செய்திகள் :

T20: `டிரஸ்ஸிங் ரூமுக்கு Not Allowed' - கிரிக்கெட் வீரர் சூர்யவன்ஷிக்கு தனிக் கட்டுப்பாடு! - காரணம்?

post image

இளம் வயதிலேயே இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துப் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் களம் இறங்குவதன் மூலம் புதிய சாதனை படைக்க உள்ளார். 15 வயதே ஆன இந்த இளம் பேட்ஸ்மேனின் சர்வதேச அறிமுகத்தைக் காண ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது.

அதேநேரம், இந்திய அணியின் தற்போதைய இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து சுற்றுப்பயணத்தின் போது, வைபவ் சூர்யவன்ஷி எப்போதும் இந்திய அணியின் பிரதான டிரெஸ்ஸிங் அறையில் இருக்க அனுமதிக்கப்பட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ICC மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் கடுமையான பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

அதாவது சர்வதேச கிரிக்கெட் விதிகளின்படி, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அல்லது இளம் வீரர்கள் மற்ற மூத்த வீரர்களுடன் பொதுவான உடைமாற்றும் அறையைப் பகிர்ந்துகொள்ளக் கூடாது. அவர்களுக்குத் தனி வசதிகள் செய்துகொடுக்கப்பட வேண்டும். இதன் காரணமாக, போட்டி நடைபெறும் ஒவ்வொரு மைதானத்திலும் வைபவ் சூர்யவன்ஷிக்கு என்று பிரத்யேகமாகத் தனி உடைமாற்றும் அறை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் ஒதுக்கப்பட உள்ளது.

'தி கார்டியன்' நாளிதழ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வைபவ் சூர்யவன்ஷி போட்டிகள் நடைபெறும் நேரங்களிலும், அணியின் டீம் மீட்டிங் போதும் மட்டுமே இந்திய அணியின் பிரதான உடைமாற்றும் அறைக்குள் இருக்க அனுமதிக்கப்படுவார். மற்ற நேரங்களில், குறிப்பாகப் போட்டிக்கு முன்பும் பின்பும் ஆடை மற்றும் காலணிகளை மாற்றிக்கொள்ளும் போது, அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட தனி அறையையே பயன்படுத்த வேண்டும்.

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில், ``இது ஐசிசி-யின் விதிகளுக்கு உட்பட்ட தொடர் என்பதால், அவர்களின் குழந்தைகள் பாதுகாப்பு நடைமுறைகள் இங்குப் பின்பற்றப்படுகின்றன. மேலும், இங்கிலாந்து வாரியத்தின் 'சேஃப் ஹேண்ட்ஸ்' கொள்கையும் இதில் அமல்படுத்தப்படும்.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

இந்திய அணியின் தொடர்பு அதிகாரியுடன் இதுகுறித்துத் தொடர்ந்து பேசி வருகிறோம். மைதானங்களில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளும் இந்த விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வார்கள்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது 15 வயதே ஆகும் வைபவ், அந்நிய நாட்டுச் சூழலுக்குப் பழகுவதற்காகத் தனது பெற்றோருடன் இந்தத் தொடருக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

"அவன் அடிச்சா அண்டார்டிகாவே அதிரும்!" - 29 பந்துகளில் 94 ரன்கள்... ருத்ரதாண்டவம் ஆடிய சூர்யவன்ஷி!

"பொறுமையாக ஆடும் ஆட்டம் நமக்கு செட் ஆகாது போல, நமக்கு எப்போதுமே சிக்ஸர் மட்டும்தான்!" என்பதைப் போல தனது பழைய ஃபார்முக்கு திரும்பி, இலங்கை பந்து வீச்சாளர்களை பந்தாடினார், இந்திய அணியின் இளம் வீரர் வைபவ... மேலும் பார்க்க

"என்னுடன் மோத தைரியம் இருக்கிறதா?'- ஹர்பஜனுக்கு சவால்விட்ட ஸ்ரீசாந்த்; மீண்டும் ஆரம்பமாகும் மோதல்

2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளார் ஶ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அறைந்தது, மிகப்பெரிய சர்ச்சை ஆனது. இதனால், ஹர்பஜனுக்கு 8 போட்டிகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டத... மேலும் பார்க்க

IND vs Pak: இந்தியா - பாகிஸ்தான் வீராங்கனைகளிடையே களத்தில் மோதலா? வைரல் வீடியோவின் உண்மை பின்னணி!

மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், நேற்று (ஜூன். 14) நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் பாகிஸ்தான் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது நடந்த... மேலும் பார்க்க

"நான் யார்ன்னு சொல்லியும் போலீஸ் என்ன அடிச்சாங்க" - வங்கதேச வீரர் பரபரப்புக் குற்றச்சாட்டு

வங்கதேச கிரிக்கெட் வீரர் நயீம் ஹசன், சட்டோகிராம் பகுதியில் தன்னை காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார். வங்கதேச கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ... மேலும் பார்க்க

'10 வயதில் சதம்' - அண்ணன் வைபவ் வழியில் மிரட்ட வரும் அடுத்த சூறாவளி ஆசீர்வாத் சூர்யவன்ஷி!

இந்திய கிரிக்கெட் உலகமே தற்போது இளம் புயலான வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் பார்த்து வியந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதற்குள்ளாகவே சூர்யவன்ஷி குடும்பத்தில் இருந்து இன்னொரு கிரிக்கெட் சூறாவளி உருவாகிவி... மேலும் பார்க்க

"தென்னாப்பிரிக்க அணியில் இப்படிப்பட்ட ஓர் இளம் வீரர் இல்லை.!" - சூர்யவன்ஷியை புகழ்ந்த டேல் ஸ்டேயின்

தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டேயின் இந்திய இளம் வீரர் சூர்யவன்ஷியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். நடந்து முடிந்த ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 15 வயது இளம் வீரரான சூர்யவன்ஷி,... மேலும் பார்க்க