செய்திகள் :

'டெல்லியில் அரங்கேறும் காட்சிகள்... வலி நிறைந்த நினைவுகளை கண்முன் நிறுத்துகிறது'- ஸ்டாலின்

post image

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் மாணவர் அமைப்புகள் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

ஆனால் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்த சிஜேபி அமைப்பிற்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். டெல்லி முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் இன்று காலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயக்கப்பட வேண்டிய 254 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்

போராட்டம் நடத்த குவிந்து வரும் இளைஞர்களை காவல்துறை உடனுக்குடன் கைது செய்து வருகின்றனர். சிஜேபிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று பெசன்ட் நகரில் போராடிய இளைஞர்களையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாகப் பதிவிட்டிருக்கிறார்.

"இன்று டெல்லியில் அரங்கேறி வரும் நிகழ்வுகளும், அமைதிவழியில் போராடுபவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளும், நான் அனுபவித்த நெருக்கடிநிலைக் காலத்தின் வலிமிகுந்த நினைவுகளை மீண்டும் கண்முன் கொண்டுவருகின்றன.

தில்லியிலும் நாடு முழுவதிலும் கைது செய்து வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள், மாணவர்கள், போராடும் இளைஞர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் போராடும் மாணவர்கள் மீது, பாஜகவின் கிளையாகச் செயல்பட்டுக்கொண்டு, காவல்துறை அடக்குமுறையை ஏவிவிடும் தவெக அரசையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்

அமைதிவழியில் போராடுவதற்கான தங்களது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தும் இளைஞர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். எதிர்ப்பை வெளிப்படுத்துவது குற்றமல்ல. ஜனநாயகத்தைக் காப்பதற்காக எழும் குரலை ஒடுக்குவது ஜனநாயகத்தையே அழித்துவிடும்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதில் எந்தச் சமரசத்துக்கும் இடமில்லை. அவர் பதவி விலகுவதோடு மட்டுமல்லாமல், தேர்தல் ஆணையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து பாதிப்புகளும் சரிசெய்யப்பட்டு, அதன் சுதந்திரமும் நேர்மையும் மீட்டெடுக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தி இருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

"கடந்த திமுக ஆட்சியில் ஸ்டாலின் பாஜகவை எதிர்த்து பேசியிருக்கிறாரா?" - அமைச்சர் நிர்மல்குமார்

மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, "கடந்த 5 வருடங்களில் ஸ்டாலினும், உதயநிதியும் ஒரு நாளாவது பாஜகவையோ இல்லை மோடியை எதிர்த்தோ பேசியிருக்கிறார்களா? அவர்கள் எப்போது ப... மேலும் பார்க்க

மதுராந்தகம்: 'தவெகவின் இடைத்தேர்தல் வெற்றிக்கு உதவிய பாமக?' - களத்தில் என்ன நடந்தது?

இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் என இரண்டு தொகுதிகளிலும் தவெக வென்றிருக்கிறது. இதில் மதுராந்தகம் தொகுதியை தவெக வெல்ல பாமகவின் நிலைப்பாடு ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. மதுராந்தகத்தில் த... மேலும் பார்க்க

அதிமுக: இடைத்தேர்தல் தோல்வி; உச்சத்தில் உட்கட்சி பூசல்–எஸ்.பி. வேலுமணியின் அடுத்த மூவ் என்ன?

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் த.வெ.க வெற்றி பெற்றது. கடந்த பொதுத்தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளிலும் வென்றிருந்த அ.தி.மு.க, இந்த தேர்தலில் இந்த தொகுதிகளை இழந்தது மட்ட... மேலும் பார்க்க

"தோற்றுப்போனவர்கள் ஏதாவது ஒரு விளக்கத்தைச் சொல்லத்தானே வேண்டும்" - இபிஎஸ்ஸுக்கு வைகோ பதில்

நடந்து முடிந்திருக்கும் இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் முதல்வர் விஜய்யின் தவெக வெற்றி வாகையைச் சூடியிருக்கிறது. திமுக இந்த இரண்டு தொகுதிகளிலும் இரண்டாம் பிடிக்க, அதிமுக மூன்றாவது இடத... மேலும் பார்க்க

"வீட்டிற்குச் செல்ல தோன்றவில்லை; முன்னாள் காதலனுடன் மனைவி சாட்டிங்" - லாலு பிரசாத் மகன் தேஜ் புகார்

பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் மகன் தேஜ் பிரதாப் தனது பெற்றோரிடமிருந்து விலகி இருக்கிறார். அதோடு தனது சகோதரர் தேஜஸ்வி யாதவுக்கு எதிராகவும் அரசியல் செய்கிறார். ஐஸ்வர்யா ராய் என்ற பெண்ணைத் திருமணம... மேலும் பார்க்க

அபிஜித் விமானத்தில் கைது; 30,000 போலீஸ் குவிப்பு; 250 ரயில்கள் ரத்து; என்ன நடக்கிறது டெல்லியில்?

சிறப்பு வாக்காளர் திருத்தம் என்று அழைக்கப்படும் எஸ்.ஐ.ஆர். திட்டத்தில் மோசடி செய்ததாகக் கூறி தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரி காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங... மேலும் பார்க்க