செய்திகள் :

தங்கத்தில் முதலீடு செய்திருக்கிறீர்களா? அது ஒரு 'மோசமான' முதலீடு: Warren Buffet - ஏன்? | Gold

post image

தங்கத்தின் மீது இந்திய மக்களுக்கு எப்போதும் தனி மோகம் உண்டு.

தங்கத்தை முதலீடாகவும், ஆத்திர அவசர நேரங்களில் அடமானம் வைக்க ஆபத்பாந்தவனாகவும் பார்க்கின்றனர்.

ஆனால், தங்கம் ஒரு மோசமான முதலீடு என்கிறார் முதலீட்டு ஜாம்பவான் வாரன் பஃபெட்.

அவரது கூற்றிற்கு மூன்று காரணங்களையும் அடுக்குகிறார் அவர்.
தங்கம்
தங்கம்

ஒன்று, தங்கம் எதையும் உற்பத்தி செய்யாது... வட்டியையோ, டிவிடென்டையோ தராது. ஒரு அவுன்ஸ் தங்கத்தை 100 ஆண்டுகள் வைத்திருத்தாலும், அது ஒரு அவுன்ஸ் தங்கமாகத் தான் இருக்கும்.

இரண்டாவது, பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தின் போது, மக்களுக்கு பயம் வரும்போது தான் தங்கம் விலை ஏறும்.

வாரன் பஃபெட்டைப் பொறுத்தவரை, பணம் பெருக்குவதில் மனிதனின் உணர்வுகள் கலந்திருக்கக் கூடாது.

மூன்றாவது, தங்கத்தினால் எந்தப் பயனும் இல்லை. சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுத்து அதை மீண்டும் பத்திரமாக மக்கள் தங்களது வீடுகளில் புதைத்து வைக்கிறார்கள்.

தங்கம் தொழிற்சாலைகளில் கூட பெரிதாக பயன்படுவதில்லை என்று கூறுகிறார்.

"ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தால், அந்த நிறுவனம் நல்ல பணம் செய்ய வேண்டும்.

அது மீண்டும் நிறுவனத்தின் வளர்ச்சியில் பணம் போட வேண்டும்.

பங்குதாரர்களுக்கு தக்க சன்மானம் வழங்க வேண்டும்".

- இது வாரன் பஃபெட்டின் கருத்து.

நீங்கள் தங்கம் பற்றிய வாரன் பஃபெட் கூற்று குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

மீண்டும் ஏறுமுகம்? ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,400 உயர்வு - இன்றைய தங்கம் விலை என்ன?|Gold Rate

தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 ஆகவும், பவுனுக்கு ரூ.2,400 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - வெள்ளி 'இந்த' விலையை தாண்டினால் '... மேலும் பார்க்க

'சின்ன சறுக்கலில்' தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 ஆகவும், பவுனுக்கு ரூ.160 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. தங்கம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,900 ஆகும்.தங்கம்இன்று ஒரு பவுன் ... மேலும் பார்க்க

Gold Rate: 'கொஞ்சூண்டு' உயர்ந்த தங்கம்; இன்றைய‌ தங்க விலை நிலவரம் என்ன?

தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30-வும், பவுனுக்கு ரூ.240-வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.தங்கம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,890 ஆகும்.தங்கம் இன்... மேலும் பார்க்க

Gold Rate: 'இனி அதிரடி தானோ?' - மீண்டும் ஏற்றத்தில் தங்க விலை; இன்றைய தங்க விலை என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.180-வும், பவுனுக்கு ரூ.1,440-வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை பவுனுக்கு ரூ.1.18 லட்சத்தை... மேலும் பார்க்க

'நோட்‌ பண்ணுங்கப்பா' - மீண்டும் ஒரு‌ ரவுண்டிற்கு காத்திருக்கும் தங்கம் விலை? தாறுமாறு ஏற்றமா?| Gold

ஜனவரி மாதத்தில் (2026) பவுனுக்கு ரூ.1.34 லட்சம் வரை சென்ற தங்கம் விலை, இப்போது ரூ.1.17 லட்சத்திற்கு கீழிறங்கி விற்பனையாகி வருகிறது.ஆனால், இனி தங்கம் விலை ஏறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சில காரணங்... மேலும் பார்க்க

ட்ரம்பிற்கு எதிராக தீர்ப்பு; 'எகிறிய' தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.260 ஆகவும், பவுனுக்கு ரூ.2,080 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது.Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்... மேலும் பார்க்க