500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட் இலவசம் தொடருமா? -...
தமிழ்நாட்டின் `கடன்' குறித்த விஜய்-ன் குற்றச்சாட்டு; தங்கம் தென்னரசு பதில்!
'திமுக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு 10 லட்சம் ரூபாய் கோடி கடன்' என்று பதவியேற்பு விழாவில் குற்றம் சாட்டியிருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின், "'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது" என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

ஸ்டாலினின் கருத்தை வழிமொழிந்து திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழ் நாட்டின் மாண்புமிகு முதல்வராக இன்று பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள்!
கழகத் தலைவர் அண்ணன் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நிதி நெருக்கடிகளையும் பேரிடர்களையும் திறம்படக் கையாண்டு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை இரட்டை இலக்க வளர்ச்சிக்குக் கொண்டு சென்றதைச் சான்றாகக் கொண்டு; மாநிலத்தின் கடனளவு அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பிற்குள்ளேயே இருப்பதையும் உணர்ந்து; தலைவர் அவர்கள் சுட்டிக்காட்டி இருப்பதைப் போல, 'நிதி இல்லை' போன்ற காரணங்களைத் தேடாமல் ஆக்கபூர்வமான நிர்வாகத்தில் கவனம் செலுத்தி தமிழ் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடுவதே சரியாக இருக்கும்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.














