செய்திகள் :

`தமிழகத்தில் 75 நாள்களில் 8 ஆணவ மரணங்கள்'- எவிடென்ஸ் அமைப்பு அதிர்ச்சி தகவல்!

post image

எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே புதுப்பாளையம் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த 20 வயது தலித் இளைஞர் பார்த்திபன் மற்றும் 16 வயது சிறுமி கடந்த ஜூன் 30-ஆம் தேதி தூக்கிட்ட நிலையில் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு முன்பாக, சிறுமியின் உறவினர்கள் பார்த்திபனை சாதி ரீதியாக தாக்கியதுடன், அவரது தாயாரையும் மிரட்டியதாகவும், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட போதிலும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் சம்பவம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே தாக்குதல் தொடர்பாக தகவல் இருந்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், நள்ளிரவில் பார்த்திபனின் தந்தை மாரிமுத்துவை அழைத்துச் சென்று குற்றவாளிகளை அடையாளம் காட்டுமாறு கூறியுள்ளனர். காவல்துறையின் இந்த நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த வழக்கை தற்கொலை வழக்காக மட்டும் கருதாமல், தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

தற்கொலை
தற்கொலை

அதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரத்தில் 17 வயது தலித் இளைஞரை காதலித்த 18 வயது இளம்பெண் கடந்த ஜூன் 15-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் உயிரிழந்த பிறகு, அவரது குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமலும், உடற்கூறாய்வு நடத்தாமலும் உடலை அவசரமாக தகனம் செய்துள்ளனர். இது சட்டத்தை மீறும் செயலாகும். உயிரிழப்பதற்கு முன்பு தனது பெற்றோர் தன்னை மிரட்டுவதாகவும், தற்கொலை செய்துகொள்ள வற்புறுத்துவதாகவும் அந்த இளம்பெண் தனது காதலனிடம் தெரிவித்திருக்கிறார்.

இந்த வழக்கில் சட்டவிரோதமாக சடலத்தை தகனம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்து, இந்த வழக்கையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

தமிழகத்தில் சாதியின் பெயரில் நடைபெறும் ஆணவக் கொலைகளைத் தடுக்க நீதியரசர் கே.என். பாஷா ஆணையத்திடம் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் ஆணவப் படுகொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும்.

ஆணவக் கொலை

பதின்பருவ காதல் தொடர்பான பிரச்னைகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க வட்டார அளவில் ஆலோசனை மற்றும் கவுன்சிலிங் மையங்களை உருவாக்க வேண்டும்.

மயிலாடுதுறை மற்றும் ஊரணிபுரம் ஆகிய இரு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதி கிடைக்க, வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உண்மையை வெளிக்கொணர வேண்டும். தமிழகத்தில் 75 நாள்களில் 8 ஆணவ மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தொடர்ந்து நடைபெற்று வரும் ஆணவ மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

'காமேனியின் இறுதிச் சடங்கிலேயே ஈரான் தலைவர்களை ஒழித்துவிட முடியும்'- ட்ரம்ப் பேச்சு; ஈரான் பதிலடி!

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி உயிரிழந்தார் ஈரானின் உச்சத் தலைவர் காமேனி. இவரது இறுதிச்சடங்கு ஈரானில் நேற்று (ஜூலை 4, 2026) முதல் ஜூலை 9-ம் தேதி வரை ஈரானில் நடைப... மேலும் பார்க்க

'அதிமுகவினரை தவெகவில் இணைப்போம் என்று சொல்வது அறமா? அவர்களிடமே கேளுங்கள்' - திருமாவளவன்

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம், 'அதிமுகவில் இருந்து தொடர்ந்து பலர் தவெகவில் இணைந்து வருவது' குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அவரது பதில்..."இது குறித்து இதுவரை அதிமுக பொதுச்ச... மேலும் பார்க்க

Jr NTR: "தமிழ்நாட்டில் இப்படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது!" - சீமான் கண்டனம்

டோலிவுட்டில், ஜூனியர் என்.டி.ஆர் - இயக்குநர் த்ரி விக்ரம் ஶ்ரீனிவாஸ் கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்தின் அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. இதன் அறிவிப்பு குறித்த பதிவில், இப... மேலும் பார்க்க

`நாங்க இருக்கவே கூடாதுன்னு நினைச்சாரு!’ - அமைச்சர் மரியவில்சன் தம்பி கொடுத்த `பகீர்’ ஸ்டேட்மென்ட்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற மரியவில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கிறார். இவரது உடன்பிறந்த தம்பியான ... மேலும் பார்க்க

`திரும்பத் திரும்ப அவகாசமா?’ - அடிதடி வழக்கில் அமைச்சர் மரியவில்சன் தரப்பிடம் கடுகடுத்த நீதிபதி

உருட்டுக்கட்டையால் தாக்கிய நிதியமைச்சர் மரியவில்சன்தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற மரியவில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் ந... மேலும் பார்க்க

தவெகவின் அடுத்த அரசியல் அதிரடி: அதிமுக, திமுக நிர்வாகிகள் இணைப்பு

சில நாள்களாக, அதிமுக சீனியர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள், பிற கட்சிகளின் நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருவது வழக்கமான காட்சிகளாக மாறி வருகிறது.நேற்றும் பனையூரில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில்... மேலும் பார்க்க