செய்திகள் :

ட்ரம்ப் சொன்னது போல், ஈரான் மீது 'சக்திவாய்ந்த தாக்குதல்' நடத்தும் அமெரிக்கா; என்ன நடக்கிறது?

post image

ஜூலை 24-ம் தேதிக்குப் பிறகு, ஈரானும், அமெரிக்காவும் எந்த அறிவிப்புமின்றி தங்களுக்குள் தாக்குதலை நிறுத்திக்கொண்டன. அமைதியாக இருதரப்பிற்கும் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று அப்போது கூறப்பட்டது.

ஈரான் தாக்குதல்

ஆனால், இந்தத் தாக்குதல் நிறுத்தத்தை உடைத்து நேற்று முன்தினம் (ஜூலை 28), ஜோர்டனில் உள்ள அமெரிக்க படைத்தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

நேற்று முன்தினம் அமெரிக்காவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்தித்துக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்ப் பேச்சு

ஈரானின் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடியாக நேற்று (ஜூலை 29), அமெரிக்க செய்தி நிறுவனத்திடம் பேசும்போது ட்ரம்ப், "நாம் ஈரானைக் கடுமையாகத் தாக்கப் போகிறோம். அவர்களுக்குப் பலத்த அடியைக் கொடுக்கப் போகிறோம். அவர்கள் மிகக் கொடூரமான தாக்குதலைச் சந்திக்கப் போகிறார்கள்" என்று கூறியிருந்தார்.

சக்திவாய்ந்த தாக்குதல்

அதற்கு ஏற்ற மாதிரி நேற்று ஈரான் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளது அமெரிக்கா. இது குறித்து அமெரிக்காவின் ராணுவ படையில் ஒன்றான மத்திய கட்டளையகம் (CENTCOM) கூறுகையில்...

"அமெரிக்க நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு ஈரான் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதலைத் தொடங்கின.

மத்தியக் கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது நேற்று ஈரான் நடத்த முயன்ற தாக்குதலுக்குப் பதிலடியாகவே இநக்ச் சக்திவாய்ந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளது.

பஞ்சாப்பில் கொத்தமைடியாக இருந்த மகன்; 23 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் சேர்ந்த நெகிழ்ச்சி கதை!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பூமாலைப்பட்டி ஆனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி - சுந்தரி தம்பதியினருக்கு பிரகாஷ், பிரபு என இரு மகன்கள் இருந்தனர். இக்குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர்... மேலும் பார்க்க

எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் பதவி பறிப்பு – கோவை அதிமுக-வில் முற்றும் மோதல்?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க அரசிற்கு ஆதரவு அளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரின் கட்சி பதவிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற... மேலும் பார்க்க

"விஜய் என்னிடம் தொலைபேசி வாயிலாக பேசினார்"- காவிரி நீர் விவகாரம் தொடர்பாக டி.கே.சிவக்குமார்

காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான விவகாரமும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை திறப்பது தொடர்பான விவகாரமும் பேசுபொருளாகி இருக்கிறது.இந்நிலையில் டெல்லியில் இன்று (ஜூலை.29) கர்ந... மேலும் பார்க்க

'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை; மாநிலங்களவையில் நிறைவேறிய மசோதா!

'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் இன்று (ஜூலை.29) நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிற... மேலும் பார்க்க

'லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்'- அரசு அலுவலகங்களில் `இது' கட்டாயம்; தலைமைச் செயலர் உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், துறைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களில் “லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்” என்ற வாசகத்துடன் கூடிய அறிவிப... மேலும் பார்க்க