மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் 'இயக்குநர்' சுந்தர்.சி - புதிய நீதிக் கட்சி அறிவிப...
`விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினோமோ?' - மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்!
அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் தனியார் ஊடகத்தின் கலந்துரையாடலில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், "தவெக உடன் கூட்டணி அமைப்பது குறித்த எந்த முயற்சியும் நாங்கள் எடுக்கவில்லை, அவர் எங்களுடன் வந்தால், அது எங்கள் வாக்குவங்கியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கருதுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து அதிமுகவுடனானக் கூட்டணி குறித்து பேசிய அவர், "அதிமுகவுடனான கூட்டணியே எங்களுக்கு பலம் சேர்க்கிறது. கூட்டணி கட்சிகளுடனான உறவு தமிழகத்தில் அவசியம்.
எனவே பாஜக, அதிமுகவுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதோடு மட்டுமின்றி சிறிய பிராந்திய கட்சிகளையும் இணைத்து செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தற்போது ஆளும் திமுக மீது எதிர்ப்பு அலை வீசுகிறது. இதனை என்னால் பார்க்க முடிகிறது.
இதனால் தமிழகத்தில் வலுவான பெரும்பான்மையுடன் எங்களின் கூட்டணி ஆட்சி அமைக்கும்" என்று அமித் ஷா தெரிவித்திருக்கிறார்.















