செய்திகள் :

"ட்ரம்ப் காயமின்றி தப்பிய செய்தி கேட்டு நிம்மதி அடைகிறேன்" - மோடி பதிவு

post image

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்குக் கண்டனம் தெரிவித்து இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மோடியின் பதிவு...

"அதிபர் ட்ரம்ப், முதல் பெண்மணி மற்றும் துணை அதிபர் ஆகியோர் வாஷிங்டன் டி.சி. ஹோட்டலில் நடந்த பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருந்து காயமின்றித் தப்பிய செய்தி கேட்டு நிம்மதி அடைகிறேன்.

அவர்கள் எப்போதும் நலமுடனும் பாதுகாப்புடனும் இருக்க எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடமே இல்லை... அத்தகைய செயல்கள் ஒருமனதாகக் கண்டிக்கப்பட வேண்டியவை" என்று பதிவிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்

நேற்று டின்னர் நிகழ்ச்சி ஒன்றில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஆனால், திடீரென்று அங்கே துப்பாக்கிச் சூடு நடக்க, ட்ரம்ப், மெலானியா என அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

ஆப்ரேஷன் லோட்டஸ்: ``துரோகி" - ஹர்பஜன் சிங் வீட்டுச் சுவற்றில் எழுதிய போராட்டக்காரர்கள்

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் 10 ராஜ்யசபா எம்.பி-க்களில் 7 பேர் திடீரென பா.ஜ.க-வில் இணைந்துள்ளதால் பஞ்சா... மேலும் பார்க்க

மணிப்பூர்: முதல்வர் வீட்டருகே அரங்கேறிய போர்க்களம்: 22 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கடந்த ஏப்ரல் 7-ம் தேதி மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தின் ட்ராங்லாபி பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, மணிப்பூ... மேலும் பார்க்க

"பாதுகாப்பு குறைப்பாடே இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம்" - ட்ரம்ப் பேச்சு

நேற்று வெள்ளை மாளிகையில் டின்னர் நிகழ்ச்சி நடக்கவிருந்தது. அதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப், அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆ... மேலும் பார்க்க

``லஞ்சப் பணத்தை எலிகள் தின்றுவிட்டன?" - அதிகாரியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட பீகார் அரசு அதிகாரியின் தண்டனையை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்றம், வழக்கின் முக்கிய ஆதாரமான பணத்தை 'எலிகள் தின்றுவிட்டன' என்ற விளக்கத்தைக் கேட்டு கடும் அதிருப்தியும்... மேலும் பார்க்க