செய்திகள் :

ஆண் நண்பருடன் சினிமா... மனைவியைக் கொன்று மூட்டைக்கட்டிய கணவன் - வேலூரில் கொடூரம்

post image

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள ராஜக்கல் கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (48), கார் டிரைவர். இவரது மனைவி தனலட்சுமி (36). இவர்களுக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், தனலட்சுமியின் நடத்தையில் விஜயகுமாருக்குச் சந்தேகம் ஏற்பட்டுவந்திருக்கிறது. இதுதொடர்பாக, மனைவியிடம் அடிக்கடி தகராறிலும் ஈடுபட்டுவந்திருக்கிறார் விஜயகுமார்.

தனலட்சுமி முதலில் ஷூ கம்பெனியில் வேலைக்குச் சென்றதாகவும், இப்போது பேரணாம்பட்டு டவுன் ஆமினா வீதியில் வீட்டு வேலை செய்துவந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களின் மூத்த மகள் அணைக்கட்டு பகுதியிலுள்ள விடுதியில் தங்கி பதினோராம் வகுப்புப் படித்துவருகிறார். மகளை வீட்டுக்கு அழைத்துவந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் விடுதிக்கு அழைத்துசென்று விட்டிருக்கிறார் தனலட்சுமி.

தனலட்சுமி

இதையடுத்து, ஆம்பூர் பகுதியிலுள்ள சினிமா தியேட்டருக்குச் சென்றிருக்கிறார். உடன் இரண்டாவது மகளும் இருந்திருக்கிறார். அப்போது அங்கு டிக்கெட்டுடன் சின்னவரிக்கம் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்ற ஆண் நண்பர் தனலட்சுமிக்காக காத்திருந்தார். தனலட்சுமியும், குமரேசனும் சமீபகாலமாக திருமணத்தை தாண்டிய உறவில் இருந்துவந்ததாகவும், இப்படி அடிக்கடி வெளியில் சந்தித்துக்கொள்வதை வழக்கமாக்கியிருந்தாகவும் சொல்லப்படுகிறது.

படம் பார்த்த பிறகு, ஆண் நண்பர் குமரேசன் ஆட்டோ பிடித்து தனலட்சுமியையும், அவரின் இரண்டாவது மகளையும் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அப்போது, `குமரேசன் வந்துபோனதை அப்பாகிட்ட சொல்லக்கூடாது’ என்று மகளிடம் கூறியிருக்கிறார் தனலட்சுமி. இது எப்படியோ கணவர் விஜயகுமாருக்குத் தெரிந்துவிட்டது.

ஏற்கெனவே, வேறொரு ஆண் நண்பருடனும் தனலட்சுமி நெருக்கமாக இருந்த விவகாரமும் விஜயகுமாருக்குத் தெரியும் என்பதால், மனைவி தனலட்சுமியின் நடவடிக்கைகள் அவருக்கு ஆத்திரத்தை மூட்டியது. இந்த நிலையில்தான் விஜயகுமாரின் வீட்டில் இருந்து நேற்றைய தினம் துர்நாற்றம் வெளியே வரத் தொடங்கியிருக்கிறது. தனலட்சுமியின் நடமாட்டம் வெளியில் இல்லாததையும், அவரின் கணவர் விஜயகுமாரின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கிடமாகவும் இருந்ததால் அக்கம், பக்கத்தினர் மேல்பட்டி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரியப்படுத்தினர்.

பரண்மீது மூட்டைக்கட்டி வைக்கப்பட்ட தனலட்சுமியின் சடலம்

போலீஸார் வந்து வீட்டுக்குள் சென்று சோதனையிட்டபோது, சமையலறை பரண்மீது ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. பரண்மீது சுருட்டி வைக்கப்பட்ட சாக்கு மூட்டையை கீழே இறக்கி பார்த்தபோது, அதில் தனலட்சுமியின் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ந்துபோயினர். கைகளின் மணிக்கட்டில் நரம்புகள் அரிவாளால் அறுக்கப்பட்டும், கால்கள் கட்டப்படும் படுகொலைச் செய்யப்பட்டிருந்தார் தனலட்சுமி. முகமும் சிதைந்துபோயிருந்தது.

இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக தனலட்சுமியின் உடலை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் போலீஸார் அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து கணவர் விஜயகுமாரையும் கைது செய்திருக்கின்றனர். கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளையும் போலீஸார் கைப்பற்றிய நிலையில், விஜயகுமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

"அவர்தான் நான் பெயிலாக காரணம்" - ஆசிரியரை பள்ளிக்குள் புகுந்து கத்தியால் குத்திய மாணவன்

மகாராஷ்டிரா மாநிலம் சாம்பாஜி நகரில் உள்ள லிட்டில் ப்ளவர் பள்ளிக்கு 17 வயது மாணவர் ஒருவர், தான் படித்ததற்கு சான்றிதழ் வாங்க வந்தார். அவர் நேரடியாக பள்ளி முதல்வர் அறைக்குச் சென்று தான் 2023ம் ஆண்டு வரை ... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணம் திருட்டு: "கழிவறையில் மறைத்து வைப்போம்" - விசாரணையில் பகீர் தகவல்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணத்தை எண்ணும்போது அதனைத் திருடியதாக உண்டியல் பணத்தை எண்ணும் பொறுப்பாளர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தி கோடிக... மேலும் பார்க்க

கேரளம்: லாட்ஜில் அறை எடுத்து குழந்தை பெற்ற பெண்; தாயும், சேயும் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், எடமுட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி (30). விவாகரத்தான இவர், கடந்த ஜூன் 27-ம் தேதி திருச்சூர் வெளியன்னூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எண் 108-ல் வாடகைக்கு தங்கியு... மேலும் பார்க்க

டெல்லி: ``2 நிமிடங்களில் முடிந்துவிடும்" - ஓடும் காரில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை முயற்சி

டெல்லியில் ஓடும் காரினுள்ளே 24 வயது இளம்பெண் ஒருவருக்கு, அவருக்குத் தெரிந்த நபரே பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்... மேலும் பார்க்க

கேரளம்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; கிரிக்கெட் பயிற்சியாளருக்கு 127 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கேரள மாநிலம், திருவனந்தபுரம் ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்தவர் எம்.மனு (40). கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்த இவரிடம் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் கிரிக்கெட் பயிற்சி பெறுவதற்காக ஒரு சிறுமி சென்றுள்ளார்... மேலும் பார்க்க

தருமபுரி: மனைவி, மகளை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை; திமுக பிரமுகரின் அதிர்ச்சிச் செயல்

தருமபுரியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் மனைவி, மகளை கொலை செய்துவிட்டு லாரி முன் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொலைரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்... மேலும் பார்க்க