செய்திகள் :

'சோதனையின்போது வீட்டிலிருந்து ரூ. 40 லட்சம் எடுத்தார்களா?' - எ.வ.வேலு சொல்வது என்ன?

post image

கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு, தமிழக நெடுஞ்சாலைத்துறையில் சாலைகளை அமைக்காமலேயே, அமைத்ததாகக் கூறி 3.2 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக ‘அறப்போர் இயக்கம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் என்பவர் கடந்த 2022ஆம் ஆண்டு புகார் கொடுத்திருந்தார்.

அதன் பேரில் சமீபத்தில் எ.வ. வேலு மற்றும் நெடுஞ்சாலை துறையைச் சேர்ந்த 9 அரசு அதிகாரிகள் மற்றும் ஒரு ஒப்பந்ததாரர் மீது குற்றவியல் சதி, மோசடி, அரசுப் பணம் கையாடல், போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தனர்.

எ.வ.வேலு
எ.வ.வேலு

நேற்று (ஜூன்.25) காலை முதல் சென்னை திருவண்ணாமலை, கரூர், திண்டுக்கல், கோவை மற்றும் திருப்பூர் என 20 இடங்களில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தொடர்பு உடைய அனைத்து இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில் முக்கியமான ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் வழக்கிற்கு தொடர்புள்ள நெடுஞ்சாலைதுறை ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.40 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எ.வ. வேலு, "தமிழ்நாடு சட்டப்பேரவையில் தி.மு.க மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் முன்வைக்க முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம். முதலமைச்சரிடம் சட்டப்பேரவையில் கேள்வி கேட்டதால் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

சோதனையால் நாங்கள் பயந்துவிடுவோம் என தவெக அரசு நினைக்கிறது. நாங்கள் மிசாவையே பார்த்த இயக்கம். எங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நீதிமன்றம்தான். நான் நிரபராதி என்பதைக் கட்டாயம் நிரூபிப்பேன்.

எ.வ.வேலு
எ.வ.வேலு

மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயமில்லை. நான் பரிசுத்தமானவன், எந்தத் தவறும் செய்யாதவன். 40 லட்சம் பறிமுதல் என்பது வடிகட்டிய பொய். என்னுடைய வீடு உள்ளிட்ட எங்கேயும் ஒரு பைசா பணம் கூட பறிமுதல் செய்யப்படவில்லை.

என் அலுவலகத்தில் உள்ள கணினிகளைப் பறிமுதல் செய்கிறோம் என்றார்கள். நாங்களே மனமுவந்து கையெழுத்துப்போட்டுக் கொடுத்தோம்" என்று கூறியிருக்கிறார்.

மயிலாடுதுறை: கிடப்பில் போடப்பட்ட நிதி ஒதுக்கீடும் எட்டு மாதங்கள் கழித்து தொடங்கிய பணியும்!

மயிலாடுதுறை மாவட்டம் மாதிரிவேளூர் ஊராட்சி பூங்குடி கிராமத்தில் 1952- இல் தொடக்கப்பள்ளி ஒன்றானது தொடங்கப்பட்டது.இப்பள்ளியானது 2008இல் மீணடும் மறுசீரமைக்கப்பட்டு, அப்பகுதி மாணக்கர்களின் தொடக்ககல்விக்கு ... மேலும் பார்க்க

மாவட்ட நிர்வாகம் டு காலநிலை மாற்றம்! முதல்வர் விஜய் தலைமையில் 2 நாள் IAS, IPS, IFS அதிகாரிகள் மாநாடு

முதலமைச்சர் விஜய் தலைமையில் மாநிலம் முழுவதிலுமிருந்து IAS, IPS மற்றும் IFS அதிகாரிகள் பங்கேற்கும் இரண்டு நாள் உயர்மட்ட மாநாடு, வரும் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற... மேலும் பார்க்க

அதிகாரமில்லா அலங்காரப் பதவிகளா? சி.வி.சண்முகம் தவிர்ப்பு! அதிமுக அதிருப்தி முகாமில் மீண்டும் ஆலோசனை

தவெக அரசுக்கு ஆதரவாகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தில் வாக்களித்த விவகாரத்தைத் தொடர்ந்து, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளிடம் இருந்து கட்சிப் பொறுப்புக... மேலும் பார்க்க

செவ்வந்தி இல்லம்: 15 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு பங்களாவை காலி செய்தார் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வந்த சென்னை பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள அரசு பங்களாவான ‘செவ்வந்தி இல்லம்’ வீட்டை காலி செய்து, ராயப்பேட்டையில் அதிமுக தலைமையக... மேலும் பார்க்க