செய்திகள் :

`சில நாய்கள் விசுவாசமாக இல்லை' - பிரிந்துசென்ற எம்.பி.க்கள் மீது எம்.பி. சஞ்சய் ராவத் சாடல்

post image

மகாராஷ்டிராவில் சிவசேனா(உத்தவ்) கட்சியை சேர்ந்த 6 எம்.பி.க்கள் தங்களை தனி அணியாக அறிவிக்கவேண்டும் என்று கோரி மக்களவை சபாநாயகரிடம் மனு கொடுத்து இருக்கின்றனர். இதனிடையே அவர்கள் 6 பேரும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர முடிவு செய்துள்ளனர். இதனால் உத்தவ் தாக்கரே கடும் அதிருப்தியில் இருக்கிறார்.

அவரது கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் இன்று காலை சமூக வலைத்தள பக்கத்தில் பிரிந்து சென்ற எம்.பி.க்களை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அவர் தனது பதிவில், ``சிலர் நாய்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் விசுவாசமாக இல்லை''என்று குறிப்பிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னதாக அவர் அளித்த பேட்டியில், கட்சி கொறடாவின் உத்தரவை 6 எம்.பி.க்களும் மீறி இருக்கின்றனர். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடங்கியுள்ளது.

கட்சி மாறிய எம்.பி.க்கள்

சிவசேனா தொண்டர்கள் என்று தங்களைக் கருதிக் கொண்டவர்கள் கோழைகள். சிவசேனா தொண்டர்கள் அவ்வளவு கோழைகள் அல்ல. இவர்கள் தங்களை சிவசேனா தொண்டர்களாக கருதுகிறார்கள். ஆனால் அவர்கள் ஜெய்ப்பூரில் மறைந்து கொண்டார்கள். அவர்களின் பதவியை பறிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது.

அவர்களை தகுதி நீக்கம் செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். மக்களவை சபாநாயகர் விதிகள், சட்டம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி செயல்பட்டால், இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். சிவசேனா 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

மேலும் பாலாசாகேப் தாக்கரேவின் பிறந்த நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. நாங்கள் எப்போதும் பாலாசாகேப் தாக்கரேயிடமிருந்து உத்வேகம் பெறுகிறோம். தீமை ஒழியும் வரை தொடர்ந்து போராடுவோம்" என்று அவர் கூறினார். சஞ்சய் ராவத் மீது ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டே கட்சியினர் கோபத்தில் இருக்கின்றனர். சஞ்சய் ராவத் தான் உத்தவ் தாக்கரேயின் கட்சியை நடத்துவதாக பரவலாக பேசப்படுகிறது.!

அமெரிக்க - இரான் ஒப்பந்தம் : தனித்து விடப்படுகிறதா இஸ்ரேல்? | மணிவண்ணன் திருமலை

மேனாள் ஆசிரியர், பிபிசி உலக சேவை, லண்டன்மணிவண்ணன் திருமலைமூன்று மாத அமெரிக்க - இரான் மோதல் அமெரிக்காவுக்கும், இரானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஆரம்ப கட்ட அமைதி ஒப்பந்தத்துடன் தற்காலிகமாக முடிவுக்கு வந்தி... மேலும் பார்க்க

`உத்தவ் கட்சி நிர்வாகிகள் எங்கள் கட்சியில் சேர காத்திருக்கிறார்கள்!' - ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை சேர்ந்த 6 எம்.பி.க்கள் திடீரென துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர்ந்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மக்களவை சப... மேலும் பார்க்க

TNPSC: `சூப்பர் சிங்கர், சரிகமப மூலம் என்ன மாற்றம் நடக்குது?' - குரூப் 1 நேர்காணலில் சுவாரஸ்யம்!

டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 1 தேர்வின் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.இதன் மூலம் துணை ஆட்சியர் உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய உயர் பதவிகளுக்கு பலரும் தேர்வாகியுள்ளனர்.பிரிலிமினரி, முதன்மைத் தேர்வு ... மேலும் பார்க்க

வேலுமணியிடன் உரசல்; எடப்பாடியின் கொங்கு கணக்கு... செந்தில் பாலாஜியின் மெளனம்! - பரபரக்கும் களம்!

செந்தில் பாலாஜி தி.மு.க-விலிருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க-வில் இணைவதாக கரூர் மாவட்டத்தில் பரவும் தகவலால், கரூர் மாவட்ட அரசியல் களத்தில் அனலடிக்கிறது. அவரைச் சுற்றி இப்படி வட்டமிடும் அதிரிபுதிரி தகவல... மேலும் பார்க்க

திருவாரூர்: அரசுப்பள்ளி வளாகத்தில் பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி! - வீடியோ வெளியாகி சர்ச்சை

தவெக-வின் மாவட்ட துணை செயலாளராக இருப்பவர் அகிலன். இவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குன்னலூர் ஊராட்சியை சேர்ந்த எக்கல் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ள... மேலும் பார்க்க

`என்னுடன் போட்டோ எடுக்க கெஞ்சினார்' - ட்ரம்பின் பேச்சால் கொதித்த மெலோனி காட்டமான பதிலடி!

சர்வதேச அரசியல் மேடையில் ஒரு புகைப்பட விவகாரம், அமெரிக்கா மற்றும் இத்தாலி ஆகிய இரு நட்பு நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது.பிரான்சில் நடந்த ஜி-7 உச்சிமாநாட்டின் போது, இத்தாலி பிரதமர்... மேலும் பார்க்க