செய்திகள் :

தங்கம் விலை ஏன் ஒரே நாளில் இரு முறை ஏறுகிறது? | வாசகர் கேள்விக்கு பதில் | Gold

post image

விகடன் இணையதளத்தில் தினமும் தங்கம் மற்றும் வெள்ளி விலை செய்தியை வெளியிட்டு வருகிறோம்.

கடந்த வாரத்தில் ஒரு நாள் அந்தச் செய்தி ஒன்றின்‌ கீழ், கமெண்டில், "எளிய மக்களுக்கு, இந்தத் தங்கம் வெள்ளி, ஒரே நாளில் இரண்டு முறை ஏறி, இறங்குவது, அதாவது இரண்டு முறையும் ஏறுவது, இறங்குவது எந்த அடிப்படையில் என்று விளக்கி ஒரு கட்டுரை போடலாமே?

இந்த விலையை நிர்ணயம் செய்வது யார்?

எதனால் இப்படி நிகழ்கிறது? இதற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பு இல்லையா?

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தங்க விற்பனை வராதா?" என்று கேள்விகளை அடுக்கி இருந்தார் ஒரு வாசகர்.

தங்கம்
தங்கம்
அவரது கேள்விகளுக்கான பதில்கள் இதோ...

ஒரே நாளில் தங்கம், வெள்ளி விலை இரண்டு முறை ஏறி, இறங்குவது ஏன்?

தங்கம், வெள்ளி விலை ஏற்ற, இறக்கங்கள் சர்வதேச சந்தைகளைப் பொறுத்து அமைகிறது. இதற்கும், இந்திய சந்தைக்கும் எந்தச்‌ சம்பந்தமும் இல்லை.

அமெரிக்காவின் சந்தை ஆரம்பம் ஆகும்போது, நமக்கு இரவு ஆகியிருக்கும். அதனால், அந்தச் சந்தையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து, நமக்கு காலையில் தங்கம், வெள்ளி விலை நிர்ணயமாகும்.

அடுத்தது, நம்முடன் சேர்த்து சில நாடுகளின் சந்தைகள் தொடங்கும்... சில நாடுகளில் 24 மணிநேரமும் சந்தை இருக்கும். அப்போது அந்தச் சந்தையில் ஏதேனும் ஒரு மாற்றம் இருந்தால், அது நம் சந்தையில் எதிரொலித்து தங்கம் விலை ஏறும், இறங்கும்.

இங்கே மாற்றம் என்று குறிப்பிடப்படுவது உலக அளவில் நடக்கும் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் ஆகும்.

ஒரு நாட்டில் மட்டும் மாற்றங்கள் ஏற்பட்டால், அது தங்கம், வெள்ளியில் பிரதிபலிக்காது.

ஒரு நாட்டில் நடக்கும் மாற்றம் உலக அளவில் பிரதிபலிக்கும் என்றால் மட்டும், அதையொட்டி தங்கம், வெள்ளி விலை மாறுபடும்.

தினமும் இரு முறை தங்கம் விலையில் மாற்றம் இருக்காது. ஏதேனும் பெரிய நிகழ்வுகள் நடக்கும்போது மட்டுமே, இந்த மாற்றம் இருக்கும்.

தங்கம்
தங்கம்

தங்கம் விலையை நிர்ணயம் செய்வது யார்?

தங்கம் விலை ஏற்ற, இறக்கங்கள், தங்கத்திற்கான தேவை, போக்குவரத்து செலவுகளைப் பொறுத்து அந்தந்த மாநிலங்களில் உள்ள தங்க நகை சங்கங்கள் தங்கம், வெள்ளி விலையை நிர்ணயிக்கும்.

தங்கம் விலையில் எதனால் மாற்றங்கள் நிகழ்கிறது? இதற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பு இல்லையா?

முன்னரே சொன்னதுபோல, தங்கம் விலை என்பது சர்வதேச நிகழ்வுகளைப் பொறுத்து அமைவது ஆகும். இதற்கு அரசாங்கத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தங்க விற்பனை வராதா?

தங்கம் விலை நிர்ணயம், தங்கம், வெள்ளி ஏற்றுமதி, இறக்குமதி அவற்றின் தரம் ஆகியவற்றின் நடைமுறைகள் அரசாங்கத்தின் வழிகாட்டுதல் படியே நடக்க வேண்டும்... நடக்கிறது... நடக்கும்.

தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களைப் பற்றி இன்னமும் விளக்கமாக தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

'சின்ன சறுக்கலில்' தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 ஆகவும், பவுனுக்கு ரூ.160 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. தங்கம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,900 ஆகும்.தங்கம்இன்று ஒரு பவுன் ... மேலும் பார்க்க

Gold Rate: 'கொஞ்சூண்டு' உயர்ந்த தங்கம்; இன்றைய‌ தங்க விலை நிலவரம் என்ன?

தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30-வும், பவுனுக்கு ரூ.240-வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.தங்கம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,890 ஆகும்.தங்கம் இன்... மேலும் பார்க்க

Gold Rate: 'இனி அதிரடி தானோ?' - மீண்டும் ஏற்றத்தில் தங்க விலை; இன்றைய தங்க விலை என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.180-வும், பவுனுக்கு ரூ.1,440-வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை பவுனுக்கு ரூ.1.18 லட்சத்தை... மேலும் பார்க்க

'நோட்‌ பண்ணுங்கப்பா' - மீண்டும் ஒரு‌ ரவுண்டிற்கு காத்திருக்கும் தங்கம் விலை? தாறுமாறு ஏற்றமா?| Gold

ஜனவரி மாதத்தில் (2026) பவுனுக்கு ரூ.1.34 லட்சம் வரை சென்ற தங்கம் விலை, இப்போது ரூ.1.17 லட்சத்திற்கு கீழிறங்கி விற்பனையாகி வருகிறது.ஆனால், இனி தங்கம் விலை ஏறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சில காரணங்... மேலும் பார்க்க

ட்ரம்பிற்கு எதிராக தீர்ப்பு; 'எகிறிய' தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.260 ஆகவும், பவுனுக்கு ரூ.2,080 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது.Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்... மேலும் பார்க்க

எதிர்பாராமல் 'இறங்கிய' தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 ஆகவும், பவுனுக்கு ரூ.640 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.2,160 உயர்ந்த தங்கம் விலை, இன்று கொஞ்சம் குறைந்துள்ள... மேலும் பார்க்க