செய்திகள் :

'சபரிமலையில் கொள்ளையடித்த தங்கத்தை மரியாதையாக கொண்டு வையடா!' - பிரசாரத்தில் ஆவேசமான சுரேஷ் கோபி

post image

கேரளத்தில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் பாலக்காடு மாவட்டத்தில் நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி பிரசாரம் மேற்கொண்டார். மலம்புழா தொகுதி பா.ஜ.க வேட்பாளர் சி.கிருஷ்ண குமாரை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சுரேஷ்கோபி பேசுகையில், "மலம்புழா சட்டசபை தொகுதியில் கிருஷ்ண குமார் வெற்றிபெற்று வரவேண்டியது பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியின் தேவையை விட பாலக்காடு மக்களுக்கு அவசியமாகும். அதை உணர்ந்து அதிக வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றிபெற வைக்கவேண்டும். இரண்டு, மூன்றாம் இடங்களைக்கூட எதிர்த்து போட்டியிடுபவர்கள் பெறாத நிலையை நீங்கள் ஏற்படுத்த வேண்டும்.

பா.ஜ.க தேர்தல் பிரசாரத்தில் பேசிய சுரேஷ் கோபி

பா.ஜ.க கேரளத்துக்கு என்ன செய்தது என கேட்கிறார்கள். நீங்கள் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள், அதன்பிறகு 5 ஆண்டுகள் முடிந்த பின்னர் கேளுங்கள். ஒரு எம்.பி என்ற நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் தொகுதி மேம்பாட்டு நிதியான 10 கோடி ரூபாயில் 8.37 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் நான் எதுவும் செய்யவில்லை என்பதுபோன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள்.

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தேர்தல் பிரசாரம்

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கை நடத்துவது உயர்நீதி மன்றம் ஆகும். தங்கம் கொள்ளை விவகாரத்தில் ஆளும் சி.பி.எம் மற்றும் காங்கிரஸ் ஆகியவை அரசியல் விளையாடுகின்றன. ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். கே.சுரேந்திரன் மற்றும் ஷோபா சுரேந்திரன் போன்ற இரண்டு வித்துக்கள் (விதைகள்) கடந்தமுறை சட்டசபையில் இருந்திருந்தால், 'மிஸ்டர் சீப் மினிஸ்டர், சபரிமலையில் கொள்ளையடித்த தங்கத்தை மரியாதையாக இங்கே கொண்டு வையடா' என்ற குரல் கேட்டிருக்கும். அவர்கள் எப்படி பேசுவார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா. உங்களுக்கு புரிந்துகொள்ளும் விதமாக நான் பேசியுள்ளேன். கிருஷ்ணகுமாரை ஆதரிப்பதன் மூலம் என்னையும் நாட்டின் பிரதமரையும் நீங்கள் ஆதரிக்க வேண்டும்" என்றார்.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை எவை? - அறிவித்தது திமுக!

தமிழக சட்டபேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வரும் 30 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. ஸ்டாலின் - திமுகஇந்நிலையில் த... மேலும் பார்க்க

தலைமைச் செயலகத்தில் விஜய்! - தேர்தல் அதிகாரியுடன் சந்திப்பு; என்ன புகார் கொடுத்தார்?

தவெக தலைவர் விஜய், தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து மனு ஒன்றை கொடுத்திருக்கிறார். More details will be added..! மேலும் பார்க்க

`காங்கிரஸ் தொகுதியை கைப்பற்றி கம்யூனிஸ்ட்; தேமுதிக-வை கூல் செய்த முதல்வர்!' - பைனல் ஆன பட்டியல்!

காங்கிரஸ் கைவசம் உள்ள ஒரு தொகுதியை கம்யூனிஸ்ட் கைப்பற்றியுள்ளது. தே.மு.தி.கவுடனும் தொகுதியை இறுதி செய்துவிட்டது தி.மு.க தலைமை. இதனால், தி.மு.க கூட்டணியில் கட்சிகளுக்கான தொகுதிகள் பட்டியல் இன்று மாலை அ... மேலும் பார்க்க

"தனது கலைத்திறமையால் மகிழ்வித்து வந்த சுந்தர்.சி இனி மக்களுக்கு சேவை ஆற்றுவார்"- வாழ்த்திய குஷ்பு

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக்கட்சி சார்பில் மதுரை மத்தி தொகுதியில் இயக்குநர் சுந்தர் சி போட்டியிட இருக்கிறார்.இந்நிலையில் சுந்தர் சி யை வாழ்த்தி நடிகையும், த... மேலும் பார்க்க

பி.டி.ஆருடன் மோதும் சுந்தர்.சி! - மதுரை மத்தி தொகுதியின் அதிமுக கூட்டணி வேட்பாளரானது எப்படி?

நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி புதிய நீதி கட்சி சார்பாக போட்டியிட போவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சிக்கு இரண்டு தொகுதிகள்... மேலும் பார்க்க

நாமக்கல்: `தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும்'- தங்கமணிக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி

நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளரை மாற்றாவிட்டால் தேர்தல் வேலை செய்ய மாட்டோம் என எச்சரிக... மேலும் பார்க்க