செய்திகள் :

`தமிழக முதல்வர் விஜய்யைப் போல செய்வாரா முதல்வர் ரங்கசாமி?’ - கேட்கிறார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி

post image

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், ``தமிழகம், கேரளம், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் முடிந்து, முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்று அரசுகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

ஆனால் புதுச்சேரியில் மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், 13-ம் தேதிதான் முதல்வருடன் இரண்டு அமைச்சர்கள் பதவியேற்றனர். அதற்குப் பிறகு 15 நாள்கள் கழித்துதான் மீதமிருந்த மூன்று அமைச்சர்கள் பதவியேற்றனர்.

முழுமையான அமைச்சரவை அமைந்துவிட்ட பிறகும், அவர்களுக்கு இன்னும் இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. அதேபோல சபாநாயகர் தேர்தலையும் இன்னும் நடத்தவில்லை. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பிற மாநில முதல்வர்கள்கூட சம்பிரதாயத்துக்காக பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துவிட்டனர்.

ரங்கசாமி, மோடி

ஆனால் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட யாரையும் இதுவரை சந்திக்கவில்லை. அதேபோல மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியையும், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவையும் பலவீனப்படுத்தும் பா.ஜ.க-வால், புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியை ஒன்றும் செய்ய முடியவில்லை.

பா.ஜ.க அவரைப் பார்த்து பயப்படுகிறது. பிரதமர் மோடிக்கு ரங்கசாமி சவால் விடுக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுக்கால ஆட்சியில் முதலமைச்சர் ரங்கசாமி பா.ஜ.க-வின் அடிமையாகச் செயல்பட்டார் என்று விமர்சனம் செய்திருந்தேன். இப்போது,  `இந்தமுறை என்னிடம் 11 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். பா.ஜ.க-வுக்கு நான் அடிமையில்லை’ என்ற ரீதியில்தான் முதலமைச்சர் ரங்கசாமியின் செயல்பாடுகள் இருக்கின்றன.

சபாநாயகர் பதவி தங்களுக்கு வேண்டும் என்பதுடன், முக்கிய இலாகாக்களை கேட்டும் முதலமைச்சர் ரங்கசாமிக்கு அழுத்த கொடுக்கிறது பா.ஜ.க. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் நடந்துகொள்கிறார் முதல்வர் ரங்கசாமி. புதுச்சேரி பா.ஜ.க முதல்வர் ரங்கசாமியிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலை நீடித்தால் புதுச்சேரி மாநிலத்துக்கு நல்ல விடிவுகாலம் வரும். சட்டப்பேரவைத் தலைவர் தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி அனுப்பிய கோப்புக்கு அனுமதி கொடுக்காமல், கவர்னர் கைலாஷ்நாதன் திருப்பி அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.

கவர்னர் கைலாஷ்நாதன் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக செயல்படுவதையே இது காட்டுகிறது. அத்துடன் தேர்வு செய்யப்பட்ட அரசு நிர்வாகத்தில் கவர்னர் தலையீடு இருப்பதையும் இது வெளிப்படுத்துகிறது. ஆனால் நிர்வாகத்தில் மக்கள் நலத் திட்டங்கள் முடங்கியுள்ளன. அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது.

நாராயணசாமி | புதுச்சேரி காங்கிரஸ்
நாராயணசாமி | புதுச்சேரி காங்கிரஸ்

தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஊழல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். அது போன்று சொல்வதற்குத் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தயாராக இருக்கிறாரா ? முதல்வர் ரங்கசாமி அரசு நிர்வாகத்தில் கவனத்தைச் செலுத்தாமல், வழக்கம்போல தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதனால் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. கடந்த வாரம் நடந்த அரசு விழாவில் விமான நிலைய விரிவாக்கம், ரயில் திட்டங்கள், சாலைத் திட்டங்கள் குறித்துப் பேசியிருக்கிறார் கவர்னர் கைலாஷ்நாதன்.

ஆனால் அதெல்லாம் அரசின் கொள்கை முடிவுகள். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதலமைச்சர்தான் அதுகுறித்துக் கூற வேண்டும். இதேநிலைதான் கிரண்பேடி கவர்னராக இருந்தபோதும் நீடித்தது. அதனால்தான் அப்போது நான் முதல்வராகப் போராடினேன்” என்றார்.

மீண்டும் பற்றி எரியும் நேபாள் - தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராகவே போராடும் Gen Z | என்ன காரணம்?

ஒரு தீப்பொறி ஒரு பெருங்காட்டை எரிப்பதற்கு போதுமானது என்பார்கள். அதுபோல, நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 25 வயது இளைஞர் ஒருவரின் தற்கொலை, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி, மக்கள் போராட்டத் தீயை மூட்டி... மேலும் பார்க்க

`இந்து ராஷ்டிரத்தால் யாருக்கும் ஆபத்தில்லை; நம் மூதாதையர் ஒன்றே'- ராம்தேவ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை

'இந்து ராஷ்டிரா' என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். "நம்... மேலும் பார்க்க

துணைவேந்தர் தேடல் : 'மாநில உரிமைகளைத் தமிழக அரசு தாரை வார்க்கக் கூடாது!' - அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான தமிழக அரசின் சட்டத் திருத்த முயற்சியை... மேலும் பார்க்க

`` `கொத்து புரோட்டா' என அநாகரிகமாகப் பேசுகிறார்; இது தொடந்தால்..!" - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``முதல்வர் விஜய் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய பேச்சுகள் அனைத்தும் உண்மைக்கு மாறாகவும், வழக்கைப் பாதிக்கக... மேலும் பார்க்க

ஈரான் Hitlist-ல் இருக்கும் தலைவர்கள்: ட்ரம்ப், நெதன்யாகு, மெலோனி... - ஈரானிய செய்தித்தாளின் லிஸ்ட்!

ஈரான், அமெரிக்கா இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது. இந்த நேரத்தில், ஈரானில் உள்ள 'ஹம்ஷஹ்ரி' என்னும் செய்தித்தாள் ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி காமேனியின் மரணத்திற்கு பழி தீர்க்க ஈரான் குற... மேலும் பார்க்க