செய்திகள் :

'ஒட்டுமொத்தமாக ஒரு மதத்தைப்பற்றி கூறவில்லை'- தி கேரளா ஸ்டோரி 2 சினிமா மீதான தடையை நீக்கிய ஐகோர்ட்!

post image

லவ் ஜிகாத்தை மையமாகக்கொண்டு வெளியான கேரளா ஸ்டோரி சினிமாவின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. 'தி கேரளா ஸ்டோரி 2 கோஸ் பியாண்ட்' என்ற திரைப்படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். உல்கா குப்தா, ஐஸ்வர்யா ஓஜா மற்றும் அதிதி பாட்டியா ஆகியோர் இந்த சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அந்த சினிமாவின் டீசர் வெளியான நிலையில் மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக்கூறி கண்ணூரைச் சேர்ந்த ஸ்ரீதேவ் நம்பூதிரி என்பவர் கேரளா ஸ்டோரி 2 சினிமாவுக்கு எதிராக கேரளா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பிப்ரவரி 27-ம் தேதி (நேற்று) கேரளா ஸ்டோரி 2 திரைப்படம் வெளியிடப்பட இருந்த நிலை கேரளா ஐகோர்ட் சிங்கிள் பெஞ்ச் நேற்று முன் தினம் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் உடனடியாக உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தனர்.

கேரள உயர்நீதிமன்றம்

மேல்முறையீட்டு வாதத்தில், படத்தின் டீசர் வெளியான 16 நாட்களுக்குப் பிறகு சினிமாவை தடைச்செய்ய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும். கேரளா ஸ்டோரி பார்ட் 1 திரைப்படம் தேசிய விருதுகளை வென்ற படம் என்றும், அதற்கு சி.பி.எஃப்.சி தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றும். படம் சில சமூக பேரழிவுகளைப் பற்றி பேசுகிறது. இந்த சினிமா கேரளாவை அவமதிக்கவில்லை. இது சமூக தீமைகளை ஊக்குவிப்பவர்களுக்கு எதிரான படம். ஒட்டுமொத்தமாக ஒரு மதத்தைப்பற்றி இந்த சினிமாவில் கூறவில்லை. மாறாக அதில் உள்ள ஒரு பகுதியினர் சமூக தீமைக்குப் பின்னால் உள்ளதைப் பற்றிதான் கூறுகிறது.

தி கேரளா ஸ்டோரி 2 சினிமா டீசர் காட்சி

படம் சமூக நல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் மற்றும் அரசியலமைப்பும் கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்கின்றன. படம் வெளியிடப்படாவிட்டால் பெரும் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் எனவும் தயாரிப்பாளர் தரப்பில் வாதிடப்பட்டது.  இந்த மனுவை ஐகோர்ட்டின் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் சுஷ்ருத் தர்மாதிகாரி மற்றும் பி.வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் சினிமாவை வெளியிட தடை விதித்த சிங்கிள் பெஞ்ச் உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதையடுத்து கேரளா ஸ்டோரி 2 சினிமா வெளியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

'ஒரு ராஜ்ய சபா சீட் உறுதி; மற்றவை...' - பேச்சுவார்த்தைக்கு பின் காங்கிரஸ்!

திமுகவின் தொகுதிப் பங்கீடு குழுவுடன் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறது.Congressஅதை தொடர்ந்து செல்வப்பெருந்தகை பேசியதாவது... மேலும் பார்க்க

StartUp சாகசம் 57: `உலகளாவிய சிறுதானியச் சந்தை; மதிப்புகூட்டி சாகசம் செய்யும் Even More Foods

Even More FoodsStartUp சாகசம் 57இந்தியாவின் அடுத்த பெரும் ஏற்றுமதி வாய்ப்புதமிழ் மண்ணில் வேரூன்றிய மரபு அறிவு இன்று உலகச் சந்தையில் பெரும் வாய்ப்பாக மாறி வருகிறது.பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இடைக்காட... மேலும் பார்க்க

Cuba: அமெரிக்கா உடன் இணைகிறதா கியூபா? - ட்ரம்ப் கொடுக்கும் அதிர்ச்சி ஹின்ட்

அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 'கிரீன்லாந்து' மீதிருந்த டார்கெட் சென்று, இப்போது 'கியூபா'விற்கு வந்திருக்கிறது போலும்.நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்‌ ட்ரம்ப். அப்போது அவரிடம்‌ அமெர... மேலும் பார்க்க

Congress: '39 லட்சியம்; 30 நிச்சயம்! - அறிவாலயம் வந்த காங்கிரஸ் குழு

திமுகவிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அறிவாலயம் வந்திருக்கிறது.Congதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச கடந்த நவம்பரில் கிரிஷ் சோடங்கர் தலைமையில் குழு ஒன்ற... மேலும் பார்க்க

அமெரிக்கா வசூலித்த வரி அந்தந்த நாட்டிற்கே திரும்புகிறதா? - ட்ரம்ப் புலம்பல் பதிவு

உலக நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த வரிகள் 'சட்டத்திற்குப் புறம்பானது' என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்தத் தீர்ப்பு கடந்த வாரம் வந்ததில் இருந்து உள்ளுக்குள்ளும், வெளியே... மேலும் பார்க்க

'அவர் இதை கடந்துதான் போக வேண்டும், அரசியலில் இது.!' - விஜய் - சங்கீதா விவகாரம் குறித்து அண்ணாமலை

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்திருக்கும் சம்பவம் பேசுபொருளாக மாறியிருக்கிறது. விஜய் - சங்கீதா இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்... மேலும் பார்க்க