செய்திகள் :

``சோசலிச புரட்சிபோல, தமிழ்நாட்டில் 'விசில் புரட்சி' ஏற்படப் போகிறது!"- செங்கோட்டையன்

post image

திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வருகை தந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், ​செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, "தவெக தலைவர் விஜய் திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டுள்ளார். தமிழகத்தை ஆளப்போகும் தலைவராக அவர் உருவெடுத்துள்ளார். அவருடைய தொலைநோக்குச் சிந்தனையை மக்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தமிழகத்தை முன்னிறுத்தி அவர் முன்னெடுக்கும் இந்த அரசியல் பயணம் உலகளவில் கவனிக்கப்பட்டு வருகிறது.

​தமிழகம் ஏற்கனவே பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, இனப் புரட்சி மற்றும் சோசலிசப் புரட்சிகளைக் கண்டுள்ளது. தற்போது நான்காவதாகத் தவெக தலைவர் தளபதியின் 'விசில் புரட்சி' நடைபெறப் போகிறது.

வரும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று அரியணையில் அமரும்.

விஜய் செங்கோட்டையன்

யார் எத்தகைய கருத்துக்களைக் கூறினாலும் தவெக-வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. அது வெறும் 'அல்வா' பேச்சுகளாகவே முடியும்" என்றார்.

'கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடவில்லை' - தலைமை நீதிபதி தர்மாதிகாரி

நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பணியிடங்களை நிரப்ப ரூ. 634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக, அமலாக்கத்துறை அளித்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக... மேலும் பார்க்க

அமெரிக்கா - ஈரான் போர் எதிரொலி: OPEC அமைப்பிலிருந்து அதிரடியாக வெளியேறிய ஐக்கிய அரபு அமீரகம்!

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து (OPEC) வெளியேறுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்திருக்கிறது.அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான போர் உலகம் முழுவதும் எரிபொருள் வர்த்தகத்தில் பெரிய தா... மேலும் பார்க்க

`ஆட்சிக்கு வழிதேடும் நேரத்தில்.!' - மாநில தலைமையை மாற்றும் முடிவில் டெல்லி; ரேஸில் குதித்த கதர்கள்

கூட்டணி பஞ்சாயத்து.!தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்... மேலும் பார்க்க

கேரளாவை உலுக்கும் மாணவர் நிதின் ராஜ் தற்கொலை: கவனம் ஈர்க்கும் 'ஹர்த்தால்' போராட்டம்!

கண்ணூர் அஞ்சரக்கண்டியிலுள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு பி.டி.எஸ் (BDS) படித்து வந்த மாணவர் நிதின் ராஜ் (22). இவர் சாதிய ரீதியான துன்புறுத்தல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூற... மேலும் பார்க்க

'எதிரிக்கு எதிரி நண்பன்?' பாகிஸ்தான் பயணம் முடித்த கையோடு ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர் அராக்சி

கடந்த வார இறுதியில் நடக்கவிருந்த அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. பாகிஸ்தான் இஸ்லாமாபாத்திற்கு ஈரான் தரப்பு மட்டுமே சென்றிருந்தது. அமெரிக்கா கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்துவிட்டது. இ... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயிலில் கையில் வேலுடன் சுவாமி தரிசனம்; விஜய்யின் சர்ப்ரைஸ் விசிட்! | Photo Album

திருச்செந்தூர் கோயிலில் கையில் வேலுடன் சுவாமி தரிசனம் செய்த நடிகர் விஜய்! சர்ப்ரைஸ் விசிட் போட்டோஸ்!திருச்செந்தூரில் `சத்ரு சம்ஹார பூஜை' செய்த விஜய் - வெற்றிக் கணக்கு பலிக்குமா? மேலும் பார்க்க