செய்திகள் :

'தனிச் சின்னம் வேண்டாம்!'- ஒதுக்கபட்ட 4 தொகுதிகளிலும் உதயசூரியனில் போட்டியிடும் மதிமுக

post image

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28, தேமுதிக 10, விசிக 8, கம்யூனிஸ்ட்கள் தலா 5, கொமதேக 2, மதிமுக 4, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மமக-வுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் எஸ்டிபிஐ உட்பட சில சிறிய கட்சிகள் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் தலா ஒரு தொகுதியில் களமிறக்கப்பட உள்ளன.

அதேபோல மதிமுக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளில் 3 தொகுதிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர் ஆகிய தொகுதிகளில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

வைகோ
வைகோ

ஆனால் தற்போது மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளிலும் அக்கட்சி உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக மதிமுக தலைவர் வைகோ வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "2026, ஏப்ரல் திங்களில் நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மறுமலர்ச்சி தி.மு.கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான சீர்காழி (தனி) தொகுதியிலும் கழக வேட்பாளர் வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பதை தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

'அவரு போயி 2 வருசம் ஆச்சு சார்!' உள்துறை செயலாளருக்கு பதில் மணிப்பூர் கவர்னருக்கு கடிதம் எழுதிய தவெக

தவெக தலைவர் விஜய்யின் பாதுகாப்பில் தமிழக காவல்துறை அலட்சியமாக செயல்படுவதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால், ... மேலும் பார்க்க

"பாஜக-வின் டப்பா இன்ஜின் முன் திராவிட மாடல் சூப்பர் இன்ஜின் ஒரு போதும் தலைகுனியாது!" - ஸ்டாலின்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அதே போல், துறையூர் தொகுதி காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வேட்பாளர்... மேலும் பார்க்க

'கூட்டமே இல்லாத ஸ்டாலினின் ரோடு ஷோவுக்கு 2000 போலீஸ் பாதுகாப்பா?' - கொந்தளிக்கும் ஆதவ்!

தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்துக்கு தமிழக காவல்துறை முறையான பாதுகாப்பு வழங்கவில்லை எனக் கூறி தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் தலைமைச் செயலகத்தில் தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் மனு ஒன்றை அ... மேலும் பார்க்க

விசிக: ``யாருக்கு எப்போது எப்படி வாய்ப்பளிக்க வேண்டும் என்பது.!" - ஆளூர் ஷா நவாஸ் விளக்கம்!

நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸுக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்ப்படவில்லை. இதற்குப் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்படு வந்தத... மேலும் பார்க்க

'விஜய்யை பற்றியும் அவருடைய வேட்பாளரை பற்றியும் பேச மாட்டேன்' – இயக்குநர் சுந்தர்.சி

அதிமுக கூட்டணியிலுள்ள புதிய நீதிகட்சி சார்பாக மதுரை மத்திய தொகுதி வேட்பளாராக இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதற்காக இன்று மதுரைக்கு வந்திருந்த சுந்தர்.சி செய்தியாளர்களை சந... மேலும் பார்க்க