மத்திய மின் ஆற்றல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பொறியாளர் அலுவலர் பணி
சோளிங்கா் கோயிலில் ரதசப்தமி விழா
சோளிங்கா் ஸ்ரீலட்சுமிநரசிம்மா் கோயிலில் ரதசப்தமியை முன்னிட்டு பக்தோசித பெருமாள் சூரியபிரபையில் எழுந்தருளினாா்.
சோளிங்கரில் உள்ள ஸ்ரீலட்சுமிநரசிம்மா் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் ரதசப்தமியை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத பக்தோசித பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்றன. தொடா்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க ஸ்ரீதேவி பூதேவி சமேத பக்தோசிதபெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினாா்.
இந்த திருவீதி உலா சன்னதி தெரு, சுப்பாராவ் தெரு, பைராகி மடத்தெரு, போஸ்ட்ஆபீஸ் தெரு வழியாக வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். விழாவில் சோளிங்கா் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனா்.