செய்திகள் :

நெதன்யாகு மீது கடும் கோபத்தில் ஜே.டி.வான்ஸ்: பின்னணியில் ஈரான் போர் - என்ன நடந்தது?

post image

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து இரண்டு தகவல்கள் பரவலாக இருந்து வருகின்றன.

ஒன்று, ஈரானின் உச்ச தலைவரை அகற்றிவிட்டால், ஈரான் மக்களே அங்கே ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்துவிடுவார்கள். அதனால், போர்‌ எளிதில் முடிந்துவிடும் - இதைக் கூறி தான் அமெரிக்க அதிபர் ட்ரம்பே ஈரான் மீதான 'உடனடி' போருக்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.

இன்னொன்று, ஈரான் மீதான இந்தப் போரில் அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸிற்கு உடன்பாடில்லை.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நெதன்யாகு
இதை உறுதி செய்வது போல, Axios செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஜே.டி.வான்ஸ், நெதன்யாகு தொலைபேசியில் உரையாடி இருக்கின்றனர்.

நெதன்யாகு மீது ஜே.டி.வான்ஸ் மிகவும் கோபப்பட்டு இருக்கிறார்.

"போருக்கு முன்னர், ஈரானில் எளிதாக ஆட்சி மாற்றம் நடந்துவிடும் என்று கூறினீர்கள்" என்று கோபப்பட்டு இருக்கிறார்.

முதலில், ஈரான் உடனான பேச்சுவார்த்தைக்கு வான்ஸை தான் முன்னிருத்தியிருக்கிறது இஸ்ரேல். இந்தச் சம்பவத்திற்கு பிறகு, வான்ஸைக் கண்டுகொள்வதில்லையாம்.

ஆனால், ஈரான் வான்ஸுடன் பேசத்தான் தயாராக இருக்கற்து என்று தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்க அதிகாரிகளும், வான்ஸ் தான் பேச்சுவார்த்தைக்கு சிறந்த நபர் என்று கூறுகிறார்கள்.

மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் 'இயக்குநர்' சுந்தர்.சி - புதிய நீதிக் கட்சி அறிவிப்பு

புதிய நீதிக் கட்சி சார்பாக வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் களமிறங்குகிறார் இயக்குநர் சுந்தர்.சி.இது குறித்து புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவத... மேலும் பார்க்க

புதிய ஆட்சி அமைந்த 'அடுத்த நாளே'... நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஒலி 'அதிரடி' கைது

2025-ம்‌ ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ம் தேதி நேபாளத்தில் 'Gen Z'யினர் போராட்டத்தைத் தொடங்கினர்.ஊழல், வேலைவாய்ப்பு இன்மையால் ஏற்கெனவே அதிருப்தியில் இருந்த இளைஞர்கள், அப்போது சமூக வலைதளங்களுக்குத் தடை விதி... மேலும் பார்க்க

இன்னும் மூன்று நாள்களில் பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க ரஷ்யா 'அதிரடி' முடிவு? காரணம் என்ன?

ஈரான் போர்... ஹார்முஸ் ஜலசந்தி மூடல் போன்ற சூழலில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பித் தான் இருக்கின்றன.ஆனால், ரஷ்யா இப்போது அதிர்ச்சி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.அதாவத... மேலும் பார்க்க

அன்று தமிழகமே திரும்பி பார்த்தது; இன்று `யாரும் கண்டுக்கலை' டாக்டர் கிருஷ்ணசாமி பொலிட்டிக்கல் கிராப்

முப்பது ஆண்டுகளுக்கு முன், அதாவது 1996ம் ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தவர் டாக்டர் கிருஷ்ணசாமி. இன்றோ 'யாரும் எங்களைத் திரும்பிப் பார்க்காததால், எங... மேலும் பார்க்க

`விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினோமோ?' - மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்!

அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தனியார் ஊடகத்தின் கலந்துரையாடலில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அம... மேலும் பார்க்க

ஈரான் போர்‌ குறித்து மோடி - ட்ரம்ப் போன் கால்; லைனில் 'எலான் மஸ்க்'கும்! - சர்ப்ரைஸ் ட்விஸ்ட்?

ஈரான் போர் தொடங்கி இன்றோடு ஐந்தாவது வாரம் ஆரம்பமாகிறது.ஈரான்‌ போர் குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) இந்திய பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தொலைபேசியில் உரையாடினார்.மோடி பதிவுஇந்த... மேலும் பார்க்க