செய்திகள் :

" 'ஜெய் பீம்' படம் நிச்சயமாக எனக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது, ஆனால்.!"- லிஜோமோல் ஷேரிங்

post image

தமிழில் 'ஜெய் பீம்' திரைப்படத்தில் 'செங்கேணி' கதாபாத்திரம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்த லிஜோ மோல் நடிப்பில் 'உன்மதம்' என்ற மலையாள படம் வெளியாகி இருக்கிறது.

இந்தப் படம் தொடர்பாக 'Cinema Express' ஊடகத்திற்கு லிஜோ மோல் பேட்டி அளித்திருக்கிறார். அதில் பட வாய்ப்புகள் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்து பேசியிருக்கும் லிஜோ மோல், "ஒவ்வொரு திரைப்படமும் அதற்குப் பிறகு வரும் வாய்ப்புகளின் தன்மையை மாற்றுகிறது. ஒரு படத்தில் நம் நடிப்பைப் பார்த்துவிட்டு, அதே போன்ற கதாபாத்திரங்களோடு நம்மை அணுகுகிறார்கள்.

உன்மதம்
உன்மதம்

'ஜெய் பீம்' திரைப்படம் நிச்சயமாக எனக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. நான் எதிர்பார்த்ததை விட அதிகமான பாராட்டுகளை அது எனக்குப் பெற்றுத் தந்ததுடன், அதே போன்ற பல வாய்ப்புகளையும் கொண்டு வந்தது.

ஆனால், நான் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை மீண்டும் செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். 'பொன்மான்' திரைப்படத்தில் 'ஸ்டெஃபி கிராஃப்' கதாபாத்திரமும் பல பரிமாணங்களைக் கொண்டது தான், ஆனால் 'ஜெய் பீம்' கதாபாத்திரத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.

ஒவ்வொரு நடிகரும் தங்கள் புதிய கதாபாத்திரம் முந்தையதை விட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள் என்று நான் நினைக்கிறேன். 'உன்மதம்' படத்திலும் என்னுடைய கதாபாத்திரம் ஆழமான உணர்ச்சிப் பூர்வமான பரிமாணங்களைக் கொண்டிருக்கும்.

லிஜோமோல்
லிஜோமோல்

நான் கடைசியாக உண்மையிலேயே ஒரு ஜாலியான கதாபாத்திரத்தில் நடித்தது 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்திற்குப் பிறகு வந்த 'கட்டப்பனையில ரித்விக் ரோஷன்' படத்தில் தான்.

இப்போது யாராவது எனக்கு மீண்டும் 'சௌமியா' அல்லது 'ஸ்டெஃபி கிராஃப்' போன்ற கதாபாத்திரங்களைச் செய்யக் கொடுத்தால், நான் செய்ய மாட்டேன். ஜாலியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

"நீங்க மம்மூட்டி சாரா? என்னை ஃபாலோ செய்ங்க!" - நள்ளிரவில் 10 கி.மீ பைக்கில் வழிகாட்டிய தமிழக ரசிகர்!

தமிழ்நாட்டின் காரைக்குடியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு நள்ளிரவில் கேரளா திரும்பிக் கொண்டிருந்த மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி வழியறியாமல் தவித்த போது தமிழகத்தைச் சேர்ந்த பாண... மேலும் பார்க்க

"இதை அவர் 12 வருடங்களுக்கு முன்பு என்னிடம் சொன்னார்!" - நிவின் பாலி வீடியோவை பகிர்ந்த அனுபமா

நடிகை அனுபமா பரமேஸ்வரன் கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'இறுதியில் உங்கள் அமைதியைக் கண்டறிய, பயனற்ற முடிவுகளை நீங்கள் விட்டுவிட வேண்டும்' எனப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவு அவரின் காதல் மு... மேலும் பார்க்க

Mohanlal: "ஒரு தகப்பனின் மனதுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?" - மகளின் சினிமா அறிமுகம் பற்றி மோகன்லால்

நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால், இயக்குநர் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள 'துடக்கம்' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் வ... மேலும் பார்க்க

Keralam: ஸ்வேதா மேனன் வழங்கும் 'ஓண கிட்' வாங்க மறுக்கும் நடிகைகள்; 'அம்மா' அமைப்பில் தொடரும் விவாதம்

படப்பிடிப்பு தளங்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள சினிமா துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, மலையாள த... மேலும் பார்க்க

Pearle Maaney: 'மன்னிப்பு கேட்கிறேன்' ; சர்ச்சையினால் குறைந்த 3 லட்சம் ஃபாலோயர்ஸ் - பின்னணி என்ன?

தொகுப்பாளினி பேர்லே மானி, திரை நட்சத்திரங்களுடன் அவர் செய்யும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நேர்காணல்களுக்குப் பெயர் போனவர். கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளப் பக்கங்களில் அவர் விமர்சனத்திற்கு உள்ளாக... மேலும் பார்க்க

CJP: ``மாணவர்கள் செய்த தவறு என்ன? அமைதியான போராட்டத்தைக் கையாளும் முறை இதுவன்று" - டொவினோ கண்டனம்

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது.இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர... மேலும் பார்க்க