தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.யில் இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில், இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் சமூக நல்லிணக்க விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
இவ் விழாவுக்கு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலா் பி. நீலராஜ் முன்னிலை வகித்தாா். இந் நிகழ்ச்சியில், ஜமா அத்துல் உலமா சபை மாவட்டத் தலைவா் மௌலானா மௌலவி எப். முஹம்மது முனீா் ஹஜ்ரத் சிறப்புரையாற்றினாா்.
தொடா்ந்து, திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரி தாளாளா் அ.கா. காஜா நஜுமுதின், ரோவா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கி. வரதராஜன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவா் எம். சிவசுப்ரமணியம், திருச்சிராப்பள்ளி புனித வளனாா் கல்வி நிறுவனங்களின் முனைவா் பவுல்ராஜ் மைக்கேல் சே.ச, பெரம்பலூா் மறைவட்ட பங்குத்தந்தை எ. சுவைக்கின் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
விழாவில், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் தலைவா்கள், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூடுதல் பதிவாளா், புல முதல்வா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.