அமெரிக்க - இரான் ஒப்பந்தம் : தனித்து விடப்படுகிறதா இஸ்ரேல்? | மணிவண்ணன் திருமலை
"என்னுடன் மோத தைரியம் இருக்கிறதா?'- ஹர்பஜனுக்கு சவால்விட்ட ஸ்ரீசாந்த்; மீண்டும் ஆரம்பமாகும் மோதல்
2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளார் ஶ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அறைந்தது, மிகப்பெரிய சர்ச்சை ஆனது.
இதனால், ஹர்பஜனுக்கு 8 போட்டிகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் இந்த விஷயம் தொடர்பாக ஹர்பஜன் சிங் வருத்தம் தெரிவித்திருந்தார்.

ஹர்பஜன் சிங்- ஸ்ரீசாந்த் இடையே தகராறு ஏற்பட்ட வீடியோவை லலித் மோடி, கடந்த ஆண்டு இணையத்தில் பகிர்ந்திருந்தது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.
தொடர்ந்து, இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, ஹர்பஜன் சிங் அண்மையில் ஒரு விளம்பரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஸ்ரீசாந்திடம் அவரும் ஹர்பஜனும் பாக்ஸிங் உடையில் இருக்கும் ஒரு பழைய புகைப்படம் காட்டப்பட்டிருக்கிறது.
அந்தப் புகைப்படத்தைப் பார்த்த பிறகு பேசிய ஹர்பஜன் சிங், " இதே காட்சியை நிஜத்தில் செய்ய உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? என்னுடன் பாக்ஸிங் ரிங்குக்குள் வர உங்களுக்கு துணிச்சல் உள்ளதா? ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உங்களால் வர முடியுமா?

ஹர்பஜனிடம்தான் நான் இதைக் கேட்கிறேன். அதே கையுறைகளை அணிந்து என்னுடன் மோத உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? நான் உங்களை அழைக்கிறேன்.
சுயமரியாதை இருந்தால், விளம்பரங்கள் செய்வதைத் தவிர்த்துவிட்டு களத்திற்கு வாருங்கள். உங்களுக்காகக் காத்திருக்கிறேன்” என்று சவால் விடுத்திருக்கிறார்.





















