செய்திகள் :

தமிழ்தாய் வாழ்த்திற்கு மூன்றாமிடம்: 'தவறு தொடருவதை அனுமதிக்கக் கூடாது' - இந்திய கம்யூனிஸ்ட்

post image

தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்ற நிகழ்வில் தமிழ்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது...

"முதலமைச்சர் பொறுப்பேற்கும் திரு சி.விஜய்க்கும், அரசு விழா மரபில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலிடம் பெற வேண்டும்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவில் தனிப் பெரும் கட்சியாக வந்த தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைக்காமல் ஆளுநர் இழுத்தடித்து வந்தார்.

விஜய்
விஜய்

குறுக்கு வழியில் ஆட்சியமைக்க பல்வேறு வழிகளில் நடந்த முயற்சிகளை முறியடிக்க, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் வெற்றி பெற்ற, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் கலந்தாலோசித்து வழங்கிய ஆதரவின் அடிப்படையில் இன்று (10.05.2026) தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டது.

அரசின் மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவும் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டு, வந்தேமாதரம், நாட்டுப் பண் முதல் இரு நிலைகளுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.

இது தமிழ்நாடு அரசு இதுவரை அரசு விழாக்களில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடுவது, நாட்டின் விடுதலைக்கு பிறகு இதுவரை கடைப்பிடித்து வரும் மரபாகும். “வந்தே மாதரம்” ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டதும் ஒரு மதச்சார்புடையதுமான அப்பாடல் என்பதால் தேசிய கீதமாக இருக்க முடியாது என விடுதலை இயக்கக் காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அர்லேகர் - விஜய்
அர்லேகர் - விஜய்

இந்த நிலையில், ஆளுநர் மாளிகை உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி நிரலில் “வந்தே மாதரம்” பாடலுக்கு முதலிடம் வழங்கி, தமிழை மூன்றாம் நிலையில் வைத்தது மரபை மீறிய செயலாகும்.

இந்தத் தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

இந்தத் தவறு தொடருவதை அனுமதிக்கக் கூடாது. நாளை (11.05.2026) சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்புக்காக கூடும் சட்டப் பேரவைக் கூட்டத்திலும், அனைத்து அரசு நிகழ்வுகள் விழாக்களிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதையும், நிறைவாக நாட்டுப் பண் இசைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசின் முதலமைச்சரையும், தாற்காலிக பேரவைத் தலைவரையும் கேட்டுக் கொள்கிறது".

`அப்பாவை அரசியலுக்கு வராதனு சொன்னார் எம்.ஜி.ஆர்; விஜய் சார் என்னை அரசியலுக்கு வரவச்சிட்டார்'- தினேஷ்

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவி ஏற்றுள்ள நிலையில், சமீபத்தில் தவெகவில் சேர்ந்த நடிகர் தினேஷிடம் பேசினோம்.``’நண்பன்’, ‘காவலன்’ படங்கள் வெளியான சமயங்களில் விஜய் டிவியில் டைரக்‌ஷன... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் `கடன்' குறித்த விஜய்-ன் குற்றச்சாட்டு; தங்கம் தென்னரசு பதில்!

'திமுக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு 10 லட்சம் ரூபாய் கோடி கடன்' என்று பதவியேற்பு விழாவில் குற்றம் சாட்டியிருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின், "'ரூபாய்... மேலும் பார்க்க

'மேலும் மேலும் நல்லது செய்யணும்' - விஜய் பதவியேற்பு விழாவில் கலைஞரின் பேத்தி கயல்விழி

இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மு.க.அழகிரியின் மகள்... கலைஞரின் பேத்தி கயல்விழி கலந்துகொண்டார். அங்கு தொலைகாட்சி சேனல் ஒன்றிற்க... மேலும் பார்க்க

``காங்கிரஸ் ஒரு ‘துரோகக் கட்சி’ கூட்டணிக் கட்சிகளை முதுகில் குத்துகிறது!" - பிரதமர் மோடி தாக்கு!

காங்கிரஸ் கட்சி தனது அரசியல் லாபத்திற்காகக் கூட்டணிக் கட்சிகளுக்குத் துரோகம் இழைப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது என்றும், மாநிலக் கட்சிகளின் தயவில் மட்டுமே அக்கட்சி உயிர் பிழைத்து வருகிறது என்றும் பி... மேலும் பார்க்க