செய்திகள் :

"திருமணமான ஆண் இன்னொரு பெண்ணுடன் உறவில் இருப்பது சரியா?" - குஷ்பு ஷாக்

post image

திருமணமான ஒருவர் வேறொருவருடன் 'லிவ்-இன்' உறவில் இருப்பது குற்றமல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், மனைவியுடன் கட்டாயப்படுத்தி உறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் விவாதத்தை கிளப்பி இருக்கின்றன.

இந்நிலையில் நடிகையும், தமிழக பாஜக துணைத் தலைவருமான குஷ்பு இந்தத் தீர்ப்புகள் குறித்த தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அலகாபாத் உயர் நீதிமன்றம்
அலகாபாத் உயர் நீதிமன்றம்

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " நீதிமன்றங்களின் இந்தத் தீர்ப்புகள் மனவேதனையையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது. சமூகத்தைப் பின்னோக்கி இழுத்து செல்வது போல இந்தத் தீர்ப்புகள் இருக்கின்றன.

நீதிமன்றங்கள் மற்றும் சட்டத்தின் மீது உள்ள மரியாதையுடன் சொல்கிறேன், பெண்களுக்கு இப்படிப்பட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டால், அவர்கள் நீதிக்காக எங்கே போவார்கள்?. இயற்கையான அல்லது இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு வேண்டாம் என்று சொல்ல ஒரு பெண்ணுக்கு உரிமை உண்டு.

அதேபோல ஒரு பெண் வேண்டாம் என்று சொன்னால், அதற்கு வேண்டாம் என்றுதான் அர்த்தம். ஆண்கள் அதை மதிக்க வேண்டும். கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்புணர்வாகவே கருதப்பட வேண்டும்.

மேலும், ஒரு ஆண் திருமணமான நிலையில் இருக்கும்போதே, இன்னொரு பெண்ணுடன் 'லிவ்-இன்' உறவில் இருப்பது சரியா? இந்த விதி ஆண்களுக்கு மட்டும்தானா அல்லது பெண்களுக்கும் இது பொருந்துமா? சட்டப்படி இது சரி என்றால், பிறகு ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?

குஷ்பு
குஷ்பு

பெண்களுக்கு வழங்கப்படும் நீதியில் சட்டம் இன்னும் கொஞ்சம் கூடுதல் அக்கறையுடனும், இரக்கத்துடனும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஒரு பெண்ணின் கண்ணியத்தையும் நேர்மையையும் பாதுகாக்க வேண்டியது சட்டத்தின் கடமை" என்று ஆதங்கத்துடன் பதிவிட்டிருக்கிறார்.

"தனது கலைத்திறமையால் மகிழ்வித்து வந்த சுந்தர்.சி இனி மக்களுக்கு சேவை ஆற்றுவார்"- வாழ்த்திய குஷ்பு

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக்கட்சி சார்பில் மதுரை மத்தி தொகுதியில் இயக்குநர் சுந்தர் சி போட்டியிட இருக்கிறார்.இந்நிலையில் சுந்தர் சி யை வாழ்த்தி நடிகையும், த... மேலும் பார்க்க

பி.டி.ஆருடன் மோதும் சுந்தர்.சி! - மதுரை மத்தி தொகுதியின் அதிமுக கூட்டணி வேட்பாளரானது எப்படி?

நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி புதிய நீதி கட்சி சார்பாக போட்டியிட போவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சிக்கு இரண்டு தொகுதிகள்... மேலும் பார்க்க

நாமக்கல்: `தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும்'- தங்கமணிக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி

நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளரை மாற்றாவிட்டால் தேர்தல் வேலை செய்ய மாட்டோம் என எச்சரிக... மேலும் பார்க்க

மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் 'இயக்குநர்' சுந்தர்.சி - புதிய நீதிக் கட்சி அறிவிப்பு

புதிய நீதிக் கட்சி சார்பாக வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் களமிறங்குகிறார் இயக்குநர் சுந்தர்.சி.இது குறித்து புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவத... மேலும் பார்க்க

புதிய ஆட்சி அமைந்த 'அடுத்த நாளே'... நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஒலி 'அதிரடி' கைது

2025-ம்‌ ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ம் தேதி நேபாளத்தில் 'Gen Z'யினர் போராட்டத்தைத் தொடங்கினர்.ஊழல், வேலைவாய்ப்பு இன்மையால் ஏற்கெனவே அதிருப்தியில் இருந்த இளைஞர்கள், அப்போது சமூக வலைதளங்களுக்குத் தடை விதி... மேலும் பார்க்க

இன்னும் மூன்று நாள்களில் பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க ரஷ்யா 'அதிரடி' முடிவு? காரணம் என்ன?

ஈரான் போர்... ஹார்முஸ் ஜலசந்தி மூடல் போன்ற சூழலில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பித் தான் இருக்கின்றன.ஆனால், ரஷ்யா இப்போது அதிர்ச்சி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.அதாவத... மேலும் பார்க்க