செய்திகள் :

ஜிஆர்டி ஜூவல்லர்ஸில் தங்கத்தில் திளைக்கும் ஆடி தங்கத் திருவிழா!

post image

இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படும் நகை நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், விரிவான மற்றும் உயர்தர நகைக் கலெக்ஷன்களின் சிறப்பான கைவினைத்திறனுக்காக மட்டுமல்லாமல், சமூக நலன் மற்றும் சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் மேற்கொண்டு வரும் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு (CSR) முயற்சிகளுக்காகவும் அறியப்படுகிறது.

தென்னிந்தியாவில் 67 மற்றும் சிங்கப்பூரில் 1 என மொத்தம் 68 ஷோரூம்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் நவரத்தின நகைகளின் விரிவான தொகுப்புகளை வாடிக்கையாளர்களின் பல்வேறு விருப்பங்களுக்கு ஏற்ப வழங்கி வருகிறது. திருவிழாக்கள், சமகால நிகழ்வுகள் மற்றும் கலாச்சார விழாக்களைக் கொண்டாடும் தனது பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இந்த ஆடி மாதத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஷோரூம்களில் "ஆடி தங்கத் திருவிழா" சிறப்பு சலுகைகளை ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் அறிவித்துள்ளது.

ஆடி தங்கத் திருவிழா சலுகையில், வாடிக்கையாளர்கள் தங்க நகைகள் வாங்கும்போது ஒரு கிராமுக்கு ரூ.200 குறைவு, பழைய தங்கத்தை மாற்றி புதிய தங்க நகைகள் வாங்கும்போது ஒரு கிராமுக்கு கூடுதலாக ரூ.150 மதிப்பும் பெறலாம். மேலும், வைரம் மற்றும் அன்-கட் வைர நகைகளின் மதிப்பில் 12.5% குறைவு வழங்கப்படுகிறது. வெள்ளிப் பொருட்களின் செதாரத்தில் (VA) 25% குறைவு, வெள்ளி நகைகளின் MRP-யில் 10% குறைவாகவும் வாடிக்கையாளர்கள் பெறலாம். இச்சலுகைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

இந்த ஆடி தங்கத் திருவிழா குறித்து ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். 'ஆனந்த்' அனந்தபத்மநாபன் அவர்கள் கூறுகையில், "ஆடி எப்போதுமே நகைகள் வாங்குவதற்கான முக்கியமான பருவமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸில் இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில் எங்கள் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறோம். இந்த ஆண்டும், எங்களின் பல்வேறு நகைக் கலெக்ஷன்களில் கவர்ச்சிகரமான பலன்களுடன் 'ஆடி தங்கத் திருவிழா' சலுகைகளை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த பிரத்தியேக சலுகைகள் மூலம், ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் பெயர் பெற்றுள்ள தரம், கைவினைத்திறன் மற்றும் நம்பிக்கையைத் தொடர்ந்து வழங்குவதோடு, எங்கள் வாடிக்கையாளர்களான உங்கள் ஷாப்பிங் அனுபவத்தை மேலும் பயனுள்ளதாக மாற்றுவோம் என்று நம்புகிறோம்." என்றார்.

இதனைத் தொடர்ந்து, ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், "குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும் இந்த ஆடி சலுகைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும், காலத்தால் அழியாத பாரம்பரிய வடிவமைப்புகள் மற்றும் நவீனகால டிசைன்களைக் கொண்ட உலகத் தரத்திலான எங்களின் ஜுவல்லரி கலெக்ஷன்களை பார்வையிடவும் வாடிக்கையாளர்களை அன்புடன் அழைக்கிறோம். வாடிக்கையாளர்களின் அன்பும் நம்பிக்கையும்தான் எங்களை 68 ஷோரூம்கள் வரை வளரச் செய்துள்ளது. அவர்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றியைத் தெரிவிக்கும் விதமாகவே இந்த சிறப்பு ஆடி சலுகைகளை வழங்குகிறோம். 'ஆடி தங்கத் திருவிழா' சலுகைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் ஷோரூம்களுக்கு வருகை தருமாறு வாடிக்கையாளர்களை அன்புடன் அழைக்கிறோம்." என்றார்.

ஹோல்சேல் ரேட்டில் தங்கமா? தமிழ்நாட்டு மக்களுக்கு ஆச்சரியம் தரும் ரீகல் ஜுவல்லர்ஸ்!

தென்னிந்தியாவின் முன்னணி நகை உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களில் ஒன்றான ரீகல் ஜுவல்லர்ஸ், சென்னை தியாகராய நகரில் தனது முதல் ஷோரூமைத் தொடங்குவதன் மூலம் தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக தனது ... மேலும் பார்க்க

`வீழ்ச்சியில் இருந்த கணவரை மீட்டேன்' - கட்டுமானத்துறையில் கலக்கும் மும்பை தமிழ்ப்பெண் ராமலம்மாள்

பெண்கள் இப்போது அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். ஆனால் கட்டுமானம் மற்றும் ஆட்டோமொபைல் போன்ற சில துறைகளில் மட்டும் பெண்கள் ஆதிக்கம் பெரிய அளவில் இல்லாமல் இருக்கிறது. தங்களாலும் சாதிக்க முடியும... மேலும் பார்க்க

இந்தியா - இங்கிலாந்து ஒப்பந்தம்; மகிழ்ச்சியில் கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் - என்ன காரணம்?

இந்தியா - இங்கிலாந்து பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 15 -ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதால், கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது... மேலும் பார்க்க

Prominence : "ஷாருக்கானிடம் ஐடியாவைச் சொன்னோம்; அவரும் கை கோர்த்தார்" - நிர்வாக இயக்குநர் நந்தகுமார்

சென்னை அண்ணா நகர், சாந்தி காலனி பகுதியில் Prominence Home works என்ற வீட்டு பணிகளுக்கான Interior design modular company-யின் சென்னையில் இரண்டாவது கிளை பிரமாண்டமாக திறக்கப்பட்டது.இதன் முதல் நிகழ்வாக pr... மேலும் பார்க்க

'அதானி வழக்கை ஓராண்டிற்கு முன்பே தள்ளுபடி செய்திருக்க வேண்டும்' - அமெரிக்க நீதித்துறை விளக்கம்

கடந்த மே மாதம், அமெரிக்காவில் அதானி மற்றும் அதானி குழுமத்தின் மீது தொடர்ந்திருந்த மொத்த வழக்கையும் தள்ளுபடி செய்ய கோரியது அமெரிக்க நீதித் துறை. இந்த வழக்குகள் முன்னாள் அமெரிக்க அதிபர் பைடன் காலத்தில் ... மேலும் பார்க்க

GST : `13 மாதங்களில் இல்லாத வளர்ச்சி' - ஜூன் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.95 லட்சம் கோடியைத் தாண்டியது!

இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல், கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜூன் மாதத்தில் மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஜூன் 2026-ல் மொத்த ஜிஎஸ்டி வருவாய், கடந்த ஆண்டுடன் ஒப... மேலும் பார்க்க