செய்திகள் :

ட்ரம்பின் 48 மணிநேர கெடு: 'எங்கள் நாட்டைக் காக்க ஒரு நிமிடம்கூட யோசிக்கமாட்டோம்' - ஈரான் அதிரடி

post image

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் ஆறாவது வாரத்திற்குள் நுழைந்துள்ளது.

இந்தப் போர் முடிவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.

ட்ரம்ப் பதிவு

இந்த நிலையில், நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானுக்கு 48 மணிநேர கெடு குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், "ஒப்பந்தம் மேற்கொள்ளவும், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கவும் ஈரானுக்கு 10 நாள் கால அவகாசம் கொடுத்திருந்தேன்.

நேரம் சென்றுகொண்டிருக்கிறது. இன்னும் 48 மணிநேரத்தில் அவர்கள் மீது நரகம் விழும்" என்று பதிவிட்டிருந்தார்.

ஈரானின் ஜெனரல் அலி அப்துல்லாஹி அலியாபாடி
ஈரானின் ஜெனரல் அலி அப்துல்லாஹி அலியாபாடி

ஈரான் பதில்

இந்தப் பதிவிற்கு ஈரானின் ஜெனரல் அலி அப்துல்லாஹி அலியாபாடி பதிலளித்துள்ளார்.

"ஈரான் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஏதாவது தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கில் உள்ள அனைத்து அமெரிக்காவின் ராணுவ சொத்துகள் மீதும், இஸ்ரேலின் கட்டமைப்புகள் மீதும் கடுமையான மற்றும் தொடர்ச்சியான தாக்குதல் நடக்கும்.

தொடர் தோல்விகளை ஒப்புக்கொண்ட பின்னர், ஆக்கிரமிப்பு மற்றும் போரைத் தூண்டும் மனப்பான்மை கொண்ட அமெரிக்க அதிபர் விரக்தி, பதட்டம் மற்றும் முட்டாள்தனமாக ஈரானின் உள்கட்டமைப்பு மற்றும் தேசிய சொத்துக்களைத் தாக்குவதாக அச்சுறுத்தியுள்ளார்.

அப்படி நடந்தால் ஈரானின் உரிமை மற்றும் தேசிய நலனைக் காக்க ஈரானின் ராணுவம் ஒரு நிமிடம்கூட யோசிக்காது" என்று கூறியுள்ளார்.

விதிமுறையை மீறிய வாகனங்களுக்கு பல லட்சம் அபராதம் - புதுச்சேரி போக்குவரத்து போலீசார் அதிரடி!

அதிவேகமாக வரும் வாகனங்களை கண்காணிக்கும் எஸ்.பி. ரட்சனா சிங்எஸ்பி தலைமையில் வாகனங்களில் அதிக ஒலியை எழுப்பும் ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டனஅகற்றப்பட்ட ஏர் ஹாரன்களை பார்வையிட்ட எஸ்பி அனுமதிக்கப்பட்ட அளவை விட... மேலும் பார்க்க

'டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு'- தொகுதி மறுவரையறை தோல்வி குறித்து ஸ்டாலின்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல்.17) மக்களவையில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதாவது, * பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வகை செய்யும் அரசியல் அமைப... மேலும் பார்க்க

ஓட்டு கேட்க கிளம்பிய நடிகை, கேட்டை திறக்காத தலைவர்; கட்சியில் சேர்ந்ததும் நடிகருக்குக் கிடைத்த கார்

வரும் வியாழக்கிழமை நடக்கவிருக்கிறது தமிழக சட்டசபைத் தேர்தல். ஆளும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒருபக்கமும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்பக்கமும்... மேலும் பார்க்க

கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்! - Drone Clicks

கிணத்துக்கடவு வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து மலுமிச்சம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் கிணத்துக்கடவு வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து மலுமிச்சம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் கிணத... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு; தோல்வியைத் தழுவிய தொகுதி மறுவரையறை மசோதா

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல்.17) மக்களவையில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதாவது, * பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வகை செய்யும் அரசியல் அமைப... மேலும் பார்க்க

"தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படாது, நான் கையெழுத்திட்டு தருகிறேன்"- அமித் ஷா வாக்குறுதி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடந்துவரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்தும், தொகுதி மறு சீரமைப்பு குறித்தும் கடந்த இரண்டு நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற விவாதத்... மேலும் பார்க்க