செய்திகள் :

"தனது கலைத்திறமையால் மகிழ்வித்து வந்த சுந்தர்.சி இனி மக்களுக்கு சேவை ஆற்றுவார்"- வாழ்த்திய குஷ்பு

post image

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக்கட்சி சார்பில் மதுரை மத்தி தொகுதியில் இயக்குநர் சுந்தர் சி போட்டியிட இருக்கிறார்.

இந்நிலையில் சுந்தர் சி யை வாழ்த்தி நடிகையும், தமிழக பாஜக துணைத் தலைவருமான குஷ்பு தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "சுந்தர் சி தனது அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார்!

சுந்தர் சி
சுந்தர் சி

இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி, புதிய நீதிக் கட்சி சார்பில் மதுரை தொகுதியில் வேட்பாளராகக் களம் இறங்குகிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக, அதிமுகவின் 'இரட்டை இலை' சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார்.

மறைந்த அவரது தந்தை திரு. சிதம்பரம் பிள்ளை அவர்களின் ஆசியுடனும், 94 வயதாகும் அவரது தாயார் திருமதி. தெய்வானை சிதம்பரம் பிள்ளை, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் நல்வாழ்த்துகளுடனும் இந்தப் பயணத்தை அவர் தொடங்குகிறார்.

திரு. ஏ.சி. சண்முகம் அவர்களின் வழிகாட்டுதலில், கழகப் பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஆதரவோடு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணன் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்துத் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு, இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று எப்போதும் போல மக்களின் மனிதனாக இருப்பார்.

குஷ்பு
குஷ்பு

கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டு மக்களைத் தனது கலைத்திறமையால் மகிழ்வித்து வரும் அவர், தன்னை உருவாக்கிய மக்களுக்குத் தனது சிறந்த சேவையை ஆற்றுவார் என்பதில், அவரது மனைவி என்ற முறையில் நான் பெருமிதம் கொள்கிறேன்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

விதிமுறையை மீறிய வாகனங்களுக்கு பல லட்சம் அபராதம் - புதுச்சேரி போக்குவரத்து போலீசார் அதிரடி!

அதிவேகமாக வரும் வாகனங்களை கண்காணிக்கும் எஸ்.பி. ரட்சனா சிங்எஸ்பி தலைமையில் வாகனங்களில் அதிக ஒலியை எழுப்பும் ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டனஅகற்றப்பட்ட ஏர் ஹாரன்களை பார்வையிட்ட எஸ்பி அனுமதிக்கப்பட்ட அளவை விட... மேலும் பார்க்க

'டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு'- தொகுதி மறுவரையறை தோல்வி குறித்து ஸ்டாலின்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல்.17) மக்களவையில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதாவது, * பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வகை செய்யும் அரசியல் அமைப... மேலும் பார்க்க

ஓட்டு கேட்க கிளம்பிய நடிகை, கேட்டை திறக்காத தலைவர்; கட்சியில் சேர்ந்ததும் நடிகருக்குக் கிடைத்த கார்

வரும் வியாழக்கிழமை நடக்கவிருக்கிறது தமிழக சட்டசபைத் தேர்தல். ஆளும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒருபக்கமும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்பக்கமும்... மேலும் பார்க்க

கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்! - Drone Clicks

கிணத்துக்கடவு வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து மலுமிச்சம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் கிணத்துக்கடவு வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து மலுமிச்சம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் கிணத... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு; தோல்வியைத் தழுவிய தொகுதி மறுவரையறை மசோதா

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல்.17) மக்களவையில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதாவது, * பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வகை செய்யும் அரசியல் அமைப... மேலும் பார்க்க

"தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படாது, நான் கையெழுத்திட்டு தருகிறேன்"- அமித் ஷா வாக்குறுதி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடந்துவரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்தும், தொகுதி மறு சீரமைப்பு குறித்தும் கடந்த இரண்டு நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற விவாதத்... மேலும் பார்க்க