செய்திகள் :

Sooryavanshi: "என் கைகள் கட்டப்பட்டுள்ளன" - சூர்யவன்ஷிக்கு விளையாட வாய்ப்பு தராதது குறித்து ஸ்ரேயாஸ்

post image

ஐபிஎல் 2026 தொடரில் 776 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்கள் மூலம் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கிறார்.

அந்த வகையில் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சூர்யவன்ஷி பெஞ்சில் அமரவைக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் நடைபெறவுள்ள நிலையில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார்.

அப்போது அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூர்யவன்ஷியை பெஞ்சில் அமரவைக்கப்பட்டது குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேள்வி கேட்கபட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "என்னுடைய கைகள் கட்டப்பட்டுள்ளன. இது மிகவும் தனிப்பட்ட விஷயம். அணிக்குள் விவாதிக்கப்பட வேண்டிய ரகசியமான விஷயம் இது.

நாங்கள் எந்த வீரர்களைக் களத்திற்கு அனுப்புகிறோம் என்பதையோ, என்ன நடக்கப்போகிறது என்பதையோ எதிரணிக்கு வெளிப்படையாகச் சொல்ல முடியாது.

ஸ்ரேயாஸ் ஐயர்
ஸ்ரேயாஸ் ஐயர்

அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த வீரர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதும் முக்கியம்.

அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். தனி நபரின் செயல்பாட்டை மட்டுமே பார்க்க முடியாது. ஆனால் சூர்யவன்ஷி ஒரு திறமைசாலி.

அவருக்கு எப்போது இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்" என்று கூறியிருக்கிறார்.

Ben Stokes: தோல்விகள், சர்ச்சைகளை வென்ற ஃபீனிக்ஸ் பறவை அவன் - ஸ்டோக்ஸ் சாதனைகளும், சறுக்கல்களும்!

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்திருக்கிறார். அ... மேலும் பார்க்க

IND Vs IRE: உலக சாம்பியனை உலுக்கிய அயர்லாந்து... 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்த இந்தியா!

இருபது ஓவர் கிரிக்கெட் என்றால் இனி இந்திய அணி மட்டும்தான் என்று சொன்ன ரசிகர்களின் தலையில் எல்லாம் இப்போது துண்டைப் போட்டு அமர வைத்துள்ளது, அயர்லாந்து கிரிக்கெட் அணி."உலக சாம்பியனுக்கு வந்த நிலைமையா இத... மேலும் பார்க்க

தகர்ந்த மகளிர் உலகக்கோப்பை கனவு; வெளியேறிய இந்தியா... அரையிறுதிக்குள் நுழைந்த தென்னாப்பிரிக்கா!

மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்பை இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தத் தொடரில் 'டாப் ஃபோர்' இடத்திற்காகக் கடும் போட்டி நிலவி வந்தது. முதல் மூன்று இடங்களில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்... மேலும் பார்க்க

Ben Stokes: ஆல்-ரவுண்ட் நாயகன் - ஓய்வை அறிவித்தார் பென் ஸ்டோக்ஸ்!

உலக கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடந்து வரும் மூன்றாவது டெஸ... மேலும் பார்க்க

T20: `டிரஸ்ஸிங் ரூமுக்கு Not Allowed' - கிரிக்கெட் வீரர் சூர்யவன்ஷிக்கு தனிக் கட்டுப்பாடு! - காரணம்?

இளம் வயதிலேயே இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துப் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் களம் இறங்குவதன் மூலம் புதிய சாதனை படைக்க ... மேலும் பார்க்க

"அவன் அடிச்சா அண்டார்டிகாவே அதிரும்!" - 29 பந்துகளில் 94 ரன்கள்... ருத்ரதாண்டவம் ஆடிய சூர்யவன்ஷி!

"பொறுமையாக ஆடும் ஆட்டம் நமக்கு செட் ஆகாது போல, நமக்கு எப்போதுமே சிக்ஸர் மட்டும்தான்!" என்பதைப் போல தனது பழைய ஃபார்முக்கு திரும்பி, இலங்கை பந்து வீச்சாளர்களை பந்தாடினார், இந்திய அணியின் இளம் வீரர் வைபவ... மேலும் பார்க்க