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!
இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானின் சந்நிதி மிகவும் முக்கியமானது. வரலாற்றில் தன் அற்புதத்தைப் பதிந்து வைத்திருக்கும் சந்நிதி. தன்னை நம்பியவர்களைக் கைவிடாது காக்கும் இறைவன் இவர் என்பதை உணர்த்தும் நிகழ்வு ஒன்று உண்டு.
முற்காலத்தில் நல்லியக்கோடன் இந்தப் பகுதியை ஆட்சி செய்துவந்தான். சோழர்கள் இவன் மீது தாக்குதல் நடத்தப் பெரும் படையுடன் வந்தனர். நல்லியக்கோடன் சிறிய ப்டை உடையவன் என்றாலும் மாவீரன். கூடவே தேவ சேனாபதியான முருகப் பெருமானின் பெரும் பக்தன். அஞ்சுவானா...

முன்னூர் வந்தான். ஆடவல்லீஸ்வரர் கோயிலில் எழுந்தருளி இருக்கும் முருகப்பெருமானை மனம்நெகிழப் பிரார்த்தித்தான். அன்று இரவு அவன் கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘தாமரை மலர்களால் ஆயுதங்களை எடுத்து வந்து என் சந்நிதியில் வைத்து வழிபட்டு, தைரியமாகப் போர் செய்’ என்று அருளினார். மன்னனும் அப்படியே செய்தான். மறுநாள் போர்க்களத்துக்குச் சென்றான்.
போர்க்களத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு தாமரைகள் மலர, அந்த கணத்தில் ஒரு விந்தை நிகழ்ந்தது. மலர்ந்த தாமரைக்குள் இருந்த வண்டுகள் பறந்து சென்று எதிரிப் படையினரின் யானைகளின் காதுகளில் புகுந்தன.
வண்டின் குடைச்சல் தாங்காமல் மதம் பிடித்துவிட்ட யானைகள் பின்னால் திரும்பி தலைதெறிக்க ஓட, எதிரிப் படை வீரர்கள் தலைதெறிக்க ஓடினார்கள். நல்லியக்கோடன் எய்த அம்புகள் முருகப் பெருமானின் கை வேல்களாக மாறி எதிரிகளை அழித்தது.
முன்பதிவுக்கு: 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!
இந்த ஆலயத்தில்தான் நவகிரக குருவான பிரகஸ்பதியின் சாபம் தீர்ந்தது.
முன்னூற்று மங்கலம் என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட தலத்தில், அம்பிகையுடன் நடனம்புரிந்து ஆனந்த மயமாகத் திகழும் ஐயன் ஆடவல்லீஸ்வரரை தரிசித்து வழிபட்டு பிரகஸ்பதி இழந்த தன் தேஜஸை மீட்டெடுத்தார் என்கிறது தலபுராணம்.
இப்படி வெற்றியும் ஞானமும் செலவமும் அருளும் திருத்தலத்தில் சக்தி விகடனும் ஆடவல்லீஸ்வரர் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து வரும் ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை நாளில் விளக்குபூஜை நடத்த இருக்கிறார்கள். ஆவணி வெள்ளிக்கிழமைகள் அம்பாளை வழிபட மிகவும் உகந்த தினங்கள். அதிலும் விளக்கு வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. கேட்கும் வரம் தருவது.
காரணம், நூற்றுக்கணக்கானவர்கள் ஓரிடத்தில் திரண்டு விளக்கேற்றி அம்பிகையை வழிபடும்போது ஒவ்வொரு தீபத்திலும் அன்னை ஆவாஹனம் ஆவாள். அப்போது அம்பிகையின் நூற்றுக்கணக்கான தரிசனம் காண்பவர்க்கும் பூஜை செய்பவர்க்கும் கிடைக்கும். அப்படி ஒரே இடத்தில் நிகழும் சர்வ சக்தி சங்கமத்தில் நாம் வைக்கும் வேண்டுதல்கள் எல்லாம் பலிக்கும். காரிய ஸித்தி உண்டாகும். எனவே சக்தி விகடன் வாசகியர் திரளாய் வந்திருந்து முன்னூர் விளக்கு பூஜையில் கலந்துகொண்டு பயன்பெற அழைக்கிறோம்.

கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:
விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.
அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.
முன்பதிவுக்கு: 044-66802980/07




















