செய்திகள் :

"டூரிஸ்ட் ஃபேமிலி ஃபர்ஸ்ட் ஷோ பார்க்கும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்துச்சு" - அபிஷன் ஜீவிந்த்

post image

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்வில் சிறந்த அறிமுக இயக்குநர் விருதை ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்துக்காக அபிஷன் ஜீவிந்த் பெற்றார்.

விருது பெற்று பேசிய அவர், “விகடன் விருதை தூக்கிப் பார்க்க வேண்டும் என எல்லாருக்கும் ரொம்ப ஆசை இருக்கும். இன்னைக்கு அதைத் தூக்கிட்டேன்.

அதுவும் என்னுடைய முதல் படத்துல இது நடந்திருக்கறது என நினைக்கும்போது மிகவும் சந்தோஷமா இருக்கிறது. அதுவும் சிவராஜ்குமார் சார் கையால வாங்கியிருக்கிறது இன்னும் எக்ஸ்ட்ரா சந்தோஷம்.

சிவராஜ் குமார் - அபிஷன் ஜீவிந்த்
சிவராஜ் குமார் - அபிஷன் ஜீவிந்த்

சார் எனக்காகத்தான் வந்தாங்க, அவருக்கு ரொம்ப நன்றி. இந்த விருது என்னோட லைஃப் டைம்ல மறக்க முடியாத ஒரு விருது. டூரிஸ்ட் ஃபேமிலி ஃபர்ஸ்ட் ஷோ பார்க்கும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

நாங்க எல்லாருமே பயந்துதான் உட்கார்ந்திருந்தோம். ஏன்னா மக்கள் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரியலை. ஆனா அந்த ஓப்பனிங் சீன், ராமேஸ்வரம் போர்ஷன் வந்த உடனேயே எல்லாரும் கைதட்ட ஆரம்பிச்சிட்டாங்க.

அங்க இருந்து கொஞ்சம் கொஞ்சமா அந்த கான்ஃபிடன்ஸ் வர ஆரம்பிச்சிருச்சு. படம் முழுவதும் மக்கள் ரியாக்ட் செய்ய ஆரம்பிச்ச உடனே எங்களுக்கு ரொம்ப நம்பிக்கை வந்துடுச்சு.” என்றார்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள், 2025
ஆனந்த விகடன் சினிமா விருதுகள், 2025

"அவர் நிஜமான 'ஜனநாயக'னாக வர வேண்டும் என மக்கள் விரும்பினார்கள்!" - 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் கே.வி.என்

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் நாளை மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த 'பகவந்த் கேசரி' படத்த... மேலும் பார்க்க

``போராடுபவர்களுக்கு லத்திகளும் மௌனமுமே பதிலாய்க் கிடைத்தன" - நடிகை அபிராமி ஆதங்கம்!

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர... மேலும் பார்க்க

"நான் வேலையில்லாமல் வீட்டுல இருக்கேன்; எனக்கு வேலை கொடுங்க" - வடிவுக்கரசி ஆதங்கம்

அர்ஜுன் தாஸ் நடித்திருக்கும் 'கான் சிட்டி' திரைப்படத்தின் 25-வது நாள் விழா இரண்டு நாள்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்பேசிய நடிகை வடிவுக்கரசி, "இந்தப் படத்தில் நடித்திருந்த அனைவரும... மேலும் பார்க்க

National Awards: "விருது அறிவித்த பிறகே Sound Designer-க்குத் தெரிந்தது!" - 'ப்ளூ' இயக்குநர் பேட்டி

2024-ம் ஆண்டுக்கான 72 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவித்ததில் இந்த முறை 10 தேசிய விருதுகளை தமிழ் சினிமா பெற்றிருக்கிறது. அதில் 'ப்ளூ' என்ற குறும்படத்தின் ஒலி வடிவமைப்புக்கு (டி.எஸ்.ஹரிஹரசுதன்) கிடைத... மேலும் பார்க்க

Kajal Aggarwal: ``தென்னிந்திய சினிமாவிலிருந்து பாலிவுட் இதைக் கத்துக்கணும்" - நடிகை காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். பாலிவுட்டில் 'சிங்கம்', 'தோ லஃப்சோன் கி கஹானி' போன்ற படங்கள் மூலம் நல்ல வரவேற்பை... மேலும் பார்க்க

''ஜன நாயகன்' லீக் குறித்து விஜய் ஏன் பேசவில்லை?' - அ. வினோத் அளித்த பதில் என்ன?

அ. வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜன நாயகன்' படம் பல தடைகளுக்குப் பிறகு வரும் ஜூலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் அ. வினோத் செய்தியாளர்கள... மேலும் பார்க்க