செய்திகள் :

``என் ஆதர்ச இயக்குநர் டி.ஆர்-க்கு பக்கத்தில் இருக்கிறார் கென்!" - நடிகை நளினி எமோஷ்னல்

post image

நடிகரும், இயக்குநருமான கென் இயக்கத்தில், கருப்பையா தயாரிப்பில் உருவானப் படம் யூத். இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடந்தது.

அதில் நடிகை நளினி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``நமது தயாரிப்பாளர் கருப்பையா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். மறைந்த பாடகர் எஸ்.பி.பி சாருக்குப் பிறகு, மூச்சு விடாமல் அத்தனை பேரின் பெயர்களையும் மறக்காமல் மேடையில் நன்றி சொன்ன பெருமை இவரையே சாரும். வாகினி பிரசாத், ஏவிஎம் போன்ற ஒரு பெரிய நிறுவனமாக உங்கள் தயாரிப்பு நிறுவனம் வளர வாழ்த்துகிறேன்.

கென் கருணாஸ்
கென் கருணாஸ்

சூரஜ் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அவருடைய படங்களைப் பார்க்கும்போதெல்லாம் அவரை ஒருமுறையாவது சந்திக்க மாட்டோமா என்று ஏங்கியிருக்கிறேன். அவரோடு நடிக்கும்போது, அந்தத் தொழில் மீது அவர் வைத்திருக்கும் பக்தியைக் கண்டு வியந்தேன். ஏதேனும் ஒரு சின்ன தவறு நடந்தால் கூட, ஒன் மோர் என்று கேட்டு அந்தத் தமிழ் வார்த்தைகளைச் சரியாகப் பேச அவர் காட்டிய ஆர்வம் எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. அவரைப் பார்த்த பிறகுதான் இந்தத் தொழிலின் மீது எனக்கும் பெரிய பக்தி வந்தது. இந்தப் படத்தில் அந்தப் பாத்திரத்தை அவரைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு அழகாகச் செய்திருக்க முடியாது.

தேவதர்ஷினி காமெடி என்கிற வட்டத்திற்குள்ளேயே இருந்த அவரை, 'நீங்களும் ஒரு கதாநாயகிதான், உங்களால் சாதிக்க முடியும்" என்று நம்பி, இயக்குநர் கென் அவருக்கு ஒரு அற்புதமான பாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். அதை அவர் மிக நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.

இந்தப் படத்தில் பணியாற்றிய இன்ஃப்ளூயன்சர்கள் இளைய கலைஞர்களைப் பார்த்து நான் மிரண்டு போனேன். 'நாம் நூறு படம் நடித்திருந்தாலும் இவர்களிடம் இருக்கும் வேகம் நம்மிடம் இல்லையே' என்று தோன்றியது.

நடிகை நளினி
நடிகை நளினி

எனக்கு எப்போதும் என் இயக்குநர் டி.ராஜேந்தர் சார் தான் ஆகச்சிறந்தவர். அவருக்குப் பக்கத்தில் வைத்துப் பார்க்கும் அளவிற்கு இன்று கென் வளர்ந்து நிற்கிறார். ஸ்கிரிப்ட் கையில் இல்லாமலேயே, பத்து பேருக்குப் பத்து விதமாக சொல்லிக் கொடுக்கும் அவரது அந்தத் திறமை அசாத்தியமானது. 'வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு' என்பதை கென் நிரூபித்துவிட்டார். இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கையாண்டு, எல்லோரையும் அன்பால் கட்டிப்போட்டு ஒரு அழகான படத்தை அவர் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் ஓர் அணில் போல நானும் பங்களித்ததில் பெருமை கொள்கிறேன்." எனத் தெரிவித்திருந்தார்.

Rashmika: `அமைதியான காலை, மதிய நேர நீச்சல், மாலை நேர டேபிள் டென்னிஸ்' - ரஷ்மிகா நெகிழ்ச்சி பதிவு!

டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என பிஸியாக இயங்கி வந்த நடிகை ரஷ்மிகாவும், தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகன் விஜய தேவரகொண்டாவும் நீண்ட காலக் காதலுக்குப் பிறகு அண்மையில் கரம்பிடித்தனர். பிரம்மாண்டமாக ... மேலும் பார்க்க

`சுவரொட்டியில் பார்த்தவரை நேரில் சந்தித்தேன்' - அனிஷ்மாவின் நீண்ட கால கனவை நனவாக்கிய சூர்யா!

சிறை படத்தின் மூலம் தமிழ் திரையுலகம் கடந்து பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருப்பவர் நடிகை அனிஷ்மா. சிறைப் பட வெற்றியைத் தொடர்ந்து, அவர் நடிப்பில் அடுத்து வெளியாகியிருக்கும் யூத் திரைப்படமும், அதி... மேலும் பார்க்க

Doraemon: விடைபெற்றார் அனிமேஷனுக்கு உயிர் கொடுத்த கலைஞன்! யார் இந்த சுடோமு ஷிபயாமா?

நமது பால்ய கால நினைவுகளை அழகாக்கிய அந்த நீல நிற மாயப் பூனையான டோரிமானின் (Doraemon) அனிமேஷன் உலகை உருவாக்கிய பிதாமகன் சுடோமு ஷிபயாமா (Tsutomu Shibayama) சமீபத்தில் தனது 84-வது வயதில் விடைபெற்றார். Tsu... மேலும் பார்க்க

கெணத்த காணோம்: "மக்களின் பிரச்னைகளை என் மூலம் சொல்லுங்கள்... காத்திருக்கிறேன்" - நடிகர் யோகிபாபு

நடிகர் யோகிபாபு நடிப்பில், மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'கெணத்த காணோம்'. இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனைத் தொ... மேலும் பார்க்க

KD:The Devil - சஞ்சய் தத்தின் `சர்கே சுனார்' பாடலுக்கு வலுக்கும் கண்டனங்கள்! ஆபாச வரிகளால் சர்ச்சை!

சமீபகாலமாக இந்தியத் திரையுலகில் திரைப்படங்களின் ப்ரோமோஷனுக்காகவும், வணிக வெற்றிக்காகவும் ஐட்டம் சாங்ஸ் என்று சொல்லப்படும் ஸ்பெஷல் நடனப் பாடல்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், ரசிகர்களைக் கவர... மேலும் பார்க்க

``இந்தச் சூழல் வந்தால், அன்றே பாடுவதை நிறுத்திவிடுவேன்" - மனம் திறந்து பேசிய ஸ்ரேயா கோஷல்

இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் தன் இன்னிசைக் குரலால் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல். இவர் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார... மேலும் பார்க்க