செய்திகள் :

``தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள், நயினார் நாகேந்திரன் அவர்களே..!" - அமைச்சர் ரமேஷ்

post image

"சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்? சட்டமன்றத்தில் தேடினால் எப்படி?" என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

நயினார் நாகேந்திரன் பேச்சுக்குக் கண்டனங்கள் வலுத்த நிலையில், அவர் தன் பேச்சுக்கு விளக்கம் அளித்திருந்தார். அதில், ``என் பேச்சைத் திரித்து சித்தரித்து, அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய்மொழி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவன் நான்" எனத் தெரிவித்திருந்தார்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

இந்த விளக்கத்தை ஏற்காத தவெக அமைச்சர்கள் தொடர்ந்து தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதன் அடிப்படையில், அமைச்சர் ரமேஷ் தன் எக்ஸ் பக்கத்தில், ``பெண்களின் பெருமையையும், தாயின் அருமையையும் அறியாத மூன்றாம் தர நபரைப் போல பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் பேசியிருப்பது அருவருப்பின் உச்சம்!

ஒரு அரசியல் கட்சியின் மாநிலத் தலைவராக மட்டுமல்ல, குறைந்தபட்சம் ஒரு சாதாரண மனிதரிடம் இருக்க வேண்டிய நாகரிகம் கூட இல்லாமல், தாய்மார்களும் பெண்களும் முகம் சுளிக்கும் வகையில் அவர் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. பெண்கள் மீதான அவரது தவறான பார்வை அவரது பேச்சில் தெளிவாக வெளிப்படுகிறது. அவர் சார்ந்த அரசியல் கட்சியும் பெண்களை இப்படித்தான் பார்க்கிறதா என்ற கேள்விக்கு, அக்கட்சியின் தேசியத் தலைவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும். தரக்குறைவான பேச்சுக்காக தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள் நயினார் நாகேந்திரன் அவர்களே." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

``நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து அருவருக்கத்தக்கது" - பாஜக நிர்வாகி குஷ்பு

"சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்? சட்டமன்றத்தில் தேடினால் எப்படி?" என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார்... மேலும் பார்க்க

நயினார் சர்ச்சை பேச்சு: ``வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது" - கொதிக்கும் அமைச்சர் கீர்த்தனா

"சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்? சட்டமன்றத்தில் தேடினால் எப்படி?" என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார்... மேலும் பார்க்க

"தமிழ்நாடு முழுக்கவே வம்பு இழுத்து வைத்திருக்கிறேன்!"- சொல்கிறார் அமைச்சர் பிரபு

பாரம்பர்ய அரசியல் குடும்பத்திலிருந்து த.வெ.க-வுக்குள் அடியெடுத்துவைத்த டாக்டர் து.க.பிரபு, காரைக்குடி தொகுதியில் நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராகப் போட்டியிட்டு வென்று, அமைச்சராகவும் பொ... மேலும் பார்க்க

'தாய் மீதும், தாய் நாட்டின் மீதும்...' - முதல்வர் குறித்த சர்ச்சைப் பேச்சுக்கு நயினார் விளக்கம்

"சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்? சட்டமன்றத்தில் தேடினால் எப்படி?" என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார்... மேலும் பார்க்க

"திமுக - அதிமுக கூட்டணிக்கு எந்தக் காலத்திலும் வாய்ப்பில்லை" - திமுக எம்.பி கனிமொழி பளீச்

அதிமுக - திமுக கூட்டணி என்பது எந்தக் காலத்திலும் வாய்ப்பு இல்லாதது எனத் திமுக எம்.பி கனிமொழி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.திமுக எம்.பி கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். செய்தியாள... மேலும் பார்க்க

'டார்கெட் வட இந்தியா; பிரண்ட்லி பாமக; கலக்கத்தில் அமைச்சர்' - முதல்வரின் சுதந்திர தின விழா ஹைலைட்ஸ்!

ஜார்ஜ் கோட்டையில் முதல் முறையாகக் கொடியேற்றியிருக்கிறார் முதல்வர் விஜய். கொடியேற்றிய கையோடு அவர் ஆற்றிய உரையிலும் அந்த விழாவிலும் அத்தனை பொலிட்டிக்கல் மெசேஜ்கள் இருந்தன. அவற்றின் ஹைலைட்ஸ் இங்கே.CM Vij... மேலும் பார்க்க