செய்திகள் :

இன்னும் மூன்று நாள்களில் பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க ரஷ்யா 'அதிரடி' முடிவு? காரணம் என்ன?

post image

ஈரான் போர்... ஹார்முஸ் ஜலசந்தி மூடல் போன்ற சூழலில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பித் தான் இருக்கின்றன.

ஆனால், ரஷ்யா இப்போது அதிர்ச்சி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

அதாவது வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரஷ்யாவில் இருந்து பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்படாது என்று முடிவு செய்யப்பட உள்ளது.

ரஷ்யாவின் துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.

அலெக்சாண்டர் நோவாக்
அலெக்சாண்டர் நோவாக்
இதனையடுத்து ரஷ்ய எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...

"ரஷ்யாவில் முன்னர் கணிக்கப்பட்ட விலையைத் தாண்டி பெட்ரோல் விலை செல்வதை தடுக்கவும்... ரஷ்யாவின் உள்நாட்டு தேவைக்கு பெட்ரோல் தொடர்ந்து இருக்கவும் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பெட்ரோல் ஏற்றுமதி தடை செய்வதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளதாவது.

ரஷ்ய அதிபர் புதினும் உள்நாட்டில் பெட்ரோல் விலை அதிகமாகக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

"திருமணமான ஆண் இன்னொரு பெண்ணுடன் உறவில் இருப்பது சரியா?" - குஷ்பு ஷாக்

திருமணமான ஒருவர் வேறொருவருடன் 'லிவ்-இன்' உறவில் இருப்பது குற்றமல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், மனைவியுடன் கட்டாயப்படுத்தி உறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல என்று மத்தியப் பிரத... மேலும் பார்க்க

மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் 'இயக்குநர்' சுந்தர்.சி - புதிய நீதிக் கட்சி அறிவிப்பு

புதிய நீதிக் கட்சி சார்பாக வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் களமிறங்குகிறார் இயக்குநர் சுந்தர்.சி.இது குறித்து புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவத... மேலும் பார்க்க

புதிய ஆட்சி அமைந்த 'அடுத்த நாளே'... நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஒலி 'அதிரடி' கைது

2025-ம்‌ ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ம் தேதி நேபாளத்தில் 'Gen Z'யினர் போராட்டத்தைத் தொடங்கினர்.ஊழல், வேலைவாய்ப்பு இன்மையால் ஏற்கெனவே அதிருப்தியில் இருந்த இளைஞர்கள், அப்போது சமூக வலைதளங்களுக்குத் தடை விதி... மேலும் பார்க்க

அன்று தமிழகமே திரும்பி பார்த்தது; இன்று `யாரும் கண்டுக்கலை' டாக்டர் கிருஷ்ணசாமி பொலிட்டிக்கல் கிராப்

முப்பது ஆண்டுகளுக்கு முன், அதாவது 1996ம் ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தவர் டாக்டர் கிருஷ்ணசாமி. இன்றோ 'யாரும் எங்களைத் திரும்பிப் பார்க்காததால், எங... மேலும் பார்க்க

`விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினோமோ?' - மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்!

அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தனியார் ஊடகத்தின் கலந்துரையாடலில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அம... மேலும் பார்க்க

நெதன்யாகு மீது கடும் கோபத்தில் ஜே.டி.வான்ஸ்: பின்னணியில் ஈரான் போர் - என்ன நடந்தது?

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து இரண்டு தகவல்கள் பரவலாக இருந்து வருகின்றன.ஒன்று, ஈரானின் உச்ச தலைவரை அகற்றிவிட்டால், ஈரான் மக்களே அங்கே ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்துவிடுவார்கள். அதனால், போர்‌ எளிதில் மு... மேலும் பார்க்க