செய்திகள் :

டிட்வா: "அவர்கள் மீண்டெழுந்திட துணை நிற்போம்" - இலங்கை பாதிப்பு குறித்து ஸ்டாலின்

post image

வங்கக்கடலில் உருவான 'டிட்வா' புயல் இலங்கையைப் புரட்டி போட்டிருக்கிறது.

கனமழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக இதுவரை 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இலங்கையில் 'டிட்வா' புயல் பாதிப்பு
இலங்கையில் 'டிட்வா' புயல் பாதிப்பு;

நிலைமையை சமாளிக்க 'ஆபரேஷன் சாகர் பந்து' மூலம் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்திருக்கிறது.

இந்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிட தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாக ஸ்டாலின் தனது எக்ஸ் தளபக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " 'டிட்வா' புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்கத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.

இந்த இயற்கைச் சீற்றத்தால் உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கையில் 'டிட்வா' புயல் பாதிப்பு;

துயருறும் அந்த மக்களுக்கு உணவுப் பொருட்கள் - மருந்துப் பொருட்கள் என ஒன்றிய அரசு மூலம் உதவிக்கரம் நீட்டிட அதிகாரிகள் குழுவை அமைக்கிறோம்.

அவர்கள் மீண்டெழுந்திட துணை நிற்போம்" என்று பதிவிட்டிருக்கிறார்.

திரண்ட அதிமுக, அமமுக பிரபலங்கள், வாழ்த்திய சசிகலா; ஜெயலலிதா உதவியாளர் வீட்டுத் திருமணம்

மறைந்த அஇஅதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த ரவிராஜின் மகள் திருமணம் ஒரத்தநாடு அருகே நேற்று நடந்தது.மறைந்த ஜெ ஜெயலலிதா முதல்வராவதற்கு முன் அவரிடம் உதவியா... மேலும் பார்க்க

"அமித் ஷா, மோடி ஆகியோர் தமிழ்நாட்டிற்கு இனிமேல் படையெடுத்து தான் வர வேண்டும்!" - அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் புறநகர் மற்றும் நகரப் பகுதிகளுக்கு செல்ல ஏழு புதிய பேருந்து சேவைகளை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற... மேலும் பார்க்க

புதிய மேயர் யார்? - மும்பை உட்பட மகா., முழுவதுமுள்ள 29 மாநகராட்சிளுக்கு வரும் ஜன.,15ம் தேதி தேர்தல்

மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளின் பதவிக்காலம் கடந்த 2022ம் ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. உள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை... மேலும் பார்க்க