செய்திகள் :

தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை MoU-க்கள், எத்தனை வேலைவாய்ப்புகள்? - தகவல் வெளியிட்ட அமைச்சர் கீர்த்தனா

post image

வருகிற நவம்பர் 25-ம் தேதி, தமிழ்நாட்டில் இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கவிருக்கிறது.

MoU வெறும் காகிதங்களாக நின்றுவிடாமல்..!

இதைச் சுட்டிக்காட்டி எக்ஸ் பயனாளர் ஒருவர் தமிழ்நாடு முதலமைச்சர் எக்ஸ் பக்கத்தை டேக் செய்து, “ஆறு மாதங்களுக்குள்ளாகவே மாநில அரசு இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவது வரவேற்கத்தக்கது.

அதே சமயம், முந்தைய மாநாட்டில் கையெழுத்தான ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் தற்போதைய நிலை குறித்த வெளிப்படையான முன்னேற்ற அறிக்கையை வெளியிடுவதும் அதே அளவு முக்கியமானது.

எக்ஸ் பயனாளர் பதிவு
எக்ஸ் பயனாளர் பதிவு

கையெழுத்தான ஒப்பந்தங்கள் வெறும் காகிதத்தோடு நின்றுவிடாமல், களத்தில் நிஜமான முதலீடுகளாக மாறி, திட்டங்கள் தொடங்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் உருவானால் மட்டுமே இதுபோன்ற மாநாடுகளுக்கு அர்த்தம் இருக்கும்.

இல்லையென்றால், இவை வெறும் விளம்பர நிகழ்வுகளாக மட்டுமே மாறிவிடும் அபாயம் உள்ளது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர்

அவர்களும் நிச்சயம் கலந்துகொள்வார் என்பதால், இந்தக் கேள்விகள் அவரையும் நோக்கியே எழுப்பப்படும்;

இது எதிர்க்கட்சிகளுக்குப் பேசுவதற்கு நல்ல வாய்ப்பாகவும் அமைந்துவிடும்” என்று பதிவிட்டிருந்தார்.

அமைச்சர் கீர்த்தனா பதில்

இதற்குப் பதிலளிக்கும் விதமாகத் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, “எங்களைப் பொறுத்தவரை, வெளிப்படைத்தன்மை என்பது ஏதோ பின்னாளில் யோசித்துச் செய்யப்படும் விஷயமல்ல; அது தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதி.

இந்தப் புள்ளிவிவரங்கள் ஆரம்பத்திலிருந்தே பொதுவெளியில் வெளிப்படையாகத்தான் உள்ளன. மாநாட்டிற்கு முன்பாக, ரூ.35,062 கோடி மதிப்பில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின; இதன் மூலம் 14,790 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

தொழில் முதலீடு
தொழில் முதலீடு

மாநாட்டில், 1,06,998 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.67,452 கோடி மதிப்பிலான 97 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஆக, மாநாடு வரை மொத்தமாக ரூ.1,02,514 கோடி மதிப்பில் 104 ஒப்பந்தங்கள் மூலம் 1,21,788 வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டன.

இன்றைய நிலவரப்படி, மொத்தமாக 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன; இவற்றின் மதிப்பு ரூ.1,14,811.91 கோடி மற்றும் இதன் மூலம் 1,32,771 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

முதலீட்டுத் தகவல்கள் 'இங்கு' இருக்கின்றன

இதுவரை கையெழுத்தான ஒவ்வொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்களும் — அதாவது நிறுவனத்தின் பெயர், முதலீட்டுத் தொகை மற்றும் எதிர்பார்க்கப்படும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்தும் — என்னுடைய சமூக வலைதளப் பக்கங்களிலும், ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ பக்கங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன.

வெளிப்படையான மற்றும் பொறுப்புணர்வு கொண்ட அரசை வழங்குவோம் என மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளார். அந்த வாக்குறுதியில் நாங்கள் உறுதியாக நிற்கிறோம்.

அமைச்சர் கீர்த்தனா பதிவு
அமைச்சர் கீர்த்தனா பதிவு

மக்களுக்கு இந்த வெளிப்படைத்தன்மையை வழங்குவது எங்கள் கடமை. தொழில்துறை கொள்கை என்பது அடிப்படையில் வேலைவாய்ப்புக் கொள்கைதான் என்று நாங்கள் நம்புகிறோம்.

நமது தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன எனும்போது, அந்த விவரங்களைப் பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

முதலீடுகளை வெறுமனே அறிவிப்பதோடு நின்றுவிடாமல், சாத்தியமான ஒவ்வொரு ஒப்பந்தத்தையும் களத்தில் திட்டங்களாகவும், பயனுள்ள வேலைவாய்ப்புகளாகவும் மாற்றுவதே எங்களது முழு நோக்கமாகும்” என்று பதிவிட்டுள்ளார்.

’அமைச்சர் விஜய் பார்த்திபனிடம் `உன் வேலையை பார்த்துட்டு போ' என்றேன்; மெய்காப்பாளன் வேலையை.!’ – வைகோ

கோவை டாடாபாத் பகுதியில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”விஜய் பார்த்திபன் அமைச்சரா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. முதல்வரை ஒழுங்குபடுத்தி அழைத்துச... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: சாலையில் பெருக்கெடுக்கும் கழிவுநீர்… துர்நாற்றத்தில் தவிக்கும் நம்புதாளை மக்கள்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், நம்புதாளை கிராமத்தில் ECR சாலையிலிருந்து கிராமத்திற்குச் செல்லும் வழியில் உள்ள 2-வது வார்டு பகுதியில், கடந்த சில மாதங்களாகக் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதாக அ... மேலும் பார்க்க

"விரைவான பதில்களை விட, வேகமான செயல்பாடு தான் சிறந்தது"- ஆந்திரா அமைச்சர் கிண்டலுக்கு கீர்த்தனா பதில்

தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பல முதலீடுகள் ஆந்திரா பக்கம் மடைமாறுவது சமீபத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஆந்திரா அமைச்சர் கிண்டல்இந்த நிலையில், நேற்று (நவம்பர் 20) ஆந்திரா அமைச்சர் லோகேஷ் நாரா தனது எக்ஸ... மேலும் பார்க்க

ரூஸ்வெல்ட் - சர்ச்சில் - ஜோசப் ஸ்டாலின் இடத்தில் ட்ரம்ப் - ஷி - புதின்? புதிய 'யால்டா'வா இது?

உலக அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வியாழக்கிழமை சீனாவின் ஷென்சென்னில் சந்தித்துப் பேசினர். ஆசிய-பசி... மேலும் பார்க்க

"காங்கிரஸ் இந்தியாவை ஏன் ஏழை நாடாகவே வைத்திருந்தது?" - காங்கிரஸிடம் கிரண் ரிஜிஜூ 4 கேள்விகள்

சீனாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் மூவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து நேற்று (நவம்பர் 20) மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ... மேலும் பார்க்க

பன்னூனைக் கொல்லச் சதி: இந்தியர் நிகில் குப்தாவுக்கு அமெரிக்காவில் 19 ஆண்டுகள் சிறை! - என்ன நடந்தது?

நியூயார்க்கில் காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கூலிப்படை ஏவிக் கொலை செய்யத் திட்டமிட்ட வழக்கில், இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தாவுக்கு (55) அமெரிக்க நீதிமன்றம் நேற்று (நவம்பர் 20... மேலும் பார்க்க