செய்திகள் :

'டிரான்சிஷன் ஃபேஸில் இருக்கிறோம்!' - தொடர் படுதோல்விக்கு கேப்டன் ஷ்ரேயாஸ் விளக்கம்

post image

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி படுதோல்வியுடன் இழந்துள்ளது. மூன்றாவது போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற நிலையில், அணியின் தொடர் சொதப்பல்களுக்குக் காரணம் என்ன என்பது குறித்து கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம் அளித்துள்ளார்.

போட்டிக்குப் பிறகு பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், தனது ஏமாற்றத்தை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார். "மீண்டும் ஒரு ஏமாற்றமான போட்டி. 158 ரன்கள் என்பது இந்தப் பிட்ச்சில் ஒருபோதும் போதுமான ஸ்கோர் இல்லை. இங்கிலாந்து எவ்வளவு வேகமாக அதை சேஸ் செய்தது என்பதைப் பார்த்தாலே புரியும். பந்துவீச வந்தபோது, பந்துவீச்சாளர்களிடம் ஒரே லென்த்தில் தொடர்ந்து பந்துவீசுமாறு கூறினேன். ஆனால், எங்கள் திட்டங்களைச் செயல்படுத்துவதில் நாங்கள் மீண்டும் ஒருமுறை தோற்றுவிட்டோம்," என்று கூறினார்.

தனிப்பட்ட ஆட்டத்தில் திருப்தி, ஆனால்...

இந்தப் போட்டியில் இந்திய அணியின் சார்பில் தனி ஒருவராகப் போராடிய ஷ்ரேயாஸ், ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் குவித்தார். தனது பேட்டிங் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தாலும், அணியின் தோல்வியால் அது அர்த்தமற்றதாகிவிட்டதாகக் குறிப்பிட்டார்.

"நிச்சயமாக எனது ஆட்டத்தில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அது அணியின் வெற்றிக்கு உதவவில்லை என்றால், அதற்கு மதிப்பில்லை. நான் எப்போது விளையாடினாலும், அணிக்காக சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும் என்றே நினைப்பேன். துரதிர்ஷ்டவசமாக, இன்று அது நடக்கவில்லை," என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

புதிய வீரர்களுடன் மாற்றத்தில் இருக்கிறோம்!

அணியின் தொடர் தோல்விகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, இந்திய அணி ஒரு முக்கியக் காலகட்டத்தில் இருப்பதாக ஷ்ரேயாஸ் குறிப்பிட்டார். "நாங்கள் ஒரு 'டிரான்சிஷன் ஃபேஸில்' (மாற்றத்திற்கான காலகட்டம்) இருக்கிறோம். இந்தச் சமயத்தில் தவறுகள் நடப்பது இயல்புதான். கள சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதன் முக்கியத்துவத்தை வீரர்கள் உணர வேண்டும். அணியில் விரைவாகக் கற்றுக்கொள்ளும் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்துகொள்வார்கள் என நம்புகிறேன்," என்று இளம் வீரர்களுக்கு ஆதரவாகப் பேசினார்.

முதலிடத்தைக் குறிவைக்கும் இங்கிலாந்து!

மறுபுறம், இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக், தொடரை வென்ற மகிழ்ச்சியில் இருந்தார். "இந்தியாவை வீழ்த்துவது எப்போதுமே மகிழ்ச்சியான ஒன்று. 3-0 எனத் தொடரை வென்றது அற்புதமாக உள்ளது. கள சூழலுக்கு ஏற்ப நாங்கள் எங்களை மாற்றிக்கொண்ட விதமும், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றமும்தான் எங்கள் வெற்றிக்கு முக்கியக் காரணம்," என்றார். மேலும், வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோஷ் டங் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சையும் அவர் பாராட்டினார்.

சவுத்தாம்ப்டனில் நடைபெறவுள்ள கடைசிப் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றால், டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி, நம்பர் 1 இடத்தைப் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்க்களத்திலிருந்து சர்வதேச கிரிக்கெட் வரை.! - உயிரிழந்த ஆப்கான் வீரர் ஷபூர் ஜத்ரானின் பயணம்

போர் பதற்றத்துக்கும் துப்பாக்கிச் சூட்டுக்கும் மத்தியில் வாழும் ஆப்கானிஸ்தானில் இருந்து உலக கிரிக்கெட்டில் அந்த நாட்டின் அடையாளத்தைப் பதித்த சிறந்த வீரர்களில் ஒருவர்தான் ஷபூர் ஜத்ரான். அரிய வகை நோயால்... மேலும் பார்க்க

"கேவலம்... இதைவிட மோசமாக சொல்ல வார்த்தையில்லை!" - படுதோல்வி குறித்து ஷ்ரேயாஸ் காட்டம்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இது டி20 வரலாற்றில் ரன்கள் அடிப்படையில் இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய தோல்வியாகும். இங்கில... மேலும் பார்க்க

கிரிக்கெட்: 'ஆஸ்திரேலியா' என்னும் அசுர சக்தி; இங்கிலாந்தை வீழ்த்தி 7-வது முறையாக சாம்பியன் பட்டம்!

கிரிக்கெட் உலகில் உலகக்கோப்பைகளைத் தன்வசப்படுத்தி, கோப்பைகளின் மீது தங்களது பெயர்களை நிரந்தரமாகப் பொறித்துக் கொள்வதில் ஆஸ்திரேலிய அணிக்கு நிகர் ஆஸ்திரேலியா மட்டுமே! அது ஆடவர் அணியாக இருந்தாலும் சரி, ம... மேலும் பார்க்க

IPL Trade : லேட் என்ட்ரி கொடுத்த சென்னை... பாண்ட்யா டிரேடிங்கில் திடீர் திருப்பம்?! | CSK

2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் படுதோல்விக்குப் பிறகு, அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அணியிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளார் என்கிற தகவல் கடந்த சில நாள்களாகவே பேசப்பட்டு வருகிற... மேலும் பார்க்க

Sooryavanshi: "என் கைகள் கட்டப்பட்டுள்ளன" - சூர்யவன்ஷிக்கு விளையாட வாய்ப்பு தராதது குறித்து ஸ்ரேயாஸ்

ஐபிஎல் 2026 தொடரில் 776 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்கள் மூலம் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கிறார்.அந்த வகையில் அயர்லாந்து அணிக்கு எ... மேலும் பார்க்க

Ben Stokes: தோல்விகள், சர்ச்சைகளை வென்ற ஃபீனிக்ஸ் பறவை அவன் - ஸ்டோக்ஸ் சாதனைகளும், சறுக்கல்களும்!

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்திருக்கிறார். அ... மேலும் பார்க்க