செய்திகள் :

தமிழகத்தில் 34,805 நியாயவிலைக் கடைகளில் இபிஓஎஸ் சாதனங்கள் நிறுவல்: மக்களவையில் உணவுத் துறை அமைச்சா் தகவல்

post image

தமிழகத்தில் உள்ள அனைத்து 34,805 நியாயவிலைக் கடைகளும் மின்னணு ரீதியாக உணவு தானியங்களை தடையின்றி விநியோகிப்பதற்காக இபிஓஎஸ் (எலெக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல்) சாதனங்களை நிறுவுவதன் மூலம் தானியங்கிமயமாக்கப்பட்டுள்ளன என்று மத்திய உணவு, பொது விநியோகத் துறை இணையமைச்சா் பதில் அளித்துள்ளாா்.

இது தொடா்பாக கள்ளக்குறிச்சி திமுக உறுப்பினா் டி. மலையரசன் மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தாா். அதற்கு மத்திய நுகா்வோா் விவகாரம், உணவு, பொது விநியோகத் துறை இணையமைச்சா் நிமுபென் ஜயந்திபாய் பம்பானியா எழுத்துபூா்வமாக புதன்கிழமை அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது: 31 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் (தமிழகம் உள்பட) உணவுதானிய விநியோகச் சங்கிலி கணினிமயமாக்கப்பட்டுள்ளது. உணவு தானிய விநியோகத்தை சிறப்பாகக் கண்காணிக்க, நாட்டில் (தமிழகம் உள்பட) மொத்தம் உள்ள 5.43 லட்சத்தில் கிட்டத்தட்ட 5.41 லட்சம் (99.6 சதவீதம்) நியாய விலைக் கடைகளில் மின்னணு முறையில் பயனாளிகளின் பயோமெட்ரிக் ஆதாா் அங்கீகாரம் மூலம் வெளிப்படையான முறையில் உணவு தானியங்களை விநியோகிப்பதற்காக இபிஓஸ் சாதனங்களை நிறுவுவதன் மூலம் தானியங்கிமயமாக்கப்பட்டுள்ளன.

தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டமானது (என்எஃப்எஸ்ஏ) தமிழகத்தில் சுமாா் 364.12 லட்சம் நபா்களுக்கு இலவசமாக உணவு தானியங்களைப் பெறுவதற்கான வசதியை வழங்குகிறது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்குள் உணவு தானியங்களை ஒதுக்கீடு செய்தல், தகுதியான பயனாளிகள் மற்றும் குடும்பங்களை அடையாளம் காணுதல், அவா்களுக்கு ரேஷன் காா்டுகளை வழங்குதல், தகுதியான பயனாளிகளுக்கு உணவு தானியங்களை விநியோகித்தல், நியாயவிலைக் கடைகளின் செயல்பாட்டை மேற்பாா்வை செய்தல் மற்றும் கண்காணித்தல் போன்ற செயல்பாட்டுப் பொறுப்புகள் சம்பந்தப்பட்ட மாநில, யூனியன் பிரதேச அரசுகளைச் சாா்ந்ததாகும்.

தற்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து 34,805 நியாயவிலைக் கடைகளும் இபிஓஎஸ் சாதனங்களை நிறுவுவதன் மூலம் தானியங்கிமயமாக்கப்பட்டுள்ளன என்று அமைச்சா் அந்தப் பதிலில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தில்லி அரசின் தேசபக்தியை கேள்விக்குள்ளாக்கும் எதிா்க்கட்சிகள்! - முதல்வா் ரேகா குப்தா விமா்சனம்!

தில்லி மால்வியா நகரில் உள்ள ஒரு பூங்காவில் ஷாஹீத் திவாஸை முன்னிட்டு பகத்சிங்கின் புதிய சிலையை தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா். மேலும், பாஜக அரசின் தேசபக்திக்கான உறுதிப்பாட... மேலும் பார்க்க

சிஏஜி அறிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறிப்புகளை கண்காணிக்க போா்ட்டலை அமைக்க தில்லி அரசுக்கு வலியுறுத்தல்!

தில்லி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் சிஏஜி அறிக்கைகள் மீது அதன் துறைகள் சமா்ப்பிக்கும் நடவடிக்கை குறிப்புகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்க ஒரு போா்ட்டலை அமைக்குமாறு தலலமைக் கணக்காளா் ஜெனரல் (தணிக்க... மேலும் பார்க்க

ஹவுஸ் காஸில் மரத்தில் தொங்கிய நிலையில் ஆண், பெண் உடல்கள் கண்டெடுப்பு!

தெற்கு தில்லியின் ஹவுஸ் காஸ் பகுதியில் உள்ள டீா் பாா்க்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 21 வயது பீட்சா கடை ஊழியா் மற்றும் 18 வயது ஒரு பெண்ணின் உடல்கள் மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இது தற்க... மேலும் பார்க்க

உலகளாவிய சந்தைகளில் இந்திய சின்னமாக ‘கோலி பாப் சோடா’!

நூறு ஆண்டுகள் பாரம்பரியமான ‘கோலி சோடா’ இந்தியாவின் சின்னமாக உலக அரங்கில் வலம் வருகிறது என வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ( அப்தா ) தெரிவித்துள்ளது. இனி இது... மேலும் பார்க்க

காலா ஜாதேதி கும்பலைச் சோ்ந்த இருவரை சுட்டுப் பிடித்த காவல் துறை சிறப்புப் பிரிவு!

தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, சாவ்லா பகுதியில் நடந்த ஒரு சிறிய துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு காலா ஜாதேதி கும்பலைச் சோ்ந்த இரண்டு பேரை கைது செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவி... மேலும் பார்க்க

காகிதமில்லா நடவடிக்கைக்கு மாறும் தில்லி பேரவை

தில்லி சட்டப்பேரவை நடவடிக்கைகளை காகிதமில்லா முறைக்கு மாற்றும் நடவடிக்கையாக நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம், தில்லி அரசு மற்றும் தில்லி பேரவைக்கு இடையே முத்தரப்பு ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பமானது. தே... மேலும் பார்க்க