செய்திகள் :

ஜார்கண்ட் மாணவர்கள் போராட்டம்: 'பின்வாங்கிய அரசு' ; ஆனாலும் தொடரும் போராட்டம்!

post image

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (JPSC) மற்றும் பணியாளர் தேர்வு வாரியம் (JSSC CGL) நடத்திய தேர்வுகளில் பெரும் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, லக்னோவைச் சேர்ந்த 'டிடிபிஎல்' (TDPL) நிறுவனம் நடத்திய தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, ஒட்டுமொத்தமாக அரசுத் தேர்வு குளறுபடிகளைக் எதிர்த்து மாணவர்கள் கடந்த 24 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஹேமந்த் சோரன்
ஹேமந்த் சோரன்

அந்த அறிவிப்பில், ``ஜார்கண்ட் மாநிலத்தில் இதுவரை நடத்தப்பட்ட அரசுப் பணி நியமனத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. 2014-ம் ஆண்டு முதல் நடைபெற்ற அனைத்துத் தேர்வுகள் குறித்தும் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும், டிடிபிஎல் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த நிறுவனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட அனைத்துப் பணி நியமனங்களும் ரத்து செய்யப்படுகிறது. மேலும், தேர்வு முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமிதாப் கௌஷல் தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இருப்பினும், அரசின் இந்த அறிவிப்பை ஏற்க மறுத்துள்ள மாணவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை. இச்சம்பவம் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என மாணவர் தலைவர் ரவீந்திர பாஸ்வான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, உண்ணாவிரதப் போராட்டத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ராஞ்சி சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றொரு மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மஹதோ, விரைவில் தனது உண்ணாவிரத முடிவுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழர்கள் சுட்டுக்கொலை: "எங்கள் மாநிலத்தைப் பாதுகாக்க எங்களுக்குத் தெரியும்"- கர்நாடக முதல்வர் பதில்

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி கர்நாடகாவில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் கர்நாடகா வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.சுட்டுக்கொல்லப்பட்ட மூவரும் வேட்டையில் ஈடுபட்டிருந்... மேலும் பார்க்க

மேகமலை: "6000 குடும்பங்களின் வாழ்வாதாரம்; விரைந்து நடவடிக்கை வேண்டும்" - அரசுக்கு விசிக வலியுறுத்தல்

மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் பல தலைமுறைகளாக வாழும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என அகற்றுமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என விச... மேலும் பார்க்க

உயிரோடிருப்பவருக்கு போலி இறப்புச் சான்றிதழ்; 'சொத்தை அபகரிக்கவா?' - கலெக்டர் காலில் விழுந்த மூதாட்டி

மதுரை மாவட்டம் சிக்கந்தர் சாவடி முனியாண்டி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பிள்ளை இவரது கணவர் மூர்த்தி சில ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில் தனது இரண்டு மகன்கள் மருகளுடன் வசித்து வந்துள... மேலும் பார்க்க

``தவெக-வின் 100 நாள் ஆட்சியில் 200 கொலைகள், 400 பாலியல் குற்றங்கள்" - அப்பாவு காட்டம்

தவெக ஆட்சி அமைத்து 100 நாள்களை எட்டியிருக்கிறது. இது தொடர்பாக இந்த அரசு மேற்கொண்ட சாதனைகளாக நேற்று முதல்வர் விஜய்-யின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. சட்டமன்றத்திலும், இந... மேலும் பார்க்க

TN Assembly: 'உலக தமிழர்களுக்கான முதல் குரல் முதல்வர் விஜய்யுடையதுதான்!' - அமைச்சர் நிர்மல் குமார் | Live

சட்டமன்றத்தில் இன்றைய நிகழ்வின் போது பேசிய அமைச்சர் நிர்மல் குமார், 'உலக தமிழர்களுக்கான முதல் குரல் முதல்வர் விஜய்யுடையதுதான். கர்நாடக காவல்துறையால் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் கர்நாடகா அரசு ... மேலும் பார்க்க

மதுரை பூசாரி காவல் மரணம்: ``ஆட்சிக்கு வந்த பின் இதுவரை 6 காவல் மரணங்கள்..." - அன்புமணி கண்டனம்

மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயில் பூசாரி காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``மது... மேலும் பார்க்க