செய்திகள் :

ஜன நாயகன்: "விஜய்க்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை" - நயினார் நாகேந்திரன்

post image

வருகின்ற 23 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரை வருகிறார். அப்போது அவர் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறலாம்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

இந்த நிலையில் பாண்டி கோயில் அருகே பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம் ஆகியோருடன் அதிமுக நிர்வாகிகள் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "பிரதமர் மோடி மதுரை வரும் அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்கும் மாபெரும் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதேநேரம், பிரதமர் மோடி பங்கேற்க உள்ள கூட்டம் இன்னும் உறுதியாகவில்லை.

கூட்டணியில் யார், யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா முடிவு செய்வார்கள். பாமக அன்புமணியோடு நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். விஜய்க்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என பாஜகவுக்கு எந்த அவசியமும் இல்லை.

அதிமுக நிர்வாகிகளுடன் நயினார்
அதிமுக நிர்வாகிகளுடன் நயினார்

பழைய பராசக்தி படத்திற்கும் கூட சென்சார் போர்டு பல தடைகள் கொடுத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி செய்வதையெல்லாம் நாங்கள் செய்ய மாட்டோம். திமுக அகற்றப்பட வேண்டும் என்பது மட்டுமே எங்களுடைய நோக்கம்.

கூட்டணி ஆட்சி என நாங்கள் சொல்லவில்லை. பாஜக 56 தொகுதிகள், 3 அமைச்சர்கள் கூட்டணியில் கேட்கிறார்கள் என்பது வதந்தி" என்றார்.

Birth Certificate பெற, EB Bill கட்ட WhatsApp-ல் ஒரு மெசேஜ் போதும்; தமிழக அரசின் புது அப்டேட் |How to

பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் பெற... EB பில் கட்ட வரிசையில் நிற்பது... அலையோ அலை என அலைந்து கொண்டிருப்பது எல்லாம் இனி வேண்டாம்.வாட்ஸ்ஆப்பில் சில கிளிக்குகளிலேயே விண்ணப்பித்துவிடலாம்.வாட்ஸ்ஆப... மேலும் பார்க்க

போதைப்பொருள்களின் பிடியில் தமிழ்நாடு, பாழாகும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்... விழிக்க வேண்டிய பெற்றோர்!

`தமிழகத்தில் போதைக் கலாசாரம் அதிகரித்துள்ளது. பிள்ளைகள் போதைப் பாதையில் செல்லாமல் இருக்க, பெற்றோர்கள் அவர்களை கண்காணிக்க வேண்டும்’ - சமீபத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்படி அறிவுறுத்தியிருப்பத... மேலும் பார்க்க

`சிங்கத்தின் வாயில் மாட்டிய விஜய்; சிபிஐ மூலம் பாஜக ஸ்கெட்ச்' - செல்வப்பெருந்தகை விமர்சனம்

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ராகுல் காந்தி நாளை நீலகிரி மாவட்டம் கூடலூர் வருகிறார்.செல்வப்பெருந்தகை பள்ளி விழா ... மேலும் பார்க்க