ஏற்கெனவே 2 மனைவிகள், 5 குழந்தைகள் - பள்ளி மாணவியுடன் 3-வது திருமணத்துக்கு முயன்ற...
சோலார், ஈவி-யால் அரசுக்கு வருவாய் இழப்பா? மறைமுகமாக நடக்கும் மின்சாரப் போர்!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
பரவலாக இதை சக்தி பரிணாம மாற்றம் (Energy Transition) என்று சொல்லுவார்கள். ஏனென்றால், இந்த போர் நடப்பது யாருக்கும் தெரியக்கூடாது என்பதால்!
நான் ஒரு கணக்கை உங்களுக்கு சொல்லுகிறேன். நீங்களே முடிவு செய்யுங்கள், இது சத்தமில்லாமல் நடக்கும் யுத்தமா இல்லையா என்று!
மத்திய மாநில அரசுகளின் மொத்த வருமானத்தில் ஜி.எஸ்.டி.யின் பங்கு ஏறக்குறைய 45% என்று கொள்ளலாம். எரி பொருட்களான பெட்ரோல், டீசல் போன்றவை ஜி.எஸ்.டி.யில் சேராது!
ஆனால், அந்த எரி பொருட்களில் இருந்து மத்திய மாநில அரசுக்ளுக்கு வரும் வருமானம் ஏறக்குறைய 11%. நிலக்கரியில் இருந்து வரும் வருமானம் ஏறக்குறைய 2%.
அதே சமயத்தில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் இருந்து அரசுக்கு வரும் வருமானம் ஒரு பெரும் பூஜ்யம்! வாங்கும் கொஞ்ச நஞ்ச வரியையும் தொழில் மானியம் என்ற பெயரில் அரசு கொடுத்துவிடுகிறது!
அதிலும் தமிழ் நாடு மின் வாரியம் போன்ற அமைப்புகள் மின்சாரத்தை கடத்துவதிலும் அதை உற்பத்தி செய்வதிலும் பணம் சம்பாதிப்பவை. ஆனால் இன்றோ நாம் என்ன செய்கிறோம்?
ஒவ்வொரு வீட்டிலும் அலுவலகத்திலும் தொழிற்சாலையிலும் மின் உற்பத்திக்காக கூரையில் சூரிய சக்தியோ அல்லது எங்கோ தூரத்தில் ஒரு காற்றாலையோ போட்டு கொள்கிறார்கள். மின் வாரியத்திடம் வாங்கும் மின்சாரம் குறைந்து போகிறது. இதனால் அரசுக்கு மேலும் நஷ்டம் ஏற்படுகிறது!

ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்!
மின்சார கார்களை நான் ஊக்குவிக்க வேண்டும். ஆனால், அவை என் வருமானத்தை குறைக்கும்!
இயற்கை சக்தியை நான் வளர்க்க வேண்டும். ஆனால், அது என்னுடைய வருமானம் குறைய வழி செய்யும்.
அதாவது, அரசை இன்றைய சூழல் தற்கொலை செய்து கொள்ள சொல்லுகிறது! இதை எப்படி அரசு செய்யும்? எந்த நம்பிக்கையில் செய்யும்?
ஒன்று, இது ஒரு தொழில் நுட்ப மாறுதல்! கம்யூட்டரை போல இண்டெர்னெட்டைப் போல! நீங்கள் விரும்புகிறீர்களா இல்லையா என்ற கேள்விக்கு இடமே இல்லை! அது உங்களை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது.
இரண்டு, புது வாய்ப்புகள், புது பண வரவுகள் கண்டிப்பாக உருவாகும். அதனால் இது நமக்கு நட்டத்தை ஏற்படுத்தும் என்று அரசோ அல்லது மின் துறையோ பயப்பட வேண்டியதில்லை!
இந்த பயம் இருப்பதனால், சக்தி பரிணாம மாற்றத்தை மின் துறை முழுமையாக ஏற்று கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும். ஒரு பக்கம் நாங்கள் இந்த மாற்றத்திற்கு துணை நிற்கிறோம் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் அது தான் இன்றைய தேவை!
ஆனால் வெளியே தெரியாமல், அதற்கு எதிராக வேலை செய்ய வேண்டும்! இதை தான் இன்று மின் துறை செய்து கொண்டு இருக்கிறது!
தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் கடந்த மூன்று மாதங்களில் மட்டும், ஏறக்குறைய 40% வருமானத்தை இழந்து உள்ளன! இது பேருக்குத்தான் தனியார் பணம். உண்மையில் இது பொது மக்கள் பணம்! வங்கியில் இருந்து கடன் வாங்கிய பணம்!
சூரிய சக்தி மற்றும் காற்றாலை சக்திக்காக செய்யப்படும் ஒவ்வொரு செயலுக்கும் மின் துறை முட்டு கட்டைகளை போடுகிறது. ஏதாவது ஒரு வகையில் நஷ்டத்தை உண்டு பண்ணுகிறது!
மின் துறைக்கும் தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கும் இடையே நடக்கும் இந்த போரில் யார் வெல்லுவார்கள் என்பது தெளிவு தான். ஆனால் இந்த சண்டை தேவையா?
தொழில் முன்னேற்றத்தை சுவிகரித்து, அதை வளர்ச்சிக்காக பயன்படுத்தும் பொழுது மின் துறையும் முன்னேறும், நாடும் முன்னேறும்!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ


















