செய்திகள் :

தருமபுரி: 'கருவில் உள்ளது ஆணா? பெண்ணா?' - வீட்டிலேயே சட்டவிரோத ஸ்கேன் செண்டர்; இருவர் கைது

post image

வீட்டிலேயே சட்டவிரோத ஸ்கேன் செண்டர் நடத்தி கருவின் பாலினம் கண்டறிந்து சொன்ன இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மேக்கலாம்பட்டி கிராமத்திலலுள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக ஸ்கேன் செண்டர் நடத்தி கர்ப்பிணிகளுக்கு கருவின் பாலினம் கண்டறிந்து சொல்வதுடன் பெண் குழந்தை வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு கருக்கலைப்பு செய்ய ஏற்பாடு செய்யும் கும்பல் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறை அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அலுவலர் தலைமையிலான மருத்துவக் குழுவினர், நேற்று மதியம் பாலக்கோடு அருகே மேக்கலாம்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டிற்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது இவர்களைப் பார்த்ததும் கர்ப்பிணிகளுக்கு கருவின் பாலினம் கண்டறிந்து சொல்லும் நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். வீட்டினுள் கருவிலுள்ள குழந்தையின் பாலினம் கண்டறியும் கருவி இருப்பதை மருத்துவக் குழுவினர் கைப்பற்றினர்.

நடவடிக்கை எடுத்த சுகாதாரத்துறையினர்

பாலினம் கண்டறிந்து சொல்ல ஒரு நபருக்கு 17 ஆயிரம் ரூபாய் வாங்கியதும், கர்ப்பினிகளை வீடு தேடிச் சென்று அழைத்து வர ஏஜெண்டுகள் செயல்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்தச் சட்ட விரோத ஸ்கேன் செண்டரை நடத்திய அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு, பென்னாகரம் அருகே ரங்காபுரத்தைச் சேர்ந்த செவிலியர் பரிமளா ஆகியோரை பாலக்கோடு போலீசார் மூலம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

இதில், பரிமளா மீது பாலினம் கண்டறிந்தது சொன்னதாக ஏற்கனவே 2 வழக்குகள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

மேலும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சட்டவிரோத ஸ்கேன் செண்டர்கள் மூலம் கருவின் பாலினம் கண்டறிந்து சொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

தொடர் குற்றங்களால் `ஜாமீன்’ ரத்து; பிரபல ரௌடி ஜானி வேலூர் சிறையிலடைப்பு

வேலூர் மாவட்டத்தைக் கடந்த 15 ஆண்டுகளாக அலறவிடும் `ஏ பிளஸ்’ ரௌடிகளில் ஒருவர் ஜானி என்கிற ஜான் பால்ராஜ். காட்பாடி அருகேயுள்ள வண்டறந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ஜானி மீது கொலை, ஆள் கடத்தல், மிரட்டி பணம் பற... மேலும் பார்க்க

ரூ.5 கோடி லஞ்சம் வாங்கினாரா இன்ஸ்பெக்டர்?”-தனியார் மருத்துவமனை விவகாரம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை!

தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுமாறன். இவர் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா நகரில் வசித்து வருகிறார். தனியார் மருத்துவமனை விவகாரத்தில் அதன் நிர்வாக இயக்குநரிடம் ரூ.5 கோடி லஞ்ச... மேலும் பார்க்க

"பொது மயானத்தில் புதைத்தால் வேலை தர மாட்டோம்" ஈரோடு இளைஞரின் சாதி ஆணவ பேச்சு! என்ன நடந்தது?

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகில் உள்ள பெரும்பாளி கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமுதாய மக்களை அருகில் உள்ள பொது மயானத்தை பயன்படுத்த விடாமல் தீண்டாமை காரணமாக ஆதிக்க சாதியினர் தடுத்து வந்துள்ளனர். சாதிய ... மேலும் பார்க்க

பரமக்குடி: `பல பெண்களுடன் தொடர்பு; மனைவியைத் தாக்கி சித்ரவதை’ - DSP ஜாபர் சித்திக் சிறையிலடைப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி டி.எஸ்.பி-யாக இருந்த ஜாபர் சித்திக், முன்னதாக 2020-ம் ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு மூலம் காவல் பணிக்கு நேரடியாகத் தேர்வானாவர். தஞ்சாவூர் மாவட்டம் திர... மேலும் பார்க்க

சேத்துப்பட்டு: விடுதி வார்டன் போக்சோவில் கைது; மாணவனின் பாலியல் புகாரில் திடீர் திருப்பம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகேயுள்ள ஒரு தனியார் விடுதியில் 110 மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இதில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது மாணவனும் தங்கி, அங்குள்ள தனியார் பள்ளி... மேலும் பார்க்க

இரண்டாவது திருமணத்திற்கு எதிர்ப்பு; மகளுக்கு பிரியாணியில் விஷம் வைத்த அப்பா

மும்பை வடாலாவில் வசிப்பவர் ஷெரீப் கான். கார்பெண்டரான ஷெரீப் மனைவி கடந்த ஆண்டு புற்று நோய் காரணமாக இறந்து போனார். இதையடுத்து தனது மகள்கள் ரிஃபாத்(20), நுஜாத்(16) மற்றும் 10 வயது மகன் அகமது ஆகியோருடன் வ... மேலும் பார்க்க